என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
    • திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டுள்ளார்.

    பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நான் கடவுள்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராஜேந்திரன். பின்னர், வில்லன், காமெடி உள்பட பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என புனைப்பெயரும் உண்டு. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    இதனிடையே, அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் மனோகர் , சதீஷ், முல்லை உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980 களின் கிராமப்புற பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 'ராபின்ஹுட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டுள்ளார். டிரெய்லர் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
    • முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்தார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயத் புத்தா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலாயத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.

    முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்த பிருத்விராஜ் மீண்டும் நாவலை தழுவிய படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.     

    • Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது.
    • பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இணையத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் 'Husky Dance' நடனம் இணையத்தில் ட்ரெண்டானது.

    'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இந்நிலையில், 'Husky Dance' ட்ரெண்டிங்கில் நடிகை மீனா இணைந்துள்ளார். 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் ஆகியோர் 'Husky Dance' ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஜீத்து ஜோசப் இயக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 



    போர் விமானி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை தொடர்ந்து, தனது 54-ஆவது படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். தனுஷ்-க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து தனது இந்தி திரைப்படத்தின் ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார்.

    ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மே'. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் போர் விமானி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

    தமன் இசையில் சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

    கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் கடந்த 25ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான "அகண்டா தாண்டவம்" இன்று வெளியாகியுள்ளது.

    தமன் இசையமைக்க கல்யாணசக்ரவர்த்தி, திரிபுரனேனி ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.

    • முஸ்தபா முஸ்தபா படத்தை பிரவீன் சரவணன் இயக்குகிறார்.

    சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இணைந்து நடிக்கும் படம் முஸ்தபா முஸ்தபா. இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்குகிறார். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார்.

    இப்படம் கலகலப்பான பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவும் வெளியாகியுள்ளது.

    பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

    காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட படங்களை இயக்கிவர்.

    காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல்வேறு நகைக்சுவையுடன் கூடிய குடும்ப பாங்கான படங்களை இயக்கியவர் வி.சேகர்.

    இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புவனேஷ் செல்வனேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    கனிஷ் குமார், மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் ஆகிய நான்கு சிறுவர்கள் நெருங்கிய நண்பர்களாக கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் கிணறு ஒன்றில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த கிணற்றின் உரிமையாளர் வந்து நான்கு பேரையும் அடித்து விரட்டுகிறார். இதிலிருந்து நான்கு பேரும் நமக்கென்று சொந்தமாக கிணறு இருந்தால் யாரிடமும் அடி வாங்க தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

    தன் பாட்டியுடன் வாழ்ந்து வரும் கனிஷ் குமார், தங்களுக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று பாட்டியிடம் கேட்கிறார். ஆனால் பாட்டியோ தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி கிணறு வெட்ட மறுப்பு தெரிவிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத கனிஷ் குமார், எப்படியாவது கிணறு கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

    இறுதியில் கணேஷ் குமார் நண்பர்களுடன் சேர்ந்து கிணறு கட்டினாரா? இல்லையா?என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருக்கும் கனிஷ்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிணறு கட்ட வேண்டும் என்று முயற்சி செய்வது, தன் பாட்டியுடன் கோபம் கொள்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    நண்பர்களான மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் ஆகியோருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. நான்கு சிறுவர்களும்  எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களது டைமிங் காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

    பாட்டியாக நடித்திருப்பவரின் நடிப்பு சிறப்பு. பேரன் மீது வைத்திருக்கும் பாசத்தால் நெகிழ வைத்திருக்கிறார். பஞ்சர் ஓட்டுபவராக வரும் விவேக் பிரசன்னா, நடிப்பால் கண் கலங்க வைத்திருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார்.

    இயக்கம்

    சொந்த இடத்தில் கிணறு தோண்டி குளிக்க நினைக்கும் நான்கு சிறுவர்களின் கதையை மையமாக வைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி குமரன். சிறுவர்களிலேயே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையை போரடிக்காமல் நகர்த்தி இருப்பது சிறப்பு. நான்கு சிறுவர்களின் குடும்பத்தனத்தை எதார்த்தமாக படமாக்கியதற்கு வாழ்த்துக்கள். ஒரு சில தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    புவனேஷ் செல்வனேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    ஔிப்பதிவு

    கௌதம் வெங்கடேசின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை ரசிக்க வைத்து இருக்கிறார்.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கும்கி 2 படம் இன்று (நவ.14ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    பட வெளியீட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், "பிரபு சாலமன் படத்தின் இயக்குநர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது" என கும்கி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

    இதனால், கோரிக்கை ஏற்கப்பட்டதால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில்," இன்னும் 7 நாட்களில்.. மாஸ்க்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • இப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'மதராஸி' வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    'மதராஸி' படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.

    இதற்கிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும் இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர்கள், நடிகைகள் மக்களின் சொத்து. அவர்களை இழிவாக பேசுவது உங்களுக்கு தான் இழப்பு.
    • பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை.

    நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    அரசியல் என்பது மக்களுக்கான சேவை. மக்களுக்காக சேவை செய்ய எந்த துறையில் இருந்து வரவேண்டும் என்பது இல்லை. ஆனால் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வருகிறார்களா என்பது தான் கேள்வி.

    நடிகர்கள் வரட்டும் அல்லது வேறு தொழிலை சேர்ந்தவர்கள் வரட்டும். அவர்களின் அரசியல் அனுபவம் என்ன? மக்களுடன் அவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு என்ன? மக்களுடன் எப்படி நெருங்கி பழகினார்கள். பிரச்சனைகளை எப்படி அணுகினார்கள் என்பதின் வெளிப்பாடாக அரசியலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும். அது யாராக இருந்தாலும் சரி.

    நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். உலகளாவிய அளவில் அவர்களின் முகம் மக்களுக்கு தெரிந்து இருக்குமே தவிர தகுதிகளாக என்ன இருக்கிறது என்று பார்க்கும்போது தகுதியற்றவர்கள் வருவதை வரவேற்க மாட்டோம். அது நடிகர்களாக இருக்கட்டும். யாராகவும் இருக்கட்டும்.

    தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிட பணிகள் ஓரளவுக்கு முடிந்து விட்டது. அடுத்த ஆண்டில் ஒரு மிகப்பெரிய கட்டிட திறப்பு விழாவுக்கு தயாராக இருங்கள்.

    நடிகர்கள், நடிகைகள் மக்களுக்கானவர்கள். கேள்வி கேட்பவர்கள் யாராக இருக்கட்டும். நடிகைகள் மீது ஒரு பார்வை வைக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள் மக்களின் சொத்து. அவர்களை இழிவாக பேசுவது உங்களுக்கு தான் இழப்பு. நடிகர்கள், நடிகைகள் ஆடிப்பாடுவது உங்களின் சந்தோஷத்திற்காகத்தான். அவர்களை இழிவாக பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும வெவ்வேறு தலைப்புகளில் நடந்து கொண்டிருக்கிறது.

    அது கலாச்சார சீர்கேடாக போகும்போது தடை செய்வதில் தவறு இல்லை. நமக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது. டி.வி.க்கு சென்சார் இல்லை என்பதால் ஆடைக்குறைப்பு, கிஸ் போன்ற காட்சிகளை நாம் தவிர்ப்பது நல்லதுதான்.

    அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று இல்லை. உலகத்தில் எந்த ஒரு நிகழ்வு மக்களுக்கு இடையூறு செய்கிறதோ, தொந்தரவு செய்கிறதோ, மக்களுக்கு தேவையில்லாததை தடை செய்வதில் தப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×