விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஆர்யன் படக்குழு

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஆர்யன் படக்குழு
Published on

விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனையடுத்து அவர் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார்.

இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com