என் மலர்
சினிமா செய்திகள்
- சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல்.
மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை குவித்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மஞ்சுமெல் பாஸ்ட் பட இயக்குனர் சிதம்பரம் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய இந்தி படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வரும்போதிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
- படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.
கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.
அதில், புறநானூறு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 2டி எஎண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தெரிகிறது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார்.
- சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து.
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
- அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள 2 படங்களின் முக்கிய அப்டேட்டும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. அதனையொட்டி ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இன்று தங்கலான் நாள், அமரன் நாள்" என்று உற்சாகத்தோடு பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
'சைரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி பல சுவாரசிய கதையம்சம் கொண்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார். இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'பிரதர்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை நேற்று வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் 'பிரதமர்' படத்தை செப்டம்பர் 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனையடுத்து அவர் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார்.
இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது.
- விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். பெயருக்கு ஏற்றார் போல இயக்கும் படம் அனைத்தும் வெற்றியே.
தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா திரைப்படமும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் உண்டு.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில் விடுதலை 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் இருக்கும் புகைப்படமும், ரத்த களரியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.
படக்குழுவினர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்
"உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்"
என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. அதற்கு விளக்கமானது பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.
இந்த குறளுக்கும் விடுதலை படத்திற்கும் எம்மாதிரியான ஒப்பீட்டு இருக்குமென பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேபிள் நடந்த சர்தார் 2 படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
- இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சர்தார் 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்
மேலிருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார்.
- அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.
முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்த்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.
இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்" என்று பேசினார்.
- இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
- படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை 'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்தோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






