search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இறந்துவிட்டதாக விளம்பரம்- பூனம் பாண்டே மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இறந்துவிட்டதாக விளம்பரம்- பூனம் பாண்டே மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்

    • நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.
    • பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியானது.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் அடுத்த நாளே நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.


    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் வலம் வந்தது.

    இந்நிலையில், மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×