என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூய அந்தோணியார் திருத்தல பங்கு மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் அமைந்துள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சாதி மத வேறுபாடு இல்லாமல் வந்து செல்கிறார்கள். இந்த திருத்தல பங்கின் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள், நற்கருணை கொண்டாட்டம் ஆகியவை அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.

    மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் கொடி பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நற்கருணை கொண்டாட்டமும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமையில் நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார். 24-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆனந்த் தலைமையிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையிலும், மாலை 5 மணிக்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமையிலும், 26-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    27-ந் தேதி காலை 8 மணிக்கு முதல்திருவிருந்து விழா கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையிலும், 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    மார்ச் 1-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்திலும், 9.30 மணி, 11 மணிக்கு தமிழிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் திருவிழா நிறைவு நற்கருணை கொண்டாட்டம் நடைெபறும். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார்.

    திருவிழா ஏற்பாடுகள் பங்கு அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து, இணை பங்கு அருட்பணியாளர் மரிய மார்ட்டின், அருள் வாழ்வு வழிகாட்டி அருட்பணியாளர் டென்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜோசப் கிரேசியஸ், செயலாளர் லில்லி பாய், பொருளாளர் தங்கையன், துணைச் செயலாளர் பிரைட் சிங் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.
    இடையார்பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் நாளை (புதன்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
    புதுவை - கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கு நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் நாளை (புதன்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.

    தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகமும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சாயரட்சை வழிபாடும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மூன்று கால பூஜைகளும், லிங்கோத்பவர் அபிஷேகமும் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 6 மணி முதல் 8 மணி வரை அதிகார நந்தி புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேரத்தில் கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இன்றி தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரம்மோற்சவ விழாவை நடத்த மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக, மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    அதையொட்டி கோவில் வளாகத்தில் பல வண்ணங்களில் ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டுள்ளன. பக்தர்களை கவரும் வகையில் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள், வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேரத்தில் கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இன்றி தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும். வருடாந்திர மகாசிவராத்திரி அன்று ஒருநாள் மட்டும் கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை நடக்காது. மற்ற நாட்களில் வழக்கம்போல் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாநாட்களில் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கெொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிப்ரவரி மாதம் 22-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    22-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * நத்தம் மாரியம்மன் பொங்கல்பெருவிழா
    * கோவை கோணியம்மன் உற்சவாரம்பம்
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி

    23-ம் தேதி புதன் கிழமை :
     
    * தேய்பிறை சப்தமி
    * ராமேசுவரம் சுவாதி பூத வாகனம். அம்பாள் கிளி வாகன பவனி
    * கோவை கோணியம்மன் புலி வாகன பவனி
    * சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
     
    24-ம் தேதி வியாழக்கிழமை :

    * தேய்பிறை அஷ்டமி
    * சித்தயோகம்
    * காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காடு, இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்- பரணி

    25-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேய்பிறை நவமி
    * ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் யானை வாகனத்தில் புறப்பாடு
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை

    26-ம் தேதி சனிக்கிழமை :

    * ஸ்மார்த்த ஏகாதசி
    * திருக்கோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு
    * திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை
    * கருட தரிசனம் நன்று
    * சந்திராஷ்டமம் - ரோகிணி

    27-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * வைஷ்ணவ ஏகாதசி
    * கரிநாள்
    * கண்ணூறு கழித்தல் சூரிய வழிபாடு நன்று
    * கோவை கோணியம்மன் காமதேனு வாகன உலா
    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்

    28-ம் தேதி திங்கள் கிழமை  :

    * பிரதோஷம்
    * கரிநாள்
    * திருவோண விரதம்
    * சந்திராஷ்டமம் -திருவாதிரை
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. இரவு ஹம்ச வாகனம், 23-ந்தேதி காலை சூரிய பிரபா வாகனம், இரவு சந்திர பிரபா வாகனம், 24-ந்தேதி காலை பூத வாகனம், இரவு சிம்ம வாகனம், 25-ந்தேதி காலை மகர வாகனம், இரவு சேஷ வாகனம், 26-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகனம்.

    27-ந்தேதி காலை வியாக்ரா பாதர் வாகனம், இரவு யானை வாகனம், 28-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு குதிரை (அஸ்வ) வாகனம், அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகனம், 2-ந்தேதி காலை புருஷா மிருக வாகனம், மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 3-ந்தேதி காலை ராவணாசூர வாகனம், சூரிய பிரபா வாகனம், திரிசூல ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    ேமற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரசாமி, சோமஸ் கந்தமூர்த்தி, சந்திரசேகரர், நடராஜர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தினமும் காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதம், அபிஷேகம் நடந்தது.

    காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலில் உள்ள கருவறை, கொடிமரம், பல்வேறு சன்னதிகள், கோவில் வளாகம், மேற்கூரை, தூண்கள், மாடங்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், இதர பொருட்கள் ஆகியவற்றை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். அதன் பிறகு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம் நடந்தது. அதில் பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கோவில் கண்காணிப்பாளர் பூபதி மற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.
    சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலாத்ரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார்.

    இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது.

    செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கொடியேற்றுதல், மதியம் 1 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

    திருவிழாவில் 3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், 6-ம் நாள் விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை, 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியுடன் பெரிய சக்கர தீவெட்டி பவனி போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான மார்ச் 8-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை அடியந்திரபூஜை, குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடர்ந்து கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நடக்கும் 10 நாட்களும் கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. முதல் நாளில் மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் திறந்து வைத்து உரையாற்றுகிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6 மணிக்கு ராஜராஜேஸ்வரி பூஜை, திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற நாட்களில் கம்பராமாயண விளக்கவுரை, இசை சொற்பொழிவு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    10-ம் நாள் மாலை 4 மணிக்கு நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்த அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாசிக்கொடை விழா தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். நேற்று ஏராளமான கேரள பெண் பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். இதனால், மண்டைக்காடு கோவில் மாசிக்கொடை இப்போதே களைக்கட்ட தொடங்கி உள்ளது.
    திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
    திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.

    ‘பத்ம த்வாஜய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’

    இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜையறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சிவப்பு நிறத்தில் கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான பிரம்மோற்சவ விழா கொடியை ஊழியர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் ெகாண்டு சென்றனர்.

    கொடியை கோவிலுக்குள் எடுத்துச் சென்று தர்ப்பை புல்லால் தயாரிக்கப்பட்ட கயிற்றில் இணைத்து, வேத மந்திரங்கள் முழங்க முப்பத்து முக்ேகாடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் பிரதான அர்ச்சகர்கள் மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். அப்போது கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி பெரிய சேஷ வாகனத்தில் ‘வைகுண்ட நாராயணன்’ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் லந்து கொண்டனர்.
    உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறு திருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.
    பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

    இரண்டாம் திருமணம் யாருக்கு வரம் : இளைய தாரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஏழு, பதினொன்றாம் இடம் சுப வலுப்பெற்றால் இரண்டாம் திருமண வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தரும். பதினொன்றாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி, உச்சம் பெற்று ஏழாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் இளைய மனைவியால் யோகம் உண்டு. அதே போல் இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் அதிபதி வலுப்பெற்று தசை நடத்தினால் இளையதாரத்தால் பணம், புகழ் கிட்டும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பதவி, புகழ், அந்தஸ்து, கவுரவமான வாழ்க்கை உண்டு. லக்னம் ஏழாம் இடத்திற்கு சுக்ரன் செவ்வாய், சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள்.

    இரண்டாம் திருமணம் யாருக்கு சாபம் : பதினொன்றாம் இடம் அசுப வலுப்பெற்றால் இரண்டாம் வாழ்க்கை துரதிர்ஷ்டத்தை தரும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் மூன்று, நான்காம் இடத்துடன் சம்பந்தம் பெற்றால் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வைத்த கதை தான். பதினொன்றாம் அதிபதி ஆறு, எட்டு, பனி ரெண்டாம் இடத்துடன் சம்பந்தம் பெற்று குருப் பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்து இளைய தாரத்தால் வம்பு, வழக்கு கட்டப் பஞ்சாயத்து என கடனாளியாக வாழ்வார்கள். சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக இரண்டாவது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கசக்கும். ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் கேது, செவ்வாய் கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்து போகாமல் பல திருமணம் செய்தால் சாபம் நிறைந்ததாக இருக்கும்.

    உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறு திருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    ×