என் மலர்
சினிமா செய்திகள்
- பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர்.
- இவர் தனது சமுக வலைதள கணக்கை நீக்கியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான 'குச் குச் ஹோத்தா ஹை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

கரண் ஜோகர்
தற்போது இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கரண் ஜோகர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். தனது சமூக வலைதள கணக்கை நீக்கியுள்ள கரண் ஜோக்கர் இது குறித்து தனது கடைசி பதிவு மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

கரண் ஜோகர்
அதில், "அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜியை விரும்புகிறேன். அதன் முதல் படியாக சமூக வலைதளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை" என தெரிவித்து உள்ளார். அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக புறக்கணிப்பு முழக்கங்கள் முன்னெடுக்கப்படுவதால் கரண் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி.
- இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மகேந்திர சிங் டோனி
இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் 'ரோர் ஆப்தி லையன்' என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மகேந்திர சிங் டோனி
இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கிக்’.
- இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கிக்
ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கிக்
இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இதன் லிரிக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இதன் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

சர்தார்
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாட்டுப்புற பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அனிருத்.
- இவர் மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அனிருத்
இந்நிலையில், அனிருத் முதன் முறையாக மலையாள படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அனிருத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
- இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் - கலையரசன்
இது குறித்து கலையரசன் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட நாட்களுக்கு பின்னர் மச்சி லோகேஷ் கனகராஜை சந்தித்துள்ளேன். எப்போதும் போல் தளபதி 67 படத்திலும் நான் இல்லை என்று கூறினார். அவரது யூனிவர்சின் சிறந்த விஷயங்கள் விரைவில் வரும்" என்று பதிவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Met Machi @Dir_Lokesh after a long time …. As usual he said I am not part of his movie #Thalapathy67 #friendslove better things on the way 🔥🔥🔥in his universe 💥💥💥 pic.twitter.com/rW4i7XKXUX
— Kalaiyarasan (@KalaiActor) October 9, 2022
- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

சூரரைப் போற்று
இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

சார்ப்பட்டா பரம்பரை
மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.
- இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இந்நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
- தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'ப்ரின்ஸ்'.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

பிரின்ஸ்
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

பிரின்ஸ்
இதில் நடிகர் சத்யராஜ் ஒவ்வொரு சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆசைப்படும் பரிசை அவர்கள் சார்பாக சிவகார்த்திகேயனுக்கு நான் கொடுக்கிறேன் என்று கூறி முத்தம் ஒன்றை கொடுத்தார். மேலும், பணம் காசு எல்லாம் பெரிது இல்லை. நீங்கள் கோடிக்கணக்கில் சிவகார்த்திகேயனுக்கு பரிசு கொடுத்தாலும் அவருக்கு சந்தோஷம் இருக்காது. ஆனால் அன்பாக நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று கூறினார்.
- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
- எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைஉலக பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் சில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா இருவரும் இதே போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
அமீர்கான்-கிரண் ராவ் தம்பதியர் ஆசாத் ராவ் என்ற குழந்தையையும், ஷாருக்கான்-கவுரிகான், சன்னி லியோன்-டேனியல், பிரித்தி ஜிந்தா ஆகியோர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் பிரித்தி ஜிந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவத்திற்குப் பிறகு வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியிருக்கிறார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இதற்கான தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாகவும் வாடகைத்தாயாக இருந்தவர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிடும்போது எங்கள் உயிர், உலகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குழந்தைகளுக்கு வைத்த பெயர் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் தரப்பில் விசாரித்தில் இது பெயர் அல்ல என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றிய விபரங்கள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது. உடல்நல பிரச்சினைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத்தாய் முறையாகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத்தாயின் கருப்பையில் பொருத்துவர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
அந்த வாடகைத்தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி குழந்தை பெற்றுக்கொண்டால், வாடகைத்தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. இந்த முறையைப்பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள திரையுலகினர் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது நயன்தாரா சென்னையில் பிரபல மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தைகளின் அருகிலேயே இருந்து வருகிறார். விக்னேஷ் சிவன் இப்போதே குழந்தைகளுக்கென்று தனியாக உடைகளையும், விலை உயர்ந்த பொம்மைகளையும் வாங்கிக் குவிப்பதில் பிசியாக இருக்கிறார்.
- ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.
- இந்த விசா தற்போது குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

பாவனா
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

குஷ்பு
சமீபத்தில் நடிகர் சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்புவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு "ஐக்கிய அமீரகத்திற்கு நன்றி. கோல்டன் விசாவை தாமதமாக பெற்றுக் கொண்டதற்கு மன்னித்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
And here comes my #GoldenVisa
— KhushbuSundar (@khushsundar) October 9, 2022
Thank you to #UAEGovt for this. Sorry for picking it up so late. Humbled anyways. 🙏
And thank you #ECH for initiating and making this happen. 🙏🙏 pic.twitter.com/wVsqu63BZz
- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை உருவாக்கியுள்ளார்.
- இதன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது, இதில் கமல் கலந்துக் கொண்டார்.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் இருக்கிறார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கையில் சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.

தேவி ஸ்ரீபிரசாத்
பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கி கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் தசாவதாரம் படத்துக்கு கொடுத்த பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது. ஆரம்ப காலத்தில் தனி பாடல்கள் சினிமாவை விட பிரபலமாகி உள்ளன. பிறகு சினிமா அத்தனையையும் விழுங்கி விட்டது. படத்துக்கு என்ன இசை உண்டோ அதைத்தான் கிட்டத்தட்ட நூறு வருடமாக போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

கமல் - தேவி ஸ்ரீபிரசாத்
இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்பதால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன். இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும். இது இசைக்கும் நல்லது இசை ரசிகர்களுக்கும் நல்லது என்றார்






