என் மலர்
சினிமா செய்திகள்
- முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
- விஜய் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படம் தொடர்பான பணிகளை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் 69 படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இந்த திரைப்படம் மூலம் அந்நிறுவனம் பாலிவுட்டில் களமிறங்குகின்றன.
கே.வி.என். மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
- மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில்தான் இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.
எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை" என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடல் வெளியாகியுள்ளது. பாடல் கதாநாயகனின் இண்ட்ரோ பாடலைப் போல் மிகவும் வைபாக
, எனர்ஜெடிக்காக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
- படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுனா படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது.96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுன் படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " அன்புள்ள தம்பி கார்த்தி, உங்கள் படமான மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்த் சாமி இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாய். இப்படம் பார்க்கும் பொழுது என் முகத்தில் ஒரு புன் சிரிப்பு இருந்துக் கொண்டே இருந்தது. இப்படம் என்னுடைய சிறுவயது நினைவுகளை நினைவுப்படுத்தியது. உன்னுடைய நடித்த தோழா திரைப்பட நியாபகங்கள் வந்தது. முழு படக்குழுக்கும் எனது பாராட்டுகள்." என கூறினார்.
நாகர்ஜூனா தற்பொழுது ரஜினிகாந்துடன் கூலி மற்றும் துனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், "இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தது என் குற்றவுணர்ச்சி என்றோ, என் பலவீனம் என்றோ நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நலனில் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்."
- அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்ததாக படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா
- மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா.
மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
தென்னிந்திய திரை உலகில் தான் நடித்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றதையொட்டி ஜானவிகபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தாவணி மற்றும் விதவிதமான தோற்றங்களில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் ஷாருக்கான் நடனமாடினார்.
- இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இணைந்து சமந்தாவின் ஊ சொல்றியா மாமா (தெலுங்கு) பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட இதை நினைத்து பார்த்ததில்லை என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித்துடன் ‘வீரம்’ என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா.
- இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
அஜித்துடன் 'வீரம்' என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா. ரஜினியுடன் அண்ணாத்த, காதல் கிசு கிசு, கலிங்கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற பெண் மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலா மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், " என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக கூறி வருகிறார். அவர் என்னை நேசிக்க சின்ன காரணம் கூட இல்லை. என்னையும், என் அம்மாவையும் குடித்து விட்டு டார்ச்சர் செய்ததுதான் கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் என்னால் அம்மாவுக்கு உதவ முடியவில்லை. என் மீது உண்மையில் பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கிடாதீங்க" என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "மகளே என்னை அப்பா என்று அழைத்ததற்காக நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. மகளுடன் வாக்குவாதம் செய்பவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும் போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறி இருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்யாமல் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன். நன்றாக படித்து வளர வாழ்த்துக்கள்" என்று கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- செல்வராகவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர்.
இயக்குனர் செல்வராகவன் கடைசியாகதுனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.அடுத்து செல்வராகவன் படத்தை இயக்கவுள்ளார் அதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
இது தவிர செல்வராகவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். தனக்கு தோன்றும் கருத்துகளையும் , அறிவுறைகளையும், சிந்தனைகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். சில வாரங்களுக்கு முன் நடந்த மகா விஷ்ணி மூட நம்பிக்கை பேச்சாளரை குறித்து விமர்சனம் செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு கருத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர்
காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள். என கூறியுள்ளார். இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுவரவு இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான், 'திமிருக்காரியே.'
- டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகா இணைந்துள்ள இந்தப் பாடலை ருத்ரா ஜித் இயக்கியுள்ளார்.
தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புதுவரவு இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான், 'திமிருக்காரியே.' கோவில் திருவிழா பின்னணியில் இந்தப் பாடல் உருவாகி இருக்கிறது.
முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் பாடலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். ஏ.கே. சசிதரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். பிரபல யூடியூபர்களான டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகா இணைந்துள்ள இந்தப் பாடலை ருத்ரா ஜித் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்தப் பாடலின் அறிவிப்பு மற்றும் டீசர், இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இதோடு அந்தோனி தாசனின் குரல் மற்றும் ஏ.கே. சசிதரனின் இசை இந்தப் பாடல் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இப்பாடலின் வரிகளை தவக்குமார் எழுதியுள்ளார்.
இதுதவிர ஸ்ரீதர் மாஸ்டரின் அசத்தல் நடன அசைவுகள் பாடலுக்கு கூடுதல் உற்சாகம் மற்றும் எனர்ஜியை சேர்த்துள்ளது. இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் வீடியோவுக்கு மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆதித் மாறன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப் பாடலை டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ இணைந்து தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






