என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’லால் சலாம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இந்த படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. படக்குழுவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது.
    • இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.


    பல பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் இந்த 10-வது சீசனில், கர்நாடக சங்கீதப் பின்னணி, கனா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்திலிருந்தும் பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.


    இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவரின் குரலும், பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது.

    வெட்டிங்க் சுற்றில் பலகுரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும் பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக ஜொலிக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த, லின்சியின் தந்தை நிகழ்ச்சிக்கு வந்ததோடு, லின்சியை கட்டியணைத்து பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.


    பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10-வது சீசனிலும் களைகட்டி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் புகழ் நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஜெ4 ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில் ஜெ. சுரேஷ் இயக்கத்தில், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.


    ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழ் பேசியதாவது, தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குனர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார்.


    அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.


    மேலும், நடிகர் சூரி பேசியதாவது, இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள் ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம் தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். வாழ்த்துகள்.


    தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள். யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் 'கருடன்' படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றி. புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர் அவருக்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விக்ரம் 62 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்ரமின் 62-வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


    • சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
    • ‘நீயே ஒளி’என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம்.

    'அட்டக்கத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'நீயே ஒளி' எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

    இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான 'மேக்கிங் மொமெண்ட்ஸ்' அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு விருப்பமான இசையை ரசிக்கமுடியும். இசைகலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப்பெற்றிருப்பது தான் நேரு ஸ்டேடியம்.

    இந்த ஸ்டேடியத்தில் 'நீயே ஒளி' இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.


    'நீயே ஒளி'என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம். மேலும் புத்தபெருமானின் வாசகத்தில் இந்த சொற்களும் உண்டு- அதனால் இதனை தேர்வு செய்திருக்கிறோம். இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இளையராஜா, எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் குமார், அனிருத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும்.

    இந்த இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிடவேண்டாம். ஏனெனில் அதில் இந்தியாவின் எதிர்கால சாதனையாளர்களான பதினைந்து இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தவிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.


    இந்நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைகலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம்.

    அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் முழுக்க வெளிப்படையான அணுகுமுறையைத் தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிகண்டன் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.
    • நரேஷ்குமார் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன்., இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.

    கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுனர்களான ஜெயக்குமார் மற்றும் நரேஷ்குமார் இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் நேற்று நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் இன்று வழக்கம் போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

    மேலும் சென்னையில் உள்ள இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, டி.எஸ்.பி நல்லு தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்தில் 'ஸ்டார்டா' தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும் வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


    இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் 'ஸ்டார்டா' எனும் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

    இந்த 'ஸ்டார்டா' தளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், நிவேதிதா சதீஷ், அபிஷேக் ராஜா, ஷ்யாம் குமார், சி. வி. குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ் "குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த 'ஸ்டார்டா' தளத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன்.

    திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் தளமாக இந்த 'ஸ்டார்டா' இருக்கும் என எதிர்பாக்கிறேன். நிறைய பேரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த தளத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த தளத்தில் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தளத்தின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த தளத்தில் உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த தளம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார். 

    • மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி திணறினார்.
    • இறுதியில் மஹிபால் சிங் இரண்டு போட்டிகளிளும் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.

    சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெற்றது. இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில், இறுதிப் போட்டியில் விளையாடிய மஹிபால் முதல் ஆட்டத்தை, 68 பின்ஃபால் முன்னிலையுடன் முடித்தார். இரண்டாவது போட்டியில் மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி திணறினார். இதனைத் தொடர்ந்து, இறுதியில் மஹிபால் சிங் இரண்டு போட்டிகளிளும் வெற்றி பெற்று, 55 பின்ஃபால்கள் (443-388) முன்னிலை பெற்றார்.


    முந்தைய நாள், முதல் அரையிறுதியில் இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. முதல் நிலை வீரரான மஹிபால் சிங், நான்காம் நிலை வீரரான பார்த்திபன்.ஜே (403-361) 2 வது நாக் அவுட்டில் தோற்கடித்தார். 42 பின்ஃபால் வித்தியாசத்தில் இரண்டாவது அறையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை தோற்கடித்தார். மூன்றாம் நிலை வீரர் ஆனந்த் பாபு (418-382) 36 பின்ஃபால் வித்தியாசத்தில் தனது இடத்தை உறுதி செய்தார்.

    18 போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் முதல் 4 பவுலர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினார்கள். முதல் இருந்து களம் இறங்கிய மகிபால் சிங் 18 போட்டிகளில் 211.50 சராசரியுடன் முடித்தார். போட்டியின் நிறைவில், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் நிகில் மேத்யூ சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.


    கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுவதும் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • டிரைலரை விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர்.
    • இந்த படத்திற்கு தீசன் இசையமைத்திருக்கிறார்.

    ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

     


    அப்போது பேசிய கயல் ஆனந்தி, "மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்."

    "இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும்," என்று தெரிவித்தார். 

    • பாதே சினிமாஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
    • இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது.

    சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

     


    கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இந்த திரைப்படம் ஒரு தலைசிறந்த படைப்பு என்றும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது என்று பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

    • என் வாழ்நாளில் அப்படி செய்ததே இல்லை.
    • எந்த வகையிலும் விளம்பரமாக மாறிவிடக்கூடாது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் திரையிசை தவிர்த்து இசை சார்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அந்த வகையில், "நீயே ஒளி" இசை கச்சேரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டார்.

    அப்போது, விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவரது அரசியல் கட்சிக்கான பாடலுக்கு இசையமைப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சந்தோஷ் நாராயணன், "இசைக்கு ஒரு சக்தி இருக்கு. அது ஒருவரின் முடிவை மாற்றக்கூடியது. ஒருவரிடம் பேசி முடிக்க முடியாத விஷயத்தை, கலையை கொண்டு புரிய வைக்க முடியும். அவரிடம் நானாக சென்று, நானே இசையமைக்கிறேன் என்று கேட்க முடியாது. நான் என் வாழ்நாளில் அப்படி செய்ததே இல்லை."

    "அவர்களின் கட்சி கொள்கை என்ன, அவர்கள் முன்னிறுத்தும் பிரச்சினை என்ன? நான் இசையமைக்கும் பாடல் எந்த வகையிலும் விளம்பரமாக மாறிவிடக்கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் மனம் சாந்தம் அடைந்த பிறகு, பாடலை தயாரிக்க முடியும். அவரின் முடிவை வரவேற்கிறேன். அவரின் கொள்கைகள் பொறுத்து, அவருக்கான ஓட்டு தீர்மானமாகும்," என்று தெரிவித்தார்.

    ×