என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கும்பகோணத்தில் மாசிமக விடையாற்றி விழாவில் புஷ்ப பல்லக்கில் சக்கரபாணி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.
    கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா கொண்டாப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வந்து மகாமக குளத்தில் நீராடுவார்கள்.

    கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. இதில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 6 கோவிலில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    மேலும் நாகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய 6 கோவிலில் மாசி மகத்தன்று ஏகதின உற்சவம் நடந்தது. கடந்த 17-ந் தேதி மாசி மகத்தன்று 12 சிவாலயங்களிலிருந்து சாமி - அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமக குளத்தில் குளத்தில் புனித நீராடினர்.

    இதேபோல் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவில், ராஜகோபாலசாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோவில்களில் மாசி மக திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மகத்தன்று சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் ஆதிகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை அம்பாளுடன் முத்துப்பல்லத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதேபோல் சக்கரபாணி - தாயாருடன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.
    பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    மறு நாள் 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றிவைக்கிறார். இதையொட்டி 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும்.

    18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து, 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
    திங்களன்று ஆகாரம் ஏதுமின்றி உபவாசம் இருந்து சர்வ தோஷ நிவர்த்தீஸ்வரரை கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.
    திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். கூடவே திங்கட்கிழமையை சோமவாரம் என்கிறோம். சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது. அதிலும், இந்த திங்கட்கிழமையன்று பெளர்ணமியும் சேர்ந்து கொள்வது எத்தனை விசேஷம் தெரியுமா?

    சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஶ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். இதய சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள் அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் வழங்குகளில் வெற்றி வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள்.

    சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவத்தையும் தீரும், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும்.வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும்.

    திங்களன்று ஆகாரம் ஏதுமின்றி உபவாசம் இருந்து சர்வ தோஷ நிவர்த்தீஸ்வரரை கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது.

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர்-தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோவிலை அடைந்து கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். அங்கு சிறப்பு யாகபூஜையுடன் 54 அடி உயரம் உள்ள கொடி மரத்திற்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து உற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் தியாகராஜர், சண்டிகேஸ்வரர் சன்னதியில் வைத்து உற்சவ பத்திரிக்கை விவரம் பக்தர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

    விழாவில் பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், செயல் அதிகாரி கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம்(மார்ச்) 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடி ஏற்றுவது 28-ந்தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. முஸ்லிம் ஜமாத் முத்தவல்லி மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஸ் இமாம் ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி ஆலிம் வரவேற்று பேசுகிறார். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் முகமது ஹனீபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஷ் இமாம் முகமது இப்ராகிம் பைஜி ஆலிம் தொடக்க உரையாற்றுகிறார். இதில் பேராசிரியர் பஷீர் அகமது உஸ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது 3-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
    கடந்த 15-ந் தேதி இரவு முதல் 16-ந் தேதி இரவு வரை பவுர்ணமி இருந்தது. பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கடந்த 15-ந் தேதி இரவு முதல் 16-ந் தேதி இரவு வரை பவுர்ணமி இருந்தது. பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக வெளியே வந்த பக்தர்கள் கூறினர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.
    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மகாமுனி பூஜை நடைபெற்றது. அப்போது குழந்தை வரம் வேண்டி பெண்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
    கோவை மாவட்டம் ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயனநிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்ந்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 14-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை, சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். பின்னர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்குதல் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி மாசாணியம்மன் முன் உருட்டிய விழிகளுடன் உட்கார்ந்த நிலையில் காவல் தெய்வமாக உள்ள மகாமுனிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் மகாமுனி பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி மகாமுனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாமுனி அருளாளி சுப்பிரமணியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள் வந்த நிலையில் வீட்டில் இருந்த மகாமுனி அருளாளி சுப்பிரமணியை மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண், முறைதாரர்கள் மற்றும் அருளாளிகள் அழைத்தனர். தொடர்ந்து அருள் வந்த நிலையில் ஆக்ரோஷமாக இருந்த அருளாளி சுப்பிரமணியை சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதையடுத்து மகாமுனி அருளாளி சுப்பிரமணி அருள்வந்து படையல்களை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வந்தார். மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் எச்சில் சோறுக்கு கண்ணீருடன் காத்திருந்தனர். ஆனால் ஒரு சிலருக்கே மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தது. மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்கினர். கிடைக்காத பெண்கள் சோகத்துடன் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.

    மகாமுனி பூஜையை காண கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் நடந்தது. கொடியேற்றத்தின் முன்தினம் மாலையில் புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

    திருவிழாவின் முதல் நாளில் காலையில் மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி இறந்த அருட்பணியாளர்கள், பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவு திருப்பலியும், மாலையில் கொடியேற்றமும், திருப்பலியும் நடந்தது.

    3-ம் நாள் காலையில் திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 4-ம் நாளில் கத்தோலிக்க சேவா சங்கத்தின் பவளவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்டம் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெற்றது.

    8-ம் நாள் விழாவில் மதியம் சமபந்தி விருந்தும், மாலையில் புகழ்மாலை, திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், 9-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் முதல் திருவிருந்து திருப்பலியும், தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருப்பண்டம் (எலும்புதுண்டு) முத்தமிடும் நிகழ்வும் நடந்தது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தேர் பவனி, சிறப்பு தவில் வாத்தியம், வாணவேடிக்கை போன்றவை நடைபெற்றது.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை தேர் பவனியும் நடைபெற்றது. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, தென்னம்பிள்ளை, பூமாலை, வாழை தார் போன்றவற்றை நேர்ச்சை கடனாக வைத்து வழிபட்டனர். இதில் பங்கு மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி. ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ. அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயு, செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும்.
    திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு திருப்பதியில் சீனிவாசம் தங்கும் விடுதி, ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம், அலிபிரி டோல் கேட் பகுதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சமீப காலமாக இலவச தரிசனத்தில் சென்ற சாதாரண பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவர்கள் சாமி தரிசனம் செய்யவும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர் ஒருவர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட குறைந்தபட்சம் 4, 5 நாட்கள் ஆகிறது. எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான நடைமுறையை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும்.

    மேலும் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வந்து, முழு விவரம் தெரியாமல் பக்தர்கள் சிரமப்பட வேண்டாம். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    நாகை காயாரோகண சாமி கோவிலில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது இதைமுன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஏழை பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல கற்பக விநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், சேதுசாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வீரகத்தி விநாயகர், கீழகோபுரவாசலில் உள்ள தொப்புள் விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.
    இரத்தினகிரீஸ்வரர் இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார். இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார். சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.

    இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9-ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் பெற்றாரா, அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் ஒன்பது என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தால், அதற்கான பதில் இல்லை. இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.

    தல வரலாறு

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறும் உள்ளது. அதை பற்றிக் காண்போம். ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான்.

    அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு. அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது. சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பலன்கள்

    குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

    தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    முகவரி:

    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்,
    அய்யர்மலை,
    குளித்தலை,
    சிவாயம் அஞ்சல் 639 120,
    வைகை நல்லூர் வழி. கரூர் மாவட்டம்.
    பல கல்ப காலங்களுக்கு முன்பு, கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி தினத்தில், நாராயணருக்கும், துளசி தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
    தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, லட்சுமிதேவியின் தங்கையாக அவதரித்தவள், துளசி தேவி என்கிறார்கள். லட்சுமியை, மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார். துளசியும், விஷ்ணுவையே மணந்துகொள்ள நினைத்தாள். ஆனால் லட்சுமிதேவி, அவளை துளசிச் செடியாக மாற்றி விட்டாள். அப்போது அவளது விருப்பத்தை அறிந்த மகாவிஷ்ணு, ‘நான் சாளக்கிராமமாக இருக்கும் வேளையில் எல்லாம், துளசி என்னோடு இருப்பாள்’ என்றார்.

    விஷ்ணு பூஜை என்பது துளசி இல்லாமல் நடைபெறாது. அவ்வாறு துளசி இன்றி செய்யப்படும், பெருமாளுக்கான வழிபாடு வீண் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து. பெருமாளுக்கு எத்தகைய சிறப்பு வாய்ந்த நைவேத்தியங்களைப் படைத்தாலும், அந்த நைவேத்தியம் துளசி இலையும், நீரும் இன்றி பூரண நிலையை அடையாது. துளசிச் செடியின் வேர், கிளை, இலை உள்ளிட்ட அனைத்திலும் தேவதைகள் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

    பல கல்ப காலங்களுக்கு முன்பு, கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி தினத்தில், நாராயணருக்கும், துளசி தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றதாக சொல்கிறார்கள். இந்த நிகழ்வானது, தீபாவளிக்குப் பிறகான 15-வது நாளில் வரும் துவாதசியில் நடைபெறுவதாக ஐதீகம். அன்றைய தினம் துளசிக் கட்டையை மணமகளாகவும், நெல்லி மரத்தை மணமகனாகவும் வைத்து திருக்கல்யாணத்தை செய்வார்கள். இன்னும் சிலர், லட்சுமியையே, துளசியின் அம்சமாக பாவித்து, விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் இந்த திருக்கல்யாணத்தை செய்து வைப்பார்கள்.
    ×