என் மலர்
சினிமா செய்திகள்
- ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் குடும்பஸ்தன் படத்தில் நடித்துள்ளார்.
- சினிமாகாரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குனராக இருந்தவர். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டரில் மணிகண்டன் ஒரு மிடில் கிளாஸ் ஆன் மகன் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒற்றையாளாக செய்வதுப் போல் சுமையாக இருக்கும் காட்சி அமைந்துள்ளது.
சினிமாகாரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுஜித் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, வைசாக் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யோகி பாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி போட் திரைப்படம் வெளியானது.
- இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
யோகி பாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி போட் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
படத்தில் யோகி பாபுவுடன் கவுரி கிஷன், மதும்கேஷ், எம்.எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், ஜெசி, சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ஓடிடி தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- லப்பர் பந்து படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்."
- அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி, கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை ரோகினி 'நஸீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்திருந்தார்.
- இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது மும்பை சென்றுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்திருந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது மும்பை சென்றுள்ளார். சென்னையிலிருந்த அவர் புதிய அலுவகம் ஒன்றை மும்பையில் அமைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலக தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தி படத்திற்கான சில பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதில் கலையரசன் சிகப்பு கொடியை பிடித்தவாறு இருக்கிறார். தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் தீவிரவாதத்தையும் , காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தின் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்கள் மனதில் கூடியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.
- அறிமுக இயக்குநர் அபிஷான் இப்படத்தை இயக்கவுள்ளார்
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
சசிகுமார் கருடன் திரைப்படத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்படமும் அந்த இடத்தை பெறும் என நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவில் ஐந்து மொழிகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
- தேவராவின் சுனாமியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதுடன் வசூலை அறிவித்துள்ளது படக்குழு.
ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.

இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தேவராவின் சுனாமியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்ற வசனத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை யுவாசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கு. அதிக திரையரங்குகளில் வெளியாவதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.
இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சாரி... நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார்
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார்.
- இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் என நமக்கு தெரிந்த விஷயம் தான். பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையவர்.
இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என்றும் தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும் ஐரோப்பாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அஜித் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.
- இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நீண்ட காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இடையில், உணவுத் துறையில் தனி கவனம் செலுத்தி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். "மிஸ் மேகி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் நடித்திருந்தார்
- 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் [89 வயது]. இவர் வயது மூப்பு காரணமாக இன்று [செப்டம்பர் 27] அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







