என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்.
- கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வெளியான சபா நாயகன் திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் "சபா நாயகன்".

ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிஎஸ் கார்த்திகேயன் இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில், சபாநாயகன் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
- ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது
ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.
லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 17.04.2024) இந்த உணவகம் தொடங்கி தனது 500-வது நாளை நிறைவு செய்தது.
- னது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது.
- எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23" பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் சிகர்களுக்கும் நன்றி
அமரன்" டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் அமரன் பட குழுவினார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அதே நாளில் எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் பெரிலின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23" பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அன்பான ரசிகர்களான சகோதர், சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
- மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
- தேர்வை உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரியம் நடத்துகிறது
- சம்பந்தப்பட்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்தது
நேற்று, உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு, அம்மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரிய (UP Police Recruitment and Promotion Board) வலைதளத்தில் பதிவாகிய "12258574" எனும் எண் கொண்ட ஒரு அனுமதி சீட்டில், பிரபல இந்தி திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையின் சைபர் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், கன்னோஜ் (Kannauj) பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட இந்த அனுமதி சீட்டு போலியானது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களும் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள செல்போன் எண், மகோபா (Mahoba) பகுதியில் உள்ள தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது எண் என விசாரணையில் தெரிகிறது.
இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த அனுமதி சீட்டின் புகைப்படத்தை கண்டு பயனர்கள் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
- விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷ்ரத்தா தாசும் உடன் பயணித்தார்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான பிரபல டாடா குழுமம் இயக்கி வரும் விமான போக்குவரத்து சேவை நிறுவனம், விஸ்டாரா (Vistara).
விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பயணம் செய்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதள கணக்கில் "மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்" என தலைப்பிட்டு பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் (Shraddha Das) பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.
புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகமான 'புஷ்பா: தி ரூல்' படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் 'புஷ்பா தி ரைஸ்' படம் திரையிடப்பட உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் படக்குழுவுடன் பெர்லினுக்கு சென்றுள்ளனர். அங்கு பேசிய அல்லு அர்ஜுன் "நீங்கள் நிச்சயமாக 'புஷ்பா' படத்தின் 3-வது பாகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்
அதன் அடுத்த பாகங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அற்புதமான யோசனைகள் எங்களிடம் உள்ளன. புஷ்பா 2-வது பாகம் முதல் பாகத்தை விட வித்தியாசமாகவும், புதுவித அனுபவமாகவும் இருக்கும். காரணம் உள்ளூரில் இருந்த கதைக்களம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், இந்த பாகத்தில் புஷ்பாவுக்கு பெரும் சவாலாக இருப்பார். மேலும் இருவருக்குமான மோதல் மிகப் பெரிய அளவில் இருக்கும்" என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
- தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 19-ம் தேதி வெளியிப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
- தனுஷின் 50-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 19-ம் தேதி வெளியிப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
தனுஷின் 50-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.
- அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.
அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார். இப்படம் ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் படத்தை தயாரிக்கிறார்.
Birthday boy @Siva_Kartikeyan played a perfect host for the team of #SKxARM on his special day ❤?
— Team AIM (@teamaimpr) February 17, 2024
The star actor arranged a special lunch for his team and enjoyed a good meal with them ✨ @rukminitweets @ARMurugadoss @anirudhofficial @dhilipaction @SudeepElamon… pic.twitter.com/mmQpxUEPWO
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்
'SK23' படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர்ஏ.ஆர். முருகதாஸ், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
Birthday boy @Siva_Kartikeyan played a perfect host for the team of #SKxARM on his special day ❤?
— Team AIM (@teamaimpr) February 17, 2024
The star actor arranged a special lunch for his team and enjoyed a good meal with them ✨ @rukminitweets @ARMurugadoss @anirudhofficial @dhilipaction @SudeepElamon… pic.twitter.com/GBkdW5z8j4
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேற்று (பிப் 16) அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Happy Birthday @Siva_Kartikeyan! Your special day is celebrated across borders and cherished in all our hearts. #Amaran #HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) February 17, 2024
A Film by @Rajkumar_KP@ikamalhaasan #Mahendran @gvprakash @Sai_Pallavi92… pic.twitter.com/M5XlNJPFXY
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்
1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
- சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.
இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.






