என் மலர்tooltip icon

    வழிபாடு

    இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சிவப்பு நிறத்தில் கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான பிரம்மோற்சவ விழா கொடியை ஊழியர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் ெகாண்டு சென்றனர்.

    கொடியை கோவிலுக்குள் எடுத்துச் சென்று தர்ப்பை புல்லால் தயாரிக்கப்பட்ட கயிற்றில் இணைத்து, வேத மந்திரங்கள் முழங்க முப்பத்து முக்ேகாடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் பிரதான அர்ச்சகர்கள் மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். அப்போது கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி பெரிய சேஷ வாகனத்தில் ‘வைகுண்ட நாராயணன்’ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் லந்து கொண்டனர்.
    Next Story
    ×