என் மலர்

  நீங்கள் தேடியது "AnuragKashyap"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
  • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  நட்சத்திரம் நகர்கிறது.

  மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.

  சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 'ஏ' சான்றிதழுடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  அனுராக் காஷ்யப் - பா. இரஞ்சித்

  இந்நிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப், பா. இரஞ்சித்தைக் கட்டியணைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

  ×