என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த இந்திர பெருவிழாவையொட்டி மருத்துவாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் பிரசித்தி பெற்ற திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் தேவர்களையும், மக்களையும் இம்சை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிவபெருமானிடம் அவர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து சிவன் தனது ஐந்தாவது முகமான அகோர முகத்தில் இருந்து மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஒளி பிழம்பாக காட்சி அளித்தார்.
இதனைக்கண்டு அஞ்சிய அசுரன் அவரிடம் சரணாகதி அடைந்தார். அப்போது அசுரனின் வேண்டுகோளை ஏற்று, மிகவும் சக்திவாய்ந்த அகோரமூர்த்தி திருவெண்காடு கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். தற்போது கடந்த 13-ந்தேதி இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் 5-வது நாள் நிகழ்ச்சியாக மருத்துவாசூரனை சம்கார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அகோரமூர்த்தி பல்லக்கில் கோவிலின் பிரகாரத்திலுள்ள கொன்றை மரத்தடியில் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், விவசாய சங்க தலைவர் வடக்கு தொப்புதுரை, உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீராமருக்கு சோழ மன்னன் எழுப்பிய கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மனித குலத்திற்கு உதாரண புருஷராக திகழும் ஸ்ரீ கோதண்ட ராமர் இருக்கிறார். சோழ மன்னர்களில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய கோவில் இது. பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட தொண்டைமான் மன்னர் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள கல்வெட்டு குறிப்புக்கள் இக்கோவில்களில் இருக்கின்றன.
முற்காலங்களில் நமது நாடு பல சிற்றரரசு தேசங்களாக பிரிந்திருந்த போது நாம கீர்த்தனை செய்யும் கலைஞர்கள் ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு சென்று நாம கீர்த்தனம் செய்வதோடு, அங்கே ஆட்சி புரியும் மன்னர்கள் பற்றியும் புகழ்ந்துரைப்பர். அப்படி ஒரு முறை தீவிர சிவ பக்தனான கண்டராதித்த சோழன் ராமாயண நாம கீர்த்தனை கேட்கும் போது அதில் வரும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா பிராட்டியார் மீது மிகுந்த பக்தி கொண்டு தனது ராஜ்ஜியத்தில் ராமருக்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்தார்.
அப்போது சோழ தேசத்தின் பகுதியாக இருந்த இந்த கந்தர்வகோட்டையில் அழகிய ராமர் கோவிலை கட்டி, அங்கு பிராமணர்கள் இன்ன பிற மக்கள் வாசிக்க கிராமத்தையும், பால் தேவைகளுக்கு பசுக்கள் போன்றவற்றையும் தானமாக அளித்து, ராமருக்கு நித்ய பூஜைகள் நடக்கும் படி ஏற்பாடுகள் செய்தான். இந்த கோதண்ட ராமருக்கு பூஜைகள் செய்து வழிபட தொடங்கிய பின்பு சோழ ராஜ்ஜியம் மேலும் செழித்தோங்கியது என கூறப்படுகிறது. இக்கோவிலை கட்டிய கண்டராதித்த சோழனின் சிலை இக்கோவிலில் இன்றும் உள்ளது.
கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவில் சிறப்புக்கள்
இக்கோவில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலின் ஆச்சர்ய நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் - 613301

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 28-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (20-ந்தேதி) தொடங்கி மார்ச் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் பெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள தென்மாடவீதி, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் திருக்குளத்தை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை இரவு புன்னை மர வாகனம், 21-ந்தேதி காலை சேவு வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு அம்ச வாகனம், 23-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
25-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. காலையில் ஆனந்த வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
7-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.

27-ந்தேதி காலை பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்திலும் இரவில் குதிரை வாகனத்திலும், 28-ந்தேதி காலை ஆளும் பல்லக்கிலும், இரவு கண்ணாடி பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மார்ச் 1-ந்தேதி அவரோ ஹனம், துவாதச ஆராதனம், சப்தாவர்ணம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையும் படிக்கலாம்...ஜாதகத்தில் இரண்டு தாரம் அமைப்புள்ள ராசிகள்
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதோடு சனி கவசம் பாடி வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனி பகவான் வழங்குவார்.

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண சுதை வடிவத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில், அலங்கார மண்டப சுவரில் ஓவியமாக வரையப்பட்டிருந்த மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி சுதை வடிவமாக மாற்றி அமைக்க, கோவில் அறங்காவல் குழுவினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்பணி நிறைவு பெற்றதையொட்டி திறப்பு விழா, நடைபெற்றது. அப்போது மீனாட்சி திருக்கல்யாண சுதை வடிவத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
முன்னதாக, காலை யாக பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச நீர் புறப்பாடு செய்யப்பட்டு, சுதையின் மேல் தெளித்து தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறு திருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தின் மூலம் ஏழாமிடம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம். அதாவது வாழ்க்கை துணையால் பெறும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மன மகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ்வார்களா? என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஜென்ம லக்ன அடிப்படையில் இருதார அமைப்புகள் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருப்பதால் இரு தார யோகம் உண்டு.
ரிஷபம் : கால புருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்ரனின் ஆட்சி வீடு ரிஷபத்தில் உச்சம் பெறும். ராகு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புருஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்க முடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.
மிதுனம் : இந்த லக்னம் கால புருஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்ரனும் நட்பு கிரகம். மேலும் சுக்ரன் மிதுனத்திற்கு 5, 12-ம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்து காட்டுவார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.
கடகம் : கடக லக்னத்தினருக்கு சுக்ரன் 11-ம் அதிபதி. சுக்ரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
துலாம் : கால புருஷ ஸ்தானம் ஏழாம் இடம். இதன் அதிபதி சுக்ரன். சுக்ரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்ர புத்தி அல்லது சுக்ர தசை, சனி புத்தியால் இரண்டாம் திருமணம் நடக்கிறது.
மீனம் : இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.
திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை. இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது. இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.
குற்றமுடைய, தோஷமுள்ள இரத்தினங்களை அணிந்து கொண்டு அதனால் துன்புறும் மக்கள் இரத்தினகிரி ஈசனை அணுகிப் பரிகாரம் காணலாம். தோஷமுள்ள இரத்தினத்தை ஈசன் திருவடிகளில் சமர்ப்பித்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, வலம் வந்து வணங்கினால் இரத்தின தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இரத்தின வியாபாரிகளுக்கு ஒரு கண்கண்ட புண்ணியத் தலம் இரத்தினகிரி. முறையாக வழிபாடு செய்து, ஈசனை வலம் வந்து வணங்குவதால் அவர்கள் தங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடையலாம். தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.
சிலருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்தோ, அல்லது மற்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் அதனால் சூரிய குற்றங்களும், தோஷங்களும் ஏற்படும். அத்தகைய துன்பத்திற்கு ஆளானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் வலம் வர துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தியாகராஜசாமி பாத தரிசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தெடங்கியது.
மாசிமக விழாவின் ஒரு பகுதியாக தியாகராஜசாமி பாத தரிசனம் கொடுத்து இருப்பிடத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஹம்சநடன புவனி விடங்க தியாகராஜசாமி தேரில் வீதி உலா வந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து பாத தரிசனம் அளித்து விட்டு, புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது.இதை முன்னதாக கல்யாணசுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் சேதுபதி மண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் மணிகர்ணிகை என அழைக்கப்படும் தீர்த்த குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டா் சுப்ரியா தலைமையில் போலீசாா், ஊர்காவல்படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.. விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தலைமையில் வர்த்தக சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
ஆலஞ்சியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. மறைவட்ட முதன்மை ஆலயமான இங்கு 182-ம் ஆண்டு பங்கு குடும்ப திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி இரவு 7 மணியளவில் ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் தேவதாஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். குழித்துறை மறைமாவட்டம் வளனூர் பங்குத்தந்தை காட்வின் செல்ல ஜஸ்டஸ் மறையுரையாற்றினார். திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
10-ம் நாள் திருவிழா 27-ந்தேதி காலை 9 மணிக்கு குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
மாலை 5 மணிக்கு ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்பணியாளர் மரியசூசை வின்சென்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு 6 மணிக்கு பொதுக்கூட்டமும், அன்பு குடும்பம் என்ற சமூக நாடகமும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை மரியசூசை வின்சென்ட், அருட்சகோதரர் விஜய் ஆன்றோ, ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் தேவதாஸ் ஆகியோர் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் நிறைவு பகுதியாக லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் கோவில் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இந்த மாதம் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார்.
விழாவின் நிறைவு பகுதியாக கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் கோவில் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன கொடை உற்சவத்தை முன்னிட்டு 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும், ரெங்க மன்னாருக்கும் படைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது.
இதற்காக 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும், ரெங்க மன்னாருக்கும் படைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆண்டாளுக்கு படைக்கப்பட்ட தயிர்சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி, தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
11-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்தை சென்றடைந்தனர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு இரவில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி, தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் சுவாமி- அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்தனர். பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரங்களில் வீதி உலா சென்று கோவிலை சேர்ந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.