என் மலர்
சினிமா செய்திகள்
- ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.
- இந்த விசா தற்போது குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

பாவனா
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

குஷ்பு
சமீபத்தில் நடிகர் சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்புவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு "ஐக்கிய அமீரகத்திற்கு நன்றி. கோல்டன் விசாவை தாமதமாக பெற்றுக் கொண்டதற்கு மன்னித்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
And here comes my #GoldenVisa
— KhushbuSundar (@khushsundar) October 9, 2022
Thank you to #UAEGovt for this. Sorry for picking it up so late. Humbled anyways. 🙏
And thank you #ECH for initiating and making this happen. 🙏🙏 pic.twitter.com/wVsqu63BZz
- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை உருவாக்கியுள்ளார்.
- இதன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது, இதில் கமல் கலந்துக் கொண்டார்.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் இருக்கிறார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கையில் சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.

தேவி ஸ்ரீபிரசாத்
பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கி கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் தசாவதாரம் படத்துக்கு கொடுத்த பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது. ஆரம்ப காலத்தில் தனி பாடல்கள் சினிமாவை விட பிரபலமாகி உள்ளன. பிறகு சினிமா அத்தனையையும் விழுங்கி விட்டது. படத்துக்கு என்ன இசை உண்டோ அதைத்தான் கிட்டத்தட்ட நூறு வருடமாக போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

கமல் - தேவி ஸ்ரீபிரசாத்
இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்பதால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன். இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும். இது இசைக்கும் நல்லது இசை ரசிகர்களுக்கும் நல்லது என்றார்
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
- இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியை சந்தித்த சரத்குமார்
இந்நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சரத்குமார், ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்' என பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள பெரிய பழுகுவேட்டையார் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் தமிழ் சீசன் -6 நேற்று கோலாகலமாக தொடங்கியது.
- இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் முழு பட்டியல்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ்டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். பிக்பாஸ் 6-வது சீனன் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். இதில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு, தொகுபாளினியும் நடிகையுமான மகேஸ்வரி, நகைச்சுவை நடிகர் அமுதவாணன், சீரியல் நடிகை ரஷிதா மஹாலக்ஷ்மி, நடன இயக்குனரும் நடிகருமான ராபர்ட் மாஸ்டர், நடன இயக்குனரும் சீரியல் நடிகையுமான ஷாந்தி, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, சீரியல் நடிகர் அசீம், பத்திரிகையாளர் விக்ரமன், தொகுப்பாளர் ஜனனி, ராப் பாடகர் ஏடிகே, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி.

சீரியல் நடிகர் மணிகண்டன், மாடல் ஷிரினா, சீரியல் நடிகை ஆயிஷா, டிரான்ஸ் மாடல் சிவன் கணேசன், பாடலாசிரியரும் ராப் பாடகருமான அசல், தனலட்சுமி, ஆடை வடிவமைப்பாளர் நிவா, சீரியல் நடிகை குயின்சி, தொகுப்பாளர் கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் கலந்துக் கொண்டனர். இவர்களில் யார் அந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டிசெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. அசீஅ
- சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
- இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

அர்னவ் - திவ்யா
ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அர்னவ் - திவ்யா
இந்நிலையில் நேற்று திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சின்னத்திரை நடிகர் அர்னவ், நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக கூறி போலீசில் புகார் அளித்தார். ஆனால் என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அர்னவ் - திவ்யா
எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும். எங்கள் குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் இப்படி பெரிதாக்கிவிட்டனர். திவ்யாவின் நண்பர்கள் தரப்பில் வக்கீல் ஒருவருடன் சேர்ந்து இதுபோல் செய்து வருகின்றனர். இதுவரை திவ்யா போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கிறார். என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்கப்போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. மீறி பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்.

அர்னவ் - திவ்யா
அர்னவ் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் திவ்யாவும், தன்னுடன் நடிக்கும் சக நடிகை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தேன். அர்னவ் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய் அளவில் மட்டுமே கூறி வருகிறார். மனதளவில் அவர் கூறவில்லை. 45 நாட்கள் என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனாலேயே நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால் ஏன் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
- இது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
இந்நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன்
அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

கஸ்தூரியின் பதிவு
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு மேலும் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா? அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு உடல் ரீதியான குறைபாடு இருந்ததா? என்பது பற்றி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துளளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ப்ரின்ஸ்
இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ப்ரின்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பாப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
+2
- கர்நாடகாவின் இயற்கை அழகை போற்றும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.
- அக்டோபர் 28ந் தேதி கந்தாட குடி திரைப்படம் திரைக்கு வருகிறது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். கன்னட மக்களால் அப்பு என்று அழைக்கப்படும் அவர் நடித்த கந்தாட குடி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வனவிலங்குகள், இயற்கை குறித்து ஆய்வு செய்யும் வகையிலும் கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போற்றும் வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 அன்று திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக புனித் மனைவி அஸ்வினி டுவிட்டர் பதிவிட்டார். இதை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார்.

அறிவு கூர்மையான ஆளுமையோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
- எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில், எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
- 'சர்தார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வருகிற அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார் - கார்த்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கார்த்தி
'சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.

சர்தார்
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் போஸ்டருடன் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர்.
- இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா
டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா
அவ்வபோது இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இருவரும் ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
- மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
- இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Title look of #DirectorRam's next #ProductionNo7 produced by @VHouseProd_Offl @sureshkamatchi starring @NivinOfficial @yoursanjali @sooriofficial will be out on October 11th at 12 PM 😊@eka_dop @UmeshJKumar @silvastunt @johnmediamanagr#PattanamRasheed #ChandrakantSonawane pic.twitter.com/QIxGCL2Zma
— Raja yuvan (@thisisysr) October 8, 2022






