என் மலர்
சினிமா

வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிறகு நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், வேறு ஒருவருடன் அனுஷ்கா டேட்டிங் செய்வதாக கிசுகிசு பரவி வருகிறது. #AnushkaShetty
அனுஷ்கா உடல் எடையை குறைத்த படத்தை வெளியிட்டதுதான் தென்னிந்திய சினிமாவின் பரபரப்பாக இருந்து வருகிறது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாக நீண்ட காலமாக செய்தி வருகிறது. சமீபத்தில் நடந்த ராஜமவுலி வீட்டு திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றது இந்த கிசுகிசுவை வலுவாக மாற்றியது. ஆனால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்னொரு கிசுகிசு கிளம்பியுள்ளது.
அனுஷ்கா வெளிநாட்டு பாய் பிரெண்ட் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது பல்வேறு கிசுகிசுக்களை உருவாக்கி உள்ளது. இவர்தான் அனுஷ்காவின் புது காதலரா என்றும் பாய் பிரெண்ட்டுடன் அனுஷ்கா டேட்டிங் செய்கிறார் என்றும் வெவ்வேறு செய்திகள் தெலுங்கு மீடியாக்களில் வெளிவருகிறது.

இதுபற்றி விசாரித்ததில்,’அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அந்த பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அனுஷ்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் என்றும், அவரது பெயர் லுக் கவுன்டின்ஹோ என்றும் தெரியவந்தது. இந்த விவரம் வெளியான பிறகு அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். #AnushkaShetty
Next Story






