அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா

மனு ஆனந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா
Published on

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி, சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com