என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்த படங்களின் விவரம் வருமாறு:-

    1. கலியுகக் கண்ணன்

    2. ஒரு கொடியில் இரு மலர்கள்

    3. முத்தான முத்தல்லவோ

    4. சிட்டுக்குருவி

    5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை

    6. கடவுள் அமைத்த மேடை

    7. சாட்டையில்லாத பம்பரங்கள்

    8. வடை மாலை

    9. ஒரே ஒரு கிராமத்திலே

    10. மகுடி

    11. பெண்கள் வீட்டின் கண்கள்

    12. அவள் ஒரு அதிசயம்

    13. அதிர்ஷ்டம் அழைக்கிறது

    14. பெண்ணின் வாழ்க்கை

    15. என் தமிழ் என் மக்கள்

    16. புரட்சி வீரன் புலித்தேவன்.

    இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.

    வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.

    "என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.

    "புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.

    காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.

    அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.

    இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.

    ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.

    இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.

    இவ்வாறு வாலி கூறினார்.

    "பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-

    "என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.

    உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:

    விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.

    இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.

    இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?

    ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.

    அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.

    "என்ன தம்பி! டிïன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.

    "இல்லை சார்! எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.

    உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.

    பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

    பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.

    அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.

    அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள்

    ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-

    எம்.ஜி.ஆர். படங்கள்

    1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க! 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

    சிவாஜி படங்கள்

    1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் மிகவும் பிரபலமான மதுமிதா, அவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். #MadhuMitha
    பிரபல காமெடி நடிகை மதுமிதா. இவர் உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் நடித்திருந்தார். 



    மதுமிதாவிற்கும் அவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் வருகிற 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. மோசஸ் ஜோயல் தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். #STR #Maanadu #STRinMaanaadu
    சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் சிம்புவுடன் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #Jai
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தை மே மாதம் 1ம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர், பெற்றோர்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர் என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier #OruAdaarLove
    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. காதல் காமெடி கதையான இந்த படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் பிரியா வாரியர் அளித்த பேட்டியில் ‘கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலம் அடைந்ததும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்தார்கள். எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது.



    மொபைல் போன் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சில நாட்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்துவிட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர்’ என்று கூறி இருக்கிறார்.
    நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஐரா படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் வெளியாகியுள்ளது.



    சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    சின்னத்தம்பி யானைக்கு சினிமா நட்சத்திரங்களான ஆர்யா, சிபிராஜ், உள்ளிட்ட பலர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். #ChinnaThambi #Arya #Sibi
    சின்னத்தம்பி யானை கடந்த மாதம் கோவை பகுதியில் இருந்து டாப்சிலிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    சில நாட்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்தும் எந்த சேதங்களையும் ஏற்படுத்தாமல், வனவிலங்குகளின் வாழ்விடத்தில் உள்ள பிரச்னைகளை பற்றி எல்லோரையும் பேச வைத்துள்ளது.

    ‘சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று கோர்ட்டில் வனத்துறை கூறியிருந்தது.

    இதையடுத்து, ‘எதற்காக சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக்கூடாது? சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.



    இந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, ஒரு ஹேஷ்டேக் டுவிட்டரில் தமிழ்நாடு அளவில் டிரெண்டாகி வருகிறது.

    சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா, மதுக்கரை மகராஜா யானை கூண்டில் உயிரிழந்த படத்துடன் பதிவிட அதை நடிகர்கள் ஆர்யா, சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மீண்டும் பகிர்ந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
    பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் ஜெய், தற்போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். #Jai #Neeya2 #Party
    நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் அளித்த பேட்டி:-

    உங்கள் நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள்?

    நீயா 2, பார்ட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மம்முட்டிக்கு தம்பியாக மதுர ராஜா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறேன். புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார். பார்ட்டி படத்தில் வில்லத்தனம் கலந்த வேடம். அதற்கு அடுத்து கோபி நயினார் படம். இதில் வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடிக்கிறேன்.

    உங்கள் பலமே காதல் படங்கள் தான். அதை விட்டு விட்டு ஆக்‌‌ஷன் பாதைக்கு செல்வது ஏன்?

    ஒரு மாற்றம் வேண்டும் என்று காதல் பாதையில் இருந்து மாறினேன். அதன் பிறகு காதல் படங்கள் அமையவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன்.

    இரண்டு கதாநாயகர்கள் படங்களில் அதிகம் நடிப்பது ஏன்?

    இந்தி சினிமாவை போல் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அறிமுகமானதில் இருந்தே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் படங்களில்தான் நடித்துள்ளேன். நண்பர், பெரிய டைரக்டர் என்பதால் நான் இதை பெரிதாக பார்க்கவில்லை.

    வாலு போன்ற சில ஹிட் படங்கள் கையைவிட்டு போனதில் வருத்தம் உண்டா?

    இல்லை. அந்த படம் சிம்பு நடித்ததால் இந்த அளவுக்கு போனது. நான் நடித்து இருந்தால் எப்படி வந்து இருக்கும் என்று தெரியும்.

    எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?

    கவுதம் மேனன், முருகதாஸ். சசிகுமார் சாருடன் இன்னொரு படம் பண்ணவும் ஆசை.

    படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையே, ஏன்?

    எனது கூச்ச சுபாவம் தான் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராமல் இருந்ததற்கான காரணம். சரியான வழிகாட்டியும் இல்லை. இப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுதான் எனது மாற்றத்துக்கு காரணம். இனி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவேன்.



    சன்னி லியோனுடன் 2-வது படம் நடிக்கும் அனுபவம்? தொடர்பில் இருக்கிறீர்களா?

    இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவங்க ரொம்ப பிரெண்ட்லி. டுவிட்டரில் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.

    காதல் அனுபவம்?

    நிஜ வாழ்க்கையில் இதுவரை சீரியசான காதல் வரவில்லை. காதல் அமைந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்கும். இப்போது திருமணம் செய்ய திட்டம் இல்லை. சினிமாவில் இன்னும் சாதிக்கவேண்டி இருக்கிறது.

    உங்களுக்கு பிடித்த கதாநாயகி?

    அப்படி யாரும் ஸ்பெ‌ஷலாக இல்லை. நயன்தாராவுடன் நடித்த போது மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவர் மிகவும் மென்மையானவர்.
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #KGF #Yash #SanjayDutt
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

    கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.



    இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கின்றனர். இந்த பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் நடிக்கவே சஞ்சய் தத்திடம் பேசினார்கள். தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் முதல் பாகத்தில் சஞ்சய் தத்தால் நடிக்க முடியவில்லை.

    இப்படி இருக்க இரண்டாவது பாகத்தில் ஒப்பந்தமாகிறாரா என்பது விரைவில் தெரிய வரும். சஞ்சய் ஒப்பந்தமாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #KGF #Yash #SanjayDutt

    நானும் ரெளடி தான், கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாரா நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருக்கிறார். #VigneshShivn #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

    இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். 



    இந்த படத்துக்கு பிறகு ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய கதையாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VigneshShivn #Nayanthara

    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்‘. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது. 

    இந்த படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.



    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை ஒன்றை எழுதி உள்ளார். அந்த கதையில் நடிக்க திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. #Trisha #Saravanan

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 எம்.எல். படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கவிருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா பிரபலம் ஆனார். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பல பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த புகழை பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார்.

    தற்போது 90 எம்.எல் என்ற அடல்ட் ஒன்லி படத்தில் ஒவியா நடித்துள்ளார். டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வர அதற்கான பதிலையும் அதே பாணியில் கூறினார்.


    தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது.

    அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபுதேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர். #90ML #Oviyaa #STR #AnitaUdeep

    ×