என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். #Samantha
சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருபவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் வருகிறார்.

நாகார்ஜுனா குடும்பத்து மருமகள் இப்படி செய்யலாமா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறார். தற்போது அவர் மீண்டும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜிகேவிஎம் எலிபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன்’ திரைப்படம் சிவனைப் பற்றி பேச இருக்கிறது. #Mayan
பாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ’ கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி பிரியங்கா அருள்முருகன், பின்னணி இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார்.

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில், “நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீசரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம்” என்றார்.
இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா பேசுகையில், “மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி” என்றார்.
நடிகர் சௌந்தரராஜா பேசுகையில். “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை. படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன். போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.
மாயன் ஒரு பேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவாரசியமாக சொல்வது தான் மாயன். சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார்.
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.
டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
அனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். #Vishal #VishalAnisha
விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.

அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
படங்களை தவிர்த்து துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்ட அஜித், தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, செல்பி எடுத்துக் கொண்டார். #AjithKumar #ThalaAjith
சினிமா தவிர அஜித்குமாருக்கு கார், பைக் மீது தீவிர காதல் என்று அனைவருக்கும் தெரியும். எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆள் இல்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். இதில் ஆலோசகராக அஜித் இடம்பெற்றிருந்தார்.
இதுபோக, துப்பாக்கிச் சுடுதலில் அதீத ஆர்வம் கொண்டவர் அஜித். அவர் துப்பாக்கிச் சுடுதலுக்கான பயிற்சிக்கு வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அப்போது அவர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் சொல்லும் வீடியோவும் அவர் துப்பாக்கிச் சுடும் போட்டோவும் இணையத்தில் வைரலானது.

இதை தொடர்ந்து சமீபத்தில் அதே இடத்துக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண வந்திருந்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பும்போது ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டும், அவர்களுடன் தரையில் உட்கார்ந்து செல்பி எடுத்துக்கொண்டும் கார் ஏறும் வீடியோவும் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகிறது. #AjithKumar #ThalaAjith
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Indian2 #KamalHaasan #RJBalaji
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ஷங்கர் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை யாருமே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்குப் பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் மட்டுமே முடியாது என அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். `இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதியாக நடித்த கமல் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார்.
சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Indian2 #KamalHaasan #RJBalaji
காதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். #Arya #Sayyeshaa #AryaMarriage
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.
Happy Valentines Day 😍 #Blessed 😇 @sayyeshaapic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில், காதலர் தினமான இன்று சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்திய ஆர்யா, தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டார். அதில் இருவீட்டாரது ஆசீர்வாதத்துடன் மார்ச்சில் சாயிஷாவை கரம்பிடிப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
Happy Valentines Day! ❤️ pic.twitter.com/5sQfQJARGf
— Sayyeshaa (@sayyeshaa) February 14, 2019
சாயிஷாவும் ஆர்யாவுக்கு காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் ஈடுபட்டு உள்ளனர். #Arya #Sayyeshaa #AryaMarriage
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini
கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriDevi #AjithKumar #Shalini
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. #NGK #Suriya #NGKTeaser
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே' அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளத்தில் கசிந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உன்ன மாதிரியான ஆளுங்க அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும், கத்துக்குறேன் தலைவரே என அரசியல் வாசனையுடனான வசனங்களுடன் விவசாயம், சமூக பிரச்சனையையும் படத்தில் சொல்லவருவதாக தெரிகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #NGK #Suriya #NGKTeaser #NGKFire
என்ஜிகே டீசர்:
ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.
இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.

சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.

விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.
என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் ராகிருஷ்ணன் இயக்கும் ஆக்ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. #Simran #Trisha #SimTrishsNxT
பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் கலந்த சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கொரில்லா படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க உள்ளார்.
We are happy and proud to announce our next venture #Productionno4 featuring @trishtrashers and @SimranbaggaOffc - An Action Adventure directed by @MemyselfSRK ... Further updates to follow soon!#SimTrishsNxT. pic.twitter.com/Ju9EAdHkBB
— All In Pictures (@All_In_Pictures) February 13, 2019
சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. #Simran #Trisha #SananthRadhaKrishnan #SimTrishsNxT
10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
அந்த படங்களின் விவரம் வருமாறு:-
1. கலியுகக் கண்ணன்
2. ஒரு கொடியில் இரு மலர்கள்
3. முத்தான முத்தல்லவோ
4. சிட்டுக்குருவி
5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை
6. கடவுள் அமைத்த மேடை
7. சாட்டையில்லாத பம்பரங்கள்
8. வடை மாலை
9. ஒரே ஒரு கிராமத்திலே
10. மகுடி
11. பெண்கள் வீட்டின் கண்கள்
12. அவள் ஒரு அதிசயம்
13. அதிர்ஷ்டம் அழைக்கிறது
14. பெண்ணின் வாழ்க்கை
15. என் தமிழ் என் மக்கள்
16. புரட்சி வீரன் புலித்தேவன்.
இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.
வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.
"என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.
"புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-
"என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.
காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.
அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.
இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.
ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.
இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.
இவ்வாறு வாலி கூறினார்.
"பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-
"என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.
உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.
இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.
இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?
ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.
அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.
"என்ன தம்பி! டிïன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.
"இல்லை சார்! எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.
உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.
பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.
பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.
அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.
அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''
இவ்வாறு வாலி கூறினார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள்
ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-
எம்.ஜி.ஆர். படங்கள்
1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க! 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
சிவாஜி படங்கள்
1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு.