என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மோகன்ராஜன் எழுதி பிரதீப்குமார், ஷிவாங்கி பாடிய 'சில்லாஞ்சிருக்கியே' என்ற முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
    • படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்து உள்ள 'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம்  விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்ராஜன் எழுதி பிரதீப்குமார், ஷிவாங்கி பாடிய 'சில்லாஞ்சிருக்கியே' என்ற முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.


    இந்நிலையில் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (வதந்தி வெப் சீரிஸ் புகழ்), பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனிஆடியோ உரிமை பெற்று உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    • தமிழில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார் அனில் கபூர்
    • இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் தயங்கியதில்லை என்றார் அனில் கபூர்

    80களிலும், 90களிலும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர், அனில் கபூர் (67).

    சில தினங்களுக்கு முன் அனில் கபூர் சென்னை வந்திருந்த போது அவரிடம் அவரது திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு அவர் பதிலளித்ததாவது:

    இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்.

    தமிழில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள்; ஆனால், எனக்கு இதுவரை எவரும் வாய்ப்பு அளிக்கவில்லை.

    இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதில்லை. தமிழில் வெற்றி பெற்ற "முதல்வன்" மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற "ஸ்வாதி முத்யம்" ஆகிய படங்கள் இந்தியில் உருவான போது அந்த இயக்குனர்களை நானாக தேடிச் சென்றுதான் வாய்ப்பு கோரினேன். அவை இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்கள்.


    கே. பாக்யராஜ் அவர்களின் பல வெற்றி படங்களின் இந்தி உருவாக்கத்தில் நான் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

    கலைத்துறையின் சிறப்பே கலை படைப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உருவாவதுதான்.

    நல்ல எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அனில் கபூர் கூறினார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் கன்னட மொழியில் உருவாக்கிய "பல்லவி அனுபல்லவி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர். அதில் தோன்றும் பல காட்சிகளை மீண்டும் மணிரத்னம் "மவுன ராகம்" திரைப்படத்தில் கார்த்திக்-ரேவதி பங்கேற்கும் காட்சிகளில் கையாண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    90களின் இறுதி வரையில் இந்தி திரையுலகில் மிகக் குறைவான நடிகர்கள்தான் திரையில் மீசை வைத்து கொண்டு நடித்தனர். ஆங்கில பட கதாநாயகர்கள் போல் மீசை மற்றும் தாடி இல்லாமல் நடிப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.


    சத்ருகன் சின்கா, நானா படேகர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.

    அவர்களை போன்றே அனில் கபூரும், மீசையுடனே தனது படங்களில் நடித்தார்.

    கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் அனில் கபூர் கவனம் செலுத்துபவர்.

    எடுத்துகாட்டாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்த "ஸ்லம்டாக் மில்லியனர்", 2011ல் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ, டாம் க்ரூயிஸ் (Tom Cruise) கதாநாயகனாக நடித்த "மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் ப்ரோடோகால்", 2023ல் வெளிவந்த "அனிமல்" உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற முக்கிய கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று தந்தது.


    எப்போதும் இளமை குன்றாத தோற்றத்துடன் இருக்கும் அனில் கபூர், 2019ல் ஒரு பேட்டியில் தனது இளமைக்கு காரணம் தான் விரும்பி உண்ணும் தென்னிந்திய இட்லி, சாம்பார், சட்னி, அரிசி, ரசம் ஆகியவை என கூறியிருந்தார்.

    • டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.
    • திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.

    இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

    • ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

    நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

     


    இந்த நிலையில், ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கிளி' என்ற பாடல் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 



    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து கிளம்பும் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

    "லியோ 2 படத்தின் கதை இருக்கு, விஜய் OK சொன்னால் எப்ப வேண்டுமானாலும் பண்ணிடலாம்," என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வணங்கான் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார்.
    • இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார்.

    இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது.

    பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், "வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது" என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், வணங்கான் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
    • சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படம் இந்தாண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு

    இதற்கு முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக காட்சிகள்.
    • பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ்.

    தெலுங்கில் சாய் தரம்தேஜ் நடிப்பில் கஞ்சா சங்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் டிரைலரைக் கண்ட தெலுங்கானா போதை பொருள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    கஞ்சா சங்கர் என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக பல்வேறு காட்சிகள் அமைப்பப்பட்டு இருந்தது.

    இதுபோன்ற படங்களில் சென்சார் போர்டு அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டு தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என போதை பொருள் அமலாக்கப் பிரிவு இயக்குனர் சந்திப் சாண்டில்யா தெரிவித்தார்.

    மேலும், நடிகர் சாய் தரம் தேஜ், பட தயாரிப்பாளர் நாகவம்ஷி, இயக்குனர் சம்பத் நந்தி மற்றும் பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    • சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடினார்.
    • வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன?

    தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திடீரென மயோடிசிஸ் எனும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.

    அந்த வகையில் உரையாடிய போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்தார். சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த சமந்தா, "என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருந்தது தான் என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு," என்று தெரிவித்தார்.

    • இதில் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

    பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.

    இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார்.

     


    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த படம் குறித்து பேசிய இயக்குனர், '' கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.'' என்றார். 

    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

    அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    • இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்.
    • கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வெளியான சபா நாயகன் திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் "சபா நாயகன்".

    ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிஎஸ் கார்த்திகேயன் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில், சபாநாயகன் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ×