என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • என் வாழ்நாளில் அப்படி செய்ததே இல்லை.
    • எந்த வகையிலும் விளம்பரமாக மாறிவிடக்கூடாது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் திரையிசை தவிர்த்து இசை சார்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அந்த வகையில், "நீயே ஒளி" இசை கச்சேரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டார்.

    அப்போது, விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவரது அரசியல் கட்சிக்கான பாடலுக்கு இசையமைப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சந்தோஷ் நாராயணன், "இசைக்கு ஒரு சக்தி இருக்கு. அது ஒருவரின் முடிவை மாற்றக்கூடியது. ஒருவரிடம் பேசி முடிக்க முடியாத விஷயத்தை, கலையை கொண்டு புரிய வைக்க முடியும். அவரிடம் நானாக சென்று, நானே இசையமைக்கிறேன் என்று கேட்க முடியாது. நான் என் வாழ்நாளில் அப்படி செய்ததே இல்லை."

    "அவர்களின் கட்சி கொள்கை என்ன, அவர்கள் முன்னிறுத்தும் பிரச்சினை என்ன? நான் இசையமைக்கும் பாடல் எந்த வகையிலும் விளம்பரமாக மாறிவிடக்கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் மனம் சாந்தம் அடைந்த பிறகு, பாடலை தயாரிக்க முடியும். அவரின் முடிவை வரவேற்கிறேன். அவரின் கொள்கைகள் பொறுத்து, அவருக்கான ஓட்டு தீர்மானமாகும்," என்று தெரிவித்தார்.

    • எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம்.
    • இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.

    ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருக்கும் படம் சைரன். அடுத்த வாரம் ரிலீசாக இருக்கும் சைரன் படத்தின் விளம்பர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இது தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, "மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீசுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்."

    "ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜி.வி. பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருத்தர் ஜி.வி. பிரகாஷ்," என்று தெரிவித்தார்.

    இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். 

    • முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
    • லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

     


    கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுக்க நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

    வெளியீட்டை ஒட்டி இந்த படத்தின் அன்பாளனே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை தேவா மற்றும் தீப்தி சுரேஷ் பாடியுள்ளனர். 

    • சேரன் இயக்கிய வெப் சீரிசில் ஆரி நடித்திருந்தார்.
    • இந்த படத்தை ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார்.

    சேரனின் ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

     


    மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார். படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    முன்னதாக நடிகர் ஆரி சேரன் எழுதி, இயக்கிய வெப் சீரிஸ்- சேரனின் ஜர்னி-யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனி லிவ் ஒ.டி.டி. தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. 

    • மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் வெளியான 'லவ்வர்' படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    லவ்வர் போஸ்டர்

    இந்நிலையில், 'லவ்வர்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அன்பாளனே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. தேவா மற்றும் தீப்தி சுரேஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • வருண் தவான் நடித்து வரும் திரைப்படம் ‘பேபி ஜான்’.
    • இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பேபி ஜான் போஸ்டர்

    இந்நிலையில், 'பேபி ஜான்' திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியை தொடங்கியுள்ளார்.
    • தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.

    தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.



    இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, 'வாழ்த்துகள்' என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்த ரஜினியை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் இருவருக்குமான உரையாடல் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யை பாராட்டியது மட்டுமல்லாமல் அரசியல் குறித்த அறிவுரைகளையும் ரஜினி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "நினைவெல்லாம் நீயடா".
    • இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    'சிலந்தி', 'ரணதந்த்ரா', 'அருவா சண்ட' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "நினைவெல்லாம் நீயடா". பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார்.

    "அப்பா" படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.


    லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராஜா பட்டா சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, "இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1,417-வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும்.


    நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்ப பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது" என்று கூறினார். 

    • ’கயல்’ ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் ‘மங்கை’.
    • இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார்.

    கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. இவர் தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிக்கு ஈஷா, அஹானா என 2 மகள்கள் உள்ளனர்
    • ஈஷா, 2012ல் பாரத் தக்தானி எனும் தொழிலதிபரை மணந்தார்

    1970-80களில் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், பிரபல நடிகை ஹேமமாலினி (Hema Malini). தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமமாலினி, பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    ஹேமமாலினியின் கணவர், 70களில் இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த தர்மேந்திரா (Dharmendra).

    தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினருக்கு ஈஷா தியோல் (Esha Deol) மற்றும் அஹானா தியோல் என 2 மகள்கள் உள்ளனர்.

    தற்போது 42-வயதாகும் ஈஷா தியோல், தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    2012 ஜூன் மாதம், ஈஷா, பாரத் தக்தானி (Bharat Takhtani) எனும் தொழிலதிபரை மணந்தார்.

    2017ல் இத்தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது; 2019ல் 2-வது குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், ஈஷா-பாரத் தம்பதியினர் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமான சூழலில் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். முக்கியமான இந்த மாற்றத்தின் போது எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு அவசியம். இந்நிலையில், எங்கள் வாழ்க்கை தொடர்பாக நாங்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவை பிறர் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிந்தி குடும்பத்தை சேர்ந்த, பட்டதாரியான பாரத் தக்தானி, தங்க ஆபரண துறையில் தனது தந்தையின் வியாபாரத்தை நிர்வகித்து வந்தார்.

    2021 ஆண்டில் இவரது நிகர மதிப்பு $20 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.

    ஈஷாவும், பாரத்தும் பள்ளிப்பருவ காலகட்டம் தொடங்கி ஒருவரையொருவர் விரும்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தாலும், ஒரு பள்ளி நிகழ்ச்சியின் சந்திப்பில் இருந்து ஒருவரையொருவர் விரும்ப தொடங்கியதாக ஈஷா குறிப்பிட்டிருந்தார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இந்த திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    லால் சலாம் போஸ்டர்

    இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தணிக்கைக்குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


    ×