என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர்.
    • இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    அவ்வபோது இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இருவரும் ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 

    • மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
    • இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இயக்குனர் ராஜமவுலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறி உள்ளார்.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும் அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதமும் எழுந்து உள்ளது.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    இந்த் நிலையில் பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறி உள்ளார். 'நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல என கூறி உள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது படத்தில் குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதத்தின் சித்தரிப்பு குறித்து பேசினார்.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    ராஜமவுலி கூறியதாவது:- இந்து மதம் மற்றும் இந்து தர்மம் ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆர்ஆர்ஆர் இந்து நூல்களுடன் தொடர்புடைய பாத்திரங்களை கடன் வாங்குகிறது, குறிப்பாக மையக் கதாபாத்திரங்களை இந்துக் கடவுள்களின் பதிப்புகளாகவும் விளக்கலாம்.

     

    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    பலர் அது இந்து மதம் என்று நினைக்கிறார்கள், இந்துமதம் தற்போதைய சூழலில் உள்ளது. ஆனால் இந்து மதத்திற்கு முன், இந்து மதம் தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை, இது ஒரு தத்துவம். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் மிகவும் இந்து. படத்தில் நான் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான்.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    ஆர்ஆர்ஆர்-ல் ராஜு என்ற கதாபாத்திரம் ஒரு 'துறவி' உருவமாக மாறும் ஒரு காட்சியை நினைவு கூர்ந்த ராஜமவுலி, ராஜு பகவத் கீதையில் இருந்து ஒரு சமஸ்கிருத வசனத்தை ஓதுகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்ன விஷயமாக இதைப் பார்க்கலாம், எனவே இது ஒரு இந்து மத வசனம், ஆனால் நீங்கள் அதன் பொருளைப் பார்த்தால், ஜாதி மற்றும் எங்கு பிறந்தார் என்பதைப் பொருட்படுத்தாமல் இது இந்தியர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, நீங்கள் செய்யும் செயலின் பலனைப் பார்ப்பது அல்ல. அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. அதனால், நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவன் என கூறினார்.

    • மீன் குழம்பும் மண் பானையும், புத்தம் புது காலை, பாவக் கதைகள், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களின் நடித்து பிரபலமடைந்தவர் காளிதாஸ் ஜெயராமன்.
    • இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் ஆவார். இவர் 'மீன் குழம்பும் மண் பானையும்', 'புத்தம் புது காலை', 'பாவக் கதைகள்', 'ஒரு பக்க கதை' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

     

    குடும்பத்துடன் காளிதாஸ் ஜெயராமன்

    குடும்பத்துடன் காளிதாஸ் ஜெயராமன்

    சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

     

     காளிதாஸ் ஜெயராமன் - தாரினி

     காளிதாஸ் ஜெயராமன் - தாரினி

    காளிதாஸ் சமீபத்தில் காதலில் விழுந்திருப்பதாக தெரிவித்தார். தனது காதலியின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது காதலியின் பெயர் தாரினி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயாகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின்னர் உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

     

    ஆர்யா-34

    ஆர்யா-34

    இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 34-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

    • நடிகர் அர்னவை திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சீரியல் நடிகை திவ்யா அறிவித்திருந்தார்.
    • கணவர் அர்னவ் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    சின்னத்திரை நடிகையான திவ்யா, தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது 3 மாத கர்ப்பிணியான தன்னை, அர்னவ் மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    பதிலுக்கு அர்னவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார். ஆனாலும் திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திவ்யா, அர்னவ் அளித்த புகாரில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்களுடன் சென்று மீண்டும் சிகிச்சை பெற்றார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    பின்னர் வெளியே வந்த திவ்யா, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது, அர்னவ், என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார். நான் முஸ்லிமாக மதம் மாறிய பின்னரே திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் எண்ணை 'பிளாக்' செய்து விட்டார்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    எனது உடல் நலம் சரியான உடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவேன். இது தொடர்பாக அரணவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு திவ்யா நிருபர்களிடம் கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

     

    திவ்யா

    திவ்யா

    இதற்கிடையில் நேற்று தனது மனைவி திவ்யா, மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருத்துவ சீட்டையும், அவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சியையும் அர்னவ் வெளியிட்டார். அதில் திவ்யா, அர்னவ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியும், சண்டையிடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    கணவன், மனைவி இருவரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் புகார்களை கூறி வருவதுடன், தங்களது தரப்பில் உள்ள ஆதாரங்களையும் வெளியிட்டு வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினி சென்றுள்ளார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்.


    ஷாருக்கான்

    மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார் நஞ்சம்மா.
    • இவர் தற்போது லண்டனில் உலாவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர்.


    நஞ்சம்மா

    அந்த படத்தில் இவர் 'கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்' என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது.

    இந்த நிலையில் அவரை லண்டனில் உள்ள லிவர்பூலில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க அங்குள்ள அமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நஞ்சம்மா, டெல்லியில் விருது வாங்கிய கையோடு விமானத்தில் லண்டன் பறந்தார்.


    பழனிசாமி - நஞ்சம்மா

    லிவர்பூல் நகரில் தங்கியுள்ள அவர் அங்குள்ள தெருக்களில் உற்சாகமாக வலம் வரும் காட்சிகளை அவருடன் சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். பின்னர் அந்த காட்சிகளை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. நஞ்சம்மா லண்டன் வீதிகளில் நடைபோடும் காட்சிகளை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.


    பிரின்ஸ்

    'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 9) வெளியாகவுள்ளது. இதனை படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    பிரின்ஸ்

    'பிரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • தற்போது இவர் மன்னன் ராஜ ராஜ சோழன் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்பது பற்றி பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.


    1790 - ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் இருந்து மருவிய இந்து என்ற பெயரிடப்பட்டது. குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்? மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா?

    இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்? கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?


    யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா? காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு - வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

    சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.


    மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது? புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

    மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா? விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.


    அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ்  என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது. நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.
    • இவரின் அலுவலகத்தில் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார்.

    தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார். அவர் அலுவலக வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழை கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.


    சமுத்திரக்கனி

    அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. அலுவலக ஊழியர்கள் இதுபற்றி சமுத்திரக்கனியின் மானேஜர் விவேக்குக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


    சமுத்திரக்கனி

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் புகுந்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிக்பாஸ் பிரபலங்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.


    அஜித் - பிக்பாஸ் பிரபலங்கள்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.


    பாவனி பதிவு

    இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பாவனி, அஜித்தை அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.



    ×