என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
- அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்பொழுது சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்று திருச்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில். சிவகார்த்திகேயனிடம் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரிடம் கூறிய வசனங்களை பற்றிக் கேட்டார்.
அதற்கு அவர், அந்த திரைப்படத்தில் நடித்ததுற்கு பெருமை படுகிறேன். விஜய் சாருக்கும், வெங்கட் பிரபு சாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள்தான் அடுத்த தளபதி என கூறினார்.
அதற்கு சிவகார்த்திகேயன் " அதெல்லாம் கிடையவே கிடையாது என்றும் ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று பதிலளித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி நடிகர்கள் தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சிம்பு, வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், அருள் நிதி அவர்களது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
மேலுன் தற்பொழுது ரஜினிகாந்த் துணை முதலமைச்சருக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது.
- 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்முட்டி நடிக்கிறார். 'புழு, பிரம்மயுகம்' போன்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்முட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இதை அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கம்பெனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
படத்தை பற்றிய இணைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும். படத்தின் ஒளிப்பதிவை ஃபைசல் அலி மேற்கொள்ளவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்".
- வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்". சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்.
நடிகை இனியா பேசியதாவது..
சீரன் டிரெய்லர் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.ப்படத்தில் பூங்கோதை எனும் பாத்திரத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என, மூன்று கெட்டப். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.
இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது…
இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன் நன்றி சார். இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். செண்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், " உதயநிதி ஸ்டாலின் அண்ணாவிற்கு எனது வாழ்த்துகள். இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்" என்றார்.
நடிகர் தனுஷ் தனது வாழ்த்து செய்தியில், "தமிழகத்தின் துணை முதலமைச்சரான அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "தமிழகத்தின் மாண்புமிகு துணை முதல்வராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள அன்புள்ள உதயஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்றார்.
இயக்குனர் வெங்கட் பிரபு தனது வாழ்த்து செய்தியில், "உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் உதயநிதி! நீங்கள் துணை முதல்வராகவும், தலைவராகவும், நம் மக்களுக்கு அற்புதங்களைச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்து செய்தியில், "இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
உதயநிதி அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்றார்.
நடிகர் அருள்நிதி, " வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் பலமாக வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார்.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "வாழ்த்துகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார். கடமையில் இளம் மற்றும் ஆற்றல் மிக்க அடக்கமான முடிவு சரியான நேரத்தில் சரியான விஷயம் நடந்தது " என்றார்.
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், "துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என்றார்.
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்" என குறிப்பிட்டிருந்தது.
- சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார்.
- ஆலியாபாட் தற்பொழுது ஜிக்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் ரன்பீர் கபூர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார். சர்வதேச அளவில் திரைக்கு வந்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது.
அடுத்ததாக ராமாயணம் என்ற படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீதையாக சாய்பல்லவி நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் ரன்பீர் கபூர் தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொணடாடினார்.
மனைவி ஆலியாபட், மகள் ரஹாவுடன் மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரை உலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆலியாபாட் தற்பொழுது ஜிக்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானதி. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெலியிட்டுள்ளது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார்.
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார்.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் `குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்.
- தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் `குடும்பஸ்தன்' திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். ராஜேஷ்வர் இதற்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குனராக இருந்தவர். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாகாரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுஜித் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, வைசாக் இசையமைத்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மணிகண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவரா படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தது.
- விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.
இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிரகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் 2-ம் நாள் முடிவில் இப்படம் 243 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான கோட் படத்தின் முதல் 2 நாள் வசூலை விட தேவரா திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது
- சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்கு அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 [வெள்ளிக்கிழமை] தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் [செப்டம்பர் 29] நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
➽சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
➽சிறந்த படமான ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

➽சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
➽சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
➽சிறந்த துணை நடிகராக 'அனிமல்' படத்தில் நடித்த அனில் கபூர் தேர்வாகியுள்ளார்
➽சிறந்த துணை நடிகையாக ''ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படத்திற்காக மூத்த நடிகை ஷபானா அஸ்மி தேர்வாகியுள்ளார்
➽சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்குஅனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்
➽'ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படம் சிறந்த கதைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது
➽சிறந்த தழுவல் [உண்மை சம்பவத்திலிருந்து] கதை விருதுக்கு '12த் பெயில்' தேர்வாகியுள்ளது
➽சிறந்த இசைக்காக அனிமல் படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஆவார்.
➽சிறந்த பாடல் வரிகள் விருதுக்கு அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .
மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று (செப்.29) ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் உள்ளிட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






