இல்லாரின் கை காசை தொட்டேன் இல்லை- கவனம் ஈர்க்கும் லால் சலாம் பாடல்

ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.
இல்லாரின் கை காசை தொட்டேன் இல்லை- கவனம் ஈர்க்கும் லால் சலாம் பாடல்
Published on

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அன்பாளனே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. தேவா மற்றும் தீப்தி சுரேஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com