என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh
    கனா படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷை தேடி நல்ல நல்ல வேடங்களும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் வருகின்றன. இந்த நிலையில் அவரது காதலர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    ‘நான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன். காதலை பொறுத்தவரை நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என் முதல் காதல் தோல்வி 12-ம் வகுப்பில் தொடங்கியது. என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்துகொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து இன்னொரு ரிலே‌ஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் பிரிய வேண்டியதாகி விட்டது. நான் மிகவும் உணர்வுபூர்வமானவள்.



    ஒருவருடன் காதலில் இருக்கும்போது அந்த காதல் முடிந்துவிட கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் துரதிர்ஷ்டம். என்னுடைய காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. எனவே இப்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு நடிகையாக இருந்துகொண்டு காதலிப்பது சிரமம். ஆனால் காதல் மிக அவசியமான ஒன்று. சில காதல் ஜோடிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் எனக்கான காதலருக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்கள்.
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



    சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நயன்தாரா பேசும் ‘லோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது’ என்ற வசனம் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் - நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் மோதலை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். #PulwamaAttack #RoboShankar
    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். 

    அவர்களது உடல் நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். #PulwamaAttack #RoboShankar
    அயோக்யா படப்பிடிப்பில் முக்கியமான காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்துள்ளார். #Vishal #Ayokya
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது.

    நடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு, சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.



    படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார்.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற இருக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.

    1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.

    நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.

    சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.

    இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.

    "சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.

    சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

    "உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

    "அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.

    "அப்படியா நினைக்கிறே?''

    "இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.

    "எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

    தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.

    "நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.

    "மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.

    அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:

    "நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.

    "தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!

    "சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''

    இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.

    நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

    1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!

    மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.

    படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.

    துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.

    என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.

    அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.

    தமிழில் பிசியான நடிகராகியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குநர் எழில் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். #GVPrakashKumar #Ezhil
    ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தையும் அதே நிறுவனமே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    இந்த படத்தின் துவக்க விழா எளிமையாக கோவில் ஒன்றில் நடைபெற்றது. காமெடி படமாக உருவாகும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார்.



    மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #GVPrakashKumar #Ezhil

    புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் உயிர்நீத்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaAttack #AmitabhBachchan
    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.

    இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaTerroristAttack #PulwamaAttack #AmitabhBachchan #PulwamaRevenge #RIPBraveHearts 

    அருண் காந்த் வி இயக்கத்தில் ராம்குமார் - தனுஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோகோ மாக்கோ' படத்தின் விமர்சனம். #GokoMako #GokoMakoReview #RamKumar #Dhanusha
    சிறு சிறு ஆல்பங்களுக்கு இசையமைத்து வரும் அருண் காந்த் வி, தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆல்பங்களுக்கு வீடியோ பதிவை உருவாக்க எண்ணுகிறார். அதற்காக கேமராமேனாக சாம்ஸை தேர்வு செய்கிறார்.

    ஒய்.ஜி.மகேந்திரனும், சந்தானபாரதியும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது மகன், மகளான நாயகன் ராம்குமாரும், நாயகி தனுஷாவும் காதலிக்கிறார்கள். இருவரும் ஒருநாள் சுற்றுலா செல்ல, அவர்களுடன் சாம்சும் செல்கிறார். இவர்களை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை தனது முதலாளியான அருண் காந்துக்கு அனுப்பி வைக்கிறார் சாம்ஸ்.

    கடைசியில், ராம்குமார் - தனுஷாவின் காதல் என்னவானது? அருண்காந்தின் கனவு நிறைவேறியதா? அந்த வீடியோவால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ராம்குமார், தனுஷா, அஜய் ரத்னம், சாம்ஸ், டெல்லி கணேஷ், தினேஷ், சந்தான பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சாரா ஜார்ஜ், வினோத் வர்மா என அனைத்து கதாபாத்திரங்களும் ஓரளவு திருப்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    படத்தை முழுக்க முழுக்க சிறிய ரக கேமராவிலேயே படமாக்கி இருக்கிறார் அருண் காந்த் வி. படத்தில் சொல்லும்படியாக பெரியதாக எதுவும் இல்லை என்றாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். இயக்குநரே படத்திற்கு இசைமைத்திருக்கிறார். சிறிய கேமரா என்பதால் காட்சிகள் அதற்கேற்றாற்போல் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `கோகோ மாக்கோ' கோமா தான். #GokoMako #GokoMakoReview #RamKumar #Dhanusha

    அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha
    அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.


    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.



    மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. #JR24 #JayamRavi #KajalAggarwal #HiphopTamizha

    ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
    ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

    காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.



    தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.



    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu
    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


    அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.



    குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu

    கவிராஜ் இயக்கத்தில் ஆரி - சாஷ்வி பாலா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala
    புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

    இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 



    இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 

    இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala

    ×