என் மலர்
சினிமா செய்திகள்
- இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
- இவரின் கைவசம் தற்போது கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

விஜய் ஆண்டனி
இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி தான் மெட்டு அமைத்த முதல் பாடல் குறித்து நேர்காணலில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அந்த பாடலை ரசிகர் ஒருவர் பாடலாக மாற்றி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை விஜய் ஆண்டனி பகிர்ந்து அந்த பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் கேவலமான மெட்டு. சில சமயம் முதல் பாடல். போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் சைஃப் அலி கான் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்,
- இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
விக்ரம் வேதா வெற்றிக்கு பிறகு நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிபுருஷ்
இதில், ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும் ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகானும் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

ஆதிபுருஷ்
இந்நிலையில் நடிகர் சைஃப் அலி கான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை யாராவது 'லார்ட் ஆப் ரிங்ஸ்' திரைப்படம் போன்று பிரம்மாண்டமாக எடுத்தால் அதில் கண்டிப்பாக நான் நடிப்பேன். இது குறித்து நடிகர் அஜய் தேவ்கனுடன் 'கச்சே தாகே' திரைப்படத்தில் நடிக்கும் போதே கலந்துரையாடி இருந்தேன்.
'இது எங்கள் தலைமுறையின் கனவுப் படம்' பாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இதுபோன்ற ஒரு திட்டத்தில் பணியாற்ற நான் விரும்புகிறேன்" என்று பேசினார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தில் உலக அளவில் நல்ல வசூலை குவித்து வருகிறது
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் வெளியான முதல் வாரத்தில் ரூ.100கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை குவித்த படமாக முதல் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகமுழுவதும் இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 100கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
- நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
- 'சர்தார்' திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கார்த்தி
இந்நிலையில், இப்படத்தின் புது அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
The first song of #sardar will be sung by our #vandhiyathevan @karthi_offl … it's an ode to our classical theatre performances … the song is a rural folk track named #ஏறுமயிலேறி #yerumayileri . @psmithran #princepictures @dhilipaction @geroge_dop @AntonyLRuben .. #yugabarathy pic.twitter.com/RvYfQQ4kAs
— G.V.Prakash Kumar (@gvprakash) October 7, 2022
- நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகை சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
- இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த 'முதல்வன்' படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் சுஷ்மிதா சென் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சுஷ்மிதா சென்
இவர் தற்போது வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி, சுஷ்மிதா சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் 'தாலி' என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்குகிறார்.

தாலி போஸ்டர்
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், "இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வலிமை, பீஸ்ட், விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.
- இந்த படங்களில் முதல் நாள் அதிகபடியாக வசூல் செய்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான வருகையை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல மேளம் அடித்து பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி தீர்ப்பார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜய்யின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரைப்பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியானது.
இந்நிலையில் 2022ல் திரையரங்குகளில் வெளியாகி தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் செய்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் படம் ரூ.39 கோடியும், வலிமை படம் ரூ.28 கோடியும், பொன்னியின் செல்வன் ரூ.26 கோடியும், விக்ரம் திரைப்படம் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வெளியான பீஸ்ட் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- இவரது சிகிச்சைக்கு பார்த்திபன், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

போண்டாமணி
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

போண்டாமணி
இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நடிகர் பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி கடந்த 27-ம் தேதி வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் போண்டாமணியை சந்தித்த அமைச்சர்
இதனிடையில் மருத்துவமனையில் உதவி செய்வதுபோல் நடித்து ராஜேஷ் என்கிற பிரித்தீவ் என்பவர் போண்டாமணியுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். அவருக்கு உதவியாக கடைகளுக்கு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனை நம்பி அவருடைய மனைவி மாதவி மருந்து வாங்கி வர அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

போண்டாமணி
மருந்து வாங்கி வருவதாக சென்ற ராஜேஷ் ஏடிஎம் கார்டிலிருந்து நகைக்கடையிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கியதாக மாதவியின் செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போண்டாமணியின் மனைவி மாதவி இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் ராஜேஷை தேடி வந்தனர்.

போண்டாமணி
இந்நிலையில் ராஜேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைது செய்த ராஜேஷிடமிருந்து பணம் எதுவும் மீட்டதாக தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போண்டாமணியிடம் கருணை இல்லாமல் அவரை ஏமாற்றியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ்.
- இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பிக்பாஸ் வீடு
இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 6-வது சீனன் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 9-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சீசன் பிக்பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரும் வகையில் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் வரவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் வீடு
இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 முதல் 10.30 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 9.30 முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
- இப்படத்தின் வசூல் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார்.

சிரஞ்சீவி - நயன்தாரா
தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தை இயக்கியுள்ளார்.

மோகன் ராஜா - சிரஞ்சீவி
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கானும் நடித்துள்ளனர். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காட் ஃபாதர் வசூல் அறிவிப்பு
இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காட் ஃபாதர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.38 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
HUMONGOUS BLOCKBUSTER #GodFather off to a sensational start 💥Worldwide gross of 38 CR+ on DAY 1 🔥Book your tickets now! 🔥-https://t.co/qO2RT7dqmM#BlockbusterGodfather 🔥@KChiruTweets @BeingSalmanKhan @jayam_mohanraja #Nayanthara @MusicThaman @ActorSatyaDev @ProducerNVP pic.twitter.com/oEgdbINa2d
— Konidela Pro Company (@KonidelaPro) October 6, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1௦௦ கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் - கார்த்தி
இப்படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் பலருக்கும் திரைதுறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை தொலைப்பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

ரஜினி - கமல்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் - கார்த்தி
மேலும் "கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகி’.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தில் ஒரு பெண் முதன்மை நாயகி கதாப்பாத்திரத்தில் ரூபா கொடுவயூர் நடித்துள்ளார். மேலும் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஸ்ரீஜித்சாரங் இணைந்து தயாரித்துள்ளனர்.

எமகாதகி
தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.






