என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு ரிவால்வர் ரீட்டா படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷான் ரோல்டன் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. .

    கடைசியாக கதை நாயகியாக  கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ரகு தாத்தா படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார். 

    • படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
    • நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

    குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் உருவாகி உள்ளது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .

    இப்படம் நவம்வர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

    • தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
    • நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

    இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.

    இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.  

    கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.

    முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

    ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.

    நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.

    ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

    கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்

    • ஆபத்தான வேடங்களில் நடிக்கும்போதுதான் ஒரு தொழில் மதிப்புமிக்கது.
    • குடும்பத்தினர் அதைப் பற்றி கொஞ்சம் கவலைப்படும் அளவுக்கு அது இருக்க வேண்டும்.

    2023 ஆம் ஆண்டு வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்குப் பிறகு, நாட்டின் பாதி பேர் தன்னைக் கொல்ல விரும்பினர் என்றும் மற்ற பாதி பேர் தன்னை ஆதரித்து பாதுகாத்ததாகவும் நடிகை அதா சர்மா கூறியுள்ளார்.

    அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதா சர்மா, "ஆபத்தான வேடங்களில் நடிக்கும்போதுதான் ஒரு தொழில் மதிப்புமிக்கது. நான் '1920' திரைப்படத்துடன் துறையில் நுழைந்தேன். எனது முதல் படம் ஒரு பெரிய சாகசம். 'தி கேரளா ஸ்டோரி' வரும் வரை நல்ல ஸ்கிரிப்டுக்காகக் காத்திருந்தேன்.

    அந்தப் படத்திற்குப் பிறகு, எனது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அதன் பிறகு, நான் நடித்த 'பஸ்டர்: தி நக்சல் ஸ்டோரி' படங்களின் போது கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டேன். நாட்டின் பாதி பேர் என்னைக் கொல்ல விரும்பினாலும், மற்ற பாதி பேர் என்னைப் பாராட்டி என்னைப் பாதுகாத்தனர்.

     கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இருக்க வேண்டும். என் கதாபாத்திரத்தில் உணர்ச்சிபூர்வமான தொடுதல் இருக்க வேண்டும், என் குடும்பத்தினர் அதைப் பற்றி கொஞ்சம் கவலைப்படும் அளவுக்கு அது இருக்க வேண்டும்.

    அப்படிப்பட்ட கூறுகள் எதுவும் இல்லையென்றால், நான் ஏன் அந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்?" என்று தெரிவித்தார்.   

    • அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது
    • சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார்.

    நடிகர் சூரி, அஜித் குமரருடன் நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.

    அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.

    கடைசியாக சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி வெளியாகி இருந்தது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார்.

    இந்நிலையில் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் சூரி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    பிரபல நடிகருக்கும்.. அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும் கதை "காந்தா".

    பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் கதை நகருகிறது. அந்த காலத்தில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அவரை உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் நாயகி பாக்யஸ்ரீயை சுற்றிதான் கதையின் முதல் பாதி அமைந்திருக்கிறது.

    இயக்குநர் சமுத்திரகனி கனவு கதையாக உருவாக்கும் திரைப்படம் சாந்தா. சாதாரணமாக இருந்த துல்கர் சல்மானை நடிப்பின் சக்கரவார்த்தியாக காரணமான சமுத்திரகனியின் படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.

    ஆனால், கதையின் கிளைமேக்ஸில் மாற்றம் வேண்டும் என்று துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறார். என் கதையை எப்படி நீ மாற்ற முயற்சிக்கலாம் என்று துல்கர் சல்மானுக்கும்- சமுத்திரகனிக்கும் இடையே ஈகோ பிரச்சனை எழுகிறது.

    இந்த ஈகோ பிரச்சனைக்கு இடையே படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று சமுத்திரகனி நாயகனின் அடாவடியை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கிளைமேக்ஸூடன் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே, துல்கர் சல்மான் மற்றும் நாயகி பாக்யஸ்ரீ இடையே புரிதல் ஏற்படுகிறது. பாக்யஸ்ரீயின் உதவியை சமுத்திரகனி நாடுகிறார்.

    இந்த மோதல் இறுதியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது படத்தின் மீதிக்கதை

    நடிகர்கள்

    பழம்பரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், நடிப்பில் பிச்சி உதறியிருக்கிறார். அவரது தோற்றம், பிரமிக்க வைக்கும் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி வேறு ஒரு பரிணாமத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ-க்கு, அந்த காலத்து நடிகையின் முக அழகு. கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

    காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு அதிரடியாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    பழம்பெரும் நடிகர் ஒருவரின் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கதையை எழுதியிருக்கிறார். அதை திரைக்கதையாக மாற்றி சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும், ஆங்காக்கே சில தொய்வுகள் இருந்தாலும் படம் ரசிக்கும்படியும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.

    இசை

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கச்சிதம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு அந்த காலத்திற்கே நம்பை பயணிக்க வைக்கிறது.

    • வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன்.
    • என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ்பெற்றார்.

    இந்நிலையில், பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், "அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பணமோசடி புகாரில் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் போலி என்று நடிகர் தினேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய தினேஷ், "கருணாநிதி என்ற நபர் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை தாக்கியதாகவும் பொய்யான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

    வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன். அதற்காக என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை.
    • ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகரான சரத்குமாரிடம், முந்தைய காலகட்டத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதிய படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற படங்கள் வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சரத்குமார், "நாட்டாமை படம் சாதிய படம் கிடையாது. அது ஒரு பஞ்சாயத்துத் தலைவர் கதை. அதே போல் தேவர் மகன் படம் அந்த பகுதியில் படம் எடுத்ததால் தேவர் மகன் என்று பெயர் வைத்தார்கள்.

    பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை. ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள். அதனால் பழைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது, அது நடக்கக்கூடாது என்று படம் எடுப்பது தவறில்லை" என்று தெரிவித்தார்.

    • ஆனந்த கிருஷ்ணன் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்நிலையில், நான் வயலன்ஸ் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ள 'கனகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

    திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான ரெட்ரோ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் "விடாமுயற்சி". இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், விமாமுயற்சி படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, மகிழ் திருமேனி தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த மேற்கொண்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.
    • புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.

    ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

    ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
    • பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில்,

    அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×