சாதி, மதம்னு இன்னுமாடா அடிச்சிக்குறீங்க.. வைரலாகும் சிவகார்த்திகேயன் பட டிரைலர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ப்ரின்ஸ்
ப்ரின்ஸ்
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துளளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ப்ரின்ஸ்
ப்ரின்ஸ்

ப்ரின்ஸ்

இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ப்ரின்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பாப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com