என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.
    • பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியானது.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் அடுத்த நாளே நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.


    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் வலம் வந்தது.

    இந்நிலையில், மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவரின் 'புதுப்பேட்டை 2' படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் பதிவு அமைந்துள்ளது. அதாவது இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இயக்குனர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார்.


    இயக்குனர் லோகேஷ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் 'பைட் கிளப்' என்ற படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

    இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளனர். அதாவது, ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என பதிவிடப்பட்டுள்ளது.


    இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பத்தை லோகேஷ் இயக்குகிறாரா? என சமூக வலைதளத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • விஷால் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றயுள்ளார்.
    • 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது 'மக்கள் நல இயக்கம்' மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிப்பார் என்றும் 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.


    என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

    அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.


    விஷால் அறிக்கை

    அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

    நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

    தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.


    தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


    நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அவர் நடிக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    • தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.

    "திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி."

    "இந்த காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயம். இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறம்பட செய்து முடித்திருக்கிறார்," என்று தெரிவித்தார். 

    • நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஸ்ரீகாந்த் நடித்த 'எக்கோ' படத்தை இயக்கிய நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ், சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். 'சிவகுமாரின் சபதம்' மற்றும் 'ரவுடி பேபி' படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார். இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


    இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக உள்ளது. சனா ஸ்டுடியோஸ் வழங்க முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்கள் நான்கு பேர் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    • மனு ஆனந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி, சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.


    பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    • விஜய் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு தான் நடிக்க போவதில்லை என்றும் முழு நேர அரசியல் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

    விஜய் அரசியலுக்கு வந்தது தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லியிருந்த நிலையில் இருவருக்கும் இருந்த அடுத்தடுத்த பட வேலைகளால் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

    • வெங்கட் பிரபு ‘தி கோட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு "இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், 'தி கோட்' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது" என்றார்.

    • நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.

    தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, 'வாழ்த்துகள்' என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் தயரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.


    இதைத்தொடர்ந்து அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் நண்பர்கள் முன்பு கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

    ×