என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கவிராஜ் இயக்கத்தில் ஆரி - சாஷ்வி பாலா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala
    புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

    இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 



    இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 

    இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala

    சாம் கான் இயக்கி நடித்து, அவருடன், திவ்யகானா ஜெய்ன், எலிசபெத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காதல் மட்டும் வேணா' படத்தின் விமர்சனம். #KadhalMattumVena #KadhalMattumVenaReview #SamKhan
    படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கும் நாயகன் சாம் கானுக்கு திருமண ஆசை வருகிறது. ஆனால் அவரது வீட்டில் பெண் பார்ப்பதில் தீவிரம் காட்டாத நிலையில், ஒரு பெண்ணுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருடன் நெருங்கிப் பழக ஒரு நாள் திடீரென்று அந்த பெண் மாயமாகிறாள். இதுபற்றி போலீசில் புகார் அளிக்க, சில மாதங்களுக்கு முன்பே அந்த பெண் இறந்தவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    கடைசியில் சாம் கானின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அவருடன் பழகிய பெண் யார்? அந்த பெண் இறந்தது உண்மையா? அவரது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இயக்கம், நடிப்பு என இரண்டையும் கவனித்திருக்கிறார் சாம் கான். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாவது பாதி தொய்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. திவ்யகானா ஜெய்ன், எலிசபெத், ஹமீதா கட்டூன் என அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    சாந்தன் அன்பாஜாகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். ஜே.எஸ்,கே-வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `காதல் மட்டும் வேணா' சத்தியமாக வேண்டாம். #KadhalMattumVena #SamKhan #DivyanganaaJain #Elizabeth

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.


    படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.


    தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

    ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் இருவீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்தது என்றும் சாயிஷாவின் அம்மா கூறினார். #Arya #Sayyeshaa
    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் நீண்ட காலமாக பெண் பார்த்து வந்தனர்.

    ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த செய்தியை காதலர் தினமான நேற்று ஆர்யா உறுதி செய்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில் வரும் மார்ச் மாதம் ‘நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்‘ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சாயிஷாவுடன் சேர்ந்து எடுத்த படம் ஒன்றையும் பதிவிட்டார். இதே பதிவை சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனியிடம் கேட்டபோது, “எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும், ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது டுவீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

    ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்“ என்று கூறினார். சாயிஷா பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். #Arya #Sayyeshaa #AryaSayyeshaa

    பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிறகு நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், வேறு ஒருவருடன் அனுஷ்கா டேட்டிங் செய்வதாக கிசுகிசு பரவி வருகிறது. #AnushkaShetty
    அனுஷ்கா உடல் எடையை குறைத்த படத்தை வெளியிட்டதுதான் தென்னிந்திய சினிமாவின் பரபரப்பாக இருந்து வருகிறது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாக நீண்ட காலமாக செய்தி வருகிறது. சமீபத்தில் நடந்த ராஜமவுலி வீட்டு திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றது இந்த கிசுகிசுவை வலுவாக மாற்றியது. ஆனால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்னொரு கிசுகிசு கிளம்பியுள்ளது.

    அனுஷ்கா வெளிநாட்டு பாய் பிரெண்ட் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது பல்வேறு கிசுகிசுக்களை உருவாக்கி உள்ளது. இவர்தான் அனுஷ்காவின் புது காதலரா என்றும் பாய் பிரெண்ட்டுடன் அனுஷ்கா டேட்டிங் செய்கிறார் என்றும் வெவ்வேறு செய்திகள் தெலுங்கு மீடியாக்களில் வெளிவருகிறது.



    இதுபற்றி விசாரித்ததில்,’அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அந்த பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அனுஷ்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் என்றும், அவரது பெயர் லுக் கவுன்டின்ஹோ என்றும் தெரியவந்தது. இந்த விவரம் வெளியான பிறகு அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். #AnushkaShetty

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துவிட்டு தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ள சமீரா ரெட்டி, 2 வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறினார். #SameeraReddy
    சூர்யா ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    நடிப்புக்கு முழுக்குபோட்டு மும்பையில் கணவருடன் வசித்து வரும் சமீராவுக்கு ஹான்ஸ் என்ற மகன் இருக்கிறார். தற்போது 2-வது முறையாக கர்ப்பமாகியிருக்கும் சமீரா தான் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    மீண்டும் நடிக்க வருவீர்களா என்றதற்கு சமீரா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்ப்பம் அடைந்த சமயம் எனது உடல் எடை கூடியது. அதனால் பயந்தேன். எனது தோற்றத்தை கண்டு கிண்டல் செய்வார்களே என்று எண்ணினேன். இதையடுத்து வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.



    முதல் குழந்தை பிறந்த பிறகு நிம்மதியில் ஆழ்ந்தேன். தாய்மையை அனுபவிக்கத் தொடங்கினேன்.

    தற்போது உடல் எடைபற்றி கவலைப்படவில்லை. இன்னும் 2 வருடத்துக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நடிக்க வருவேன். இப்போதெல்லாம் நடிகைகளுக்கு எந்த காலத்திலும் நடிப்பதற்கு நிறையவே கதாபாத்திரங்கள் கிடைக்கிறது’ இவ்வாறு அவர் கூறினார். #SameeraReddy

    மார்வெல் சீரியசின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதவிருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss
    சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே பிரபல ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படங்களின் தொடர்ச்சியாக உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

    இதுபற்றி அவர் கூறும்போது ‘எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன்.



    உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்’ என்று கூறி இருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss

    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayalalithaaBiopic
    தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

    கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.



    சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சர்ச்சையான வேடம் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க நடிகைகள் யோசித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JayalalithaaBiopic #GauthamMenon #RamyaKrishnan #VijiChandrasekar

    ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
    பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

    ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.



    கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.

    காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.



    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif 

    எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
    எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

    சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.



    இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

    அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #ShraddhaSrinath #VidyBalan

    நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.



    இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.

    “எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.



    “திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party

    ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.
    ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.

    பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

    கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை'', கமலஹாசனின் "ஹேராம்'', "சத்யா'', "பார்த்தாலே பரவசம்'' ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு'', "அண்ணி'' ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.

    ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்'' (ராமாயணம்), "பாண்டவர் பூமி'' (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

    "நானும் இந்த நூற்றாண்டும்'' என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.

    1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.

    அப்போது "ஒளிவிளக்கு'' படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'' என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.

    இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

    "எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

    அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.

    "உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை'' என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.

    என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்'' என்று சொன்னேன்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

    வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.

    "திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி.'' இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்'' என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி.''

    பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா.''

    சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்'' படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள். இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா'' என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.

    1947-ல் வெளிவந்த "ஏவி.எம்'' தயாரித்த "நாம் இருவர்'', கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி'', ஜெமினியின் "நந்தனார்'', "அவ்வையார்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-

    மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி.

    1972-ல் "கலைமாமணி'' விருது பெற்றார்.

    "கலை வித்தகர்'' என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன.

    இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே'' படம், மத்திய அரசின் விருது பெற்றது.

    வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ'' பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.

    தலைசிறந்த பாடல்கள்

    தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)

    1. வள்ளலைப் பாடும் வாயால்...

    (படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)

    2. மானமெல்லாம் போனபின்னே...

    (`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)

    3. காற்றினிலே வரும் கீதம்...

    (`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)

    4. வெண்ணிலாவே...

    (`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)

    5. சிந்தையறிந்து வாடி...

    (`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)

    6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்...

    (`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

    7. வாழ்க்கை என்னும் ஓடம்...

    (`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)

    8. அருள் தரும் தேவமாதாவே...

    (`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)

    9. ஆடல் காணீரோ!...

    (`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)

    10. மணப்பாறை மாடு கட்டி...

    (`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)

    11. துணிந்தபின் மனமே...

    (`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)

    12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...

    (`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)

    13. மயக்கமா, கலக்கமா?...

    (`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

    14. சோதனை மேல் சோதனை...

    (`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

    15. நான் ஒரு சிந்து...

    (`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)

    16. வசந்த கால கோலங்கள்...

    (`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)

    17. சின்னச்சின்ன ஆசை...

    (`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)

    18. ஆயிரம் நிலவே வா...

    (`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)

    19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...

    (`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)

    20. அன்புக்கு நான் அடிமை...

    ×