"மங்கை" கதையை தவறவிடக் கூடாதுனு நினைச்சேன் - கயல் ஆனந்தி

டிரைலரை விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்திற்கு தீசன் இசையமைத்திருக்கிறார்.
"மங்கை" கதையை தவறவிடக் கூடாதுனு நினைச்சேன் - கயல் ஆனந்தி
Published on

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கயல் ஆனந்தி, "மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்."

"இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும்," என்று தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com