மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கந்தாட குடி திரைப்பட டிரைலருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கர்நாடகாவின் இயற்கை அழகை போற்றும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.அக்டோபர் 28ந் தேதி கந்தாட குடி திரைப்படம் திரைக்கு வருகிறது.
பிரதமர் மோடி, புனித் ராஜ்குமார் 
பிரதமர் மோடி, புனித் ராஜ்குமார் 
Published on

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். கன்னட மக்களால் அப்பு என்று அழைக்கப்படும் அவர் நடித்த கந்தாட குடி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வனவிலங்குகள், இயற்கை குறித்து ஆய்வு செய்யும் வகையிலும் கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போற்றும் வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 28 அன்று திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக புனித் மனைவி அஸ்வினி டுவிட்டர் பதிவிட்டார். இதை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார். 

அறிவு கூர்மையான ஆளுமையோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com