என் மலர்
சினிமா செய்திகள்
- ‘பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
- ‘பாடிகார்டு’க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ்.
'கே.ஜி.எப்.' படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் யாஷ். யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' படத்திலும் (ராவணன் கதாபாத்திரத்தில்) நடித்து வருகிறார்.
இதற்கிடையில் யாஷ் தனது 'பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
யாஷ் 'பாடிகார்டு' ஆன சீனிவாஸ் என்பவருக்கு மாத சம்பளமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். இதனால் கார், மோட்டார் சைக்கிள் என பந்தா ஆசாமியாக அவர் வலம் வருகிறார்.
அந்தவகையில் 'பாடிகார்டு'க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ். சமூகம் பெரிய இடம் தான் போல...
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
குற்றம் தவிர்:
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'. இப்படத்தில், ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
பல்டி:
ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.
ரைட்:
அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.
சரீரம்:
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
- பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
அதாவது, தான் 100 படங்களை எட்டியதும் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்," எனது 100வது படம் முடிந்ததும் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருக்கிறேன். பிளான் எதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம், எனது 100வது திரைப்படத்தில் மோகன்லால் இருப்பார். ஏனென்றால், நான் இன்று இவ்வாறு இருப்பதே அவரால்தான்'' என்றார்.
மோகன்லால் நடித்த பூச்சக்கொரு மூக்குத்தி (1984) படத்தின் மூலம் பிரியதர்ஷன் இயக்குனராக அறிமுகமானார்.
இதற்கு முன்பு, மோகன்லால் நடித்த திரனோட்டம் (1978) படத்தில் இயக்குனர் வி. அசோக் குமாரிடம் உதவியாளராக பிரியதர்ஷன் பணியாற்றினார்.
பிரியதர்ஷன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
- தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட் கூறினார்.
- இரவின் விழிகள் படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான 'பங்காரா' என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது:-
இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள்.
ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ?
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது.
- 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
குக் வித் கோமாளி' மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து இருந்தார். 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
மிக விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்படம் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
- நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
- கார்மேனி செல்வம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.

நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.
- Naal 2 என்ற மராத்திய படத்துக்காக 4 வயது குழந்தை Treesha தேசிய விருது வென்றார்.
- உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள் என்று கமல் பாராட்டு
செப்டம்பர் 23 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை Treesha-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
- ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
- ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
'பொன்மாலைப் பொழுது'
உன் குரலின்
அழகியல் வசீகரம்
'சங்கீத ஜாதிமுல்லை'
கண்ணீரின் திருவிழா
'காதல் ரோஜாவே'
கவிதைக் கதறல்
'வண்ணம்கொண்ட
வெண்ணிலவே'
காதலின் அத்வைதம்
'பனிவிழும் மலர்வனம்'
சிருங்காரச் சிற்பம்
'காதலே என் காதலே'
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'.
- நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
காட்டி
அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக அனுஷ்கா களமிறங்கினார். இப்படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
சுமதி வளவு
கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
ஹிருதயபூர்வம்
நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் நாளை வெளியாக உள்ளது.
ஓடும் குதிர சாடும் குதிர
பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மலையாள சினிமா. மரச்சாமான்கள் விற்கும் கடைக்காராக நாயகன் இருக்கிறார். நண்பருடன் இணைந்து ஒரு வீட்டிற்கு மரச்சாமான்கள் இறக்கி வைக்க செல்கிறார். அங்கு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகியுடன் காதலில் விழுகிறார். நாயகனின் அர்ப்பணிப்பை கண்டு நாயகியும் காதல் கொள்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்தன்று தனது கணவர் குதிரையில் வந்து இறங்கவேண்டும் என்ற ஆசையை நாயகி கொண்டிருக்கிறார். நாயகியின் ஆசையை நிறைவேற்ற திருமணநாளில் நாயகன் குதிரையில் செல்ல விபத்தில் காயமடைந்து 'கோமா' நிலைக்கு செல்கிறார். அதன்பின்னர் நாயகன்-நாயகியின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான நகைச்சுவை சினிமா. நெட்பிளிக்சில் நாளை வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
மகா அவதார் நரசிம்மா
கே.ஜி.எப்., காந்தாரா போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் இதிகாச கதைகளை மையமாக வைத்து கார்ட்டூன் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக அரக்கன் இரண்யகசிபு மகன் பக்தன் பிரகலாதன் மற்றும் விஷ்ணு அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவின் கதையை தழுவி கார்ட்டூன் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில், சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.320 கோடி வசூல் குவித்து இந்தியாவில் வெளியான கார்ட்டூன் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை பிடித்துள்ளது. தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ள இதனை தமிழில் காணலாம்.
மதராஸி
சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் நடிப்பில் வெளியான படம். வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகிகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான சினிமா. அனிருத் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வருகிற 3-ந்தேதி வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
- ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
- அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபிராமி நடித்திருந்தார்.
- அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்போஸ்டரில் திராவிட வெற்றி கழகம் என்ற கட்சியை அபிராமி தொடங்கியது போலவும் பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுப்பது போவும் அமைக்கப்பட்டுள்ளது.
அபிராமி புதிய கட்சியை தொடங்கினாரா? இல்லை புதிய படத்தின் போஸ்டரா என்று நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
- கொரோனா தொற்றுக்கு முன்பு வரை வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் செயல்பட்டது.
- இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. உதயம், திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை அண்மையில் மூடப்பட்டது.
ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.






