டியர் படத்தின் முதல் சிங்கிளான 'தலைவலி' வெளியீடு

டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.
டியர் படத்தின் முதல் சிங்கிளான 'தலைவலி' வெளியீடு
Published on

இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com