என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.
    • இவரின் அலுவலகத்தில் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார்.

    தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார். அவர் அலுவலக வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழை கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.


    சமுத்திரக்கனி

    அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. அலுவலக ஊழியர்கள் இதுபற்றி சமுத்திரக்கனியின் மானேஜர் விவேக்குக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


    சமுத்திரக்கனி

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் புகுந்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிக்பாஸ் பிரபலங்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.


    அஜித் - பிக்பாஸ் பிரபலங்கள்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.


    பாவனி பதிவு

    இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பாவனி, அஜித்தை அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.



    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த படம் 'வெந்து தணிந்தது காடு'.
    • இப்படத்தின் மல்லிப்பூ பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்நிலையில், இயக்குனர் சீமான் 'மல்லிப்பூ' பாடலை அண்மை நாட்களாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


    மல்லிப்பூ பாடல்

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.


    சீமான் பதிவு

    அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!

    அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கவுதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.


    விடுதலை

    இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    விடுதலை

    இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது . இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கலர் தமிழ் தொலைக்காட்சி ஜமீலா' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' ஆகிய இரண்டு புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது.
    • இந்த தொடர் அக்டோபர் 10-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறாது.

    பெண் உரிமையை எடுத்துரைத்து அவர்களை கவுரவிக்கும் வகையில் 'ஜமீலா' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' ஆகிய இரண்டு புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ். இதில் ஜமீலா தொடர் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கும் 'உள்ளத்தை அள்ளித்தா' தொடர் வரும் 10– ஆம் தேதி இரவு 7 மற்றும் 9 மணிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.


    ஜமிலா - உள்ளத்தை அள்ளித்தா

    இது குறித்து நடிகை தன்வி ராவ் கூறுகையில், " ஜமீலா தொடரில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் தனது லட்சியத்தை அடையத் துடிக்கும் பெண்ணாக இதில் நடித்திருக்கிறேன். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் தொடராக அமையும்" என்று தெரிவித்தார்.

    உள்ளத்தை அள்ளித்தா தொடரில் நடித்துள்ள நடிகை வைஷ்ணவி கூறுகையில், " ஆண்கள் மட்டுமே தங்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் என்ற கொள்கைகளை மாற்றி பெண்களாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தொடர் உள்ளது. எனது அன்பான பயணம் இனி வரும் நாட்களில் நம் பார்வையாளர்களை மேலும் கவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 67.
    • இந்த படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.


    நந்தினி - தீனா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை மைனா நந்தினி மற்றும் விஜய் டிவி புகழ் தீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை அன்ன ராஜன் சிம் கார்டு வாங்குவதற்காக தனியார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
    • நடிகைக்கும் ஊழியருக்கும் இடையில் சிம் கார்டு வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ரண்டு, ஐயப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அன்ன ராஜன். இவர் ஆலுவாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிம் கார்டு வாங்குவதற்காக சென்றுள்ளார்.


    அன்ன ராஜன்

    அப்போது, ஊழியருக்கும் நடிகைக்கும் இடையில் சிம் கார்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து நடிகை அன்ன ராஜன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் மீது ஆலுவா போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சுமுகமாக பேசி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.


    காபி வித் காதல்

    இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


    காபி வித் காதல்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    காபி வித் காதல் போஸ்டர்

    காபி வித் காதல் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ரத்தம்.
    • இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் சி.எஸ். இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    ரத்தம்

    இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில் இயக்குனர் சி.எஸ் அமுதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "கடினமான உழைப்பாளிகள் ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் சமமான அர்ப்பணிப்புடன் உள்ளனர். மஹிமா நம்பியார் அவரது வரிகளை தீவிரமாக கற்றுக்கொண்டபோது" என ஜாலியாக கலாய்த்து பதிவிட்டுள்ளார்.


    மஹிமா நம்பியார்

    இந்த பதிவை பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "அவங்க கடினமான உழைப்பை பாக்கும் போது அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மஹிமா நம்பியார், விஜய் ஆண்டனியின் பதிவிற்கு, "அய்யய்யோ. என் ஸ்டைல் ​​போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு." என கேலியாக பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் 'ஃபர்ஹானா'.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    ஃபர்ஹானா

    மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    ஃபர்ஹானா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஓர் காதல் கனா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் “மிரள்”.
    • இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டனர்.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    மிரள்

    இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் .

    ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    மிரள்

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெட்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
    • இவரின் கைவசம் தற்போது கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

    2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

     

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி தான் மெட்டு அமைத்த முதல் பாடல் குறித்து நேர்காணலில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அந்த பாடலை ரசிகர் ஒருவர் பாடலாக மாற்றி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை விஜய் ஆண்டனி பகிர்ந்து அந்த பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் கேவலமான மெட்டு. சில சமயம் முதல் பாடல். போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    ×