என் மலர்
நீங்கள் தேடியது "Prabhu Soloman"
மலை பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர் படத்தின் நாயகன் மதி. சிறுவயதில் இருந்தே பாசத்திற்காக ஏங்கும் நபர். மைனா பட புகழ் சூசன் மதியின் தாய், சாராயம் விற்கும் தொழில் செய்து வருகிறார். மகன் மீது பாசம், அக்கறை அற்றவராக இருக்கிறார்.
சாராயம் விற்பவரின் மகன் என்று பள்ளியிலும் யாரும் மதியிடம் சேர மறுக்கின்றனர். இதனால் வேதனைப்படும் மதியிடம், ஆசிரியர் ஒருவர் இயற்கையை ரசிக்கும்படி கூறுகிறார்.
அப்போது, வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிடுகிறது. அந்த குட்டி யானையை மதி காப்பாற்றுகிார். பின்னர் அந்த யானை மதியை சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமை ஆகிறார். இருவரும் சகோதரர்கள் போல் வளர்ந்து வருகின்றனர்.
ஒரு நாள் யானை காணாமல் போய்விடுகிறது. மதி எங்கு தேடியும் யானை கிடைக்கவில்லை. இதனால் மதி ஒரு கட்டத்தில் தன்நிலை மறந்தவராக காட்டுக்குள் சுற்றித்திரிகிறார்.
இதற்கிடையே, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மதியிடம் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும்படி ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.
மதி பிறகு, கல்லூரி படிப்பை பயில வெளியூருக்கு செல்கிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும் மதிக்கு யானை மாயமானது குறித்து தகவல் கிடைக்கிறது.
பின்னர், யானை மாயமானதற்கான பின்னணி என்ன? மாயமான யானை மதியிடம் திரும்ப வந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
முதல் படத்திலேயே நடிகர் மதி அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யானையுனான பாசம், யானையை இழந்த தவிப்பு, கோபம் என உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகி ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆண்ட்ரூஸ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி என கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கின்றனர்.
இயக்கம்
வனம், இயற்கை சார்ந்து படம் எடுப்பது இயக்குனர் பிரபு சாலமனுக்கு புதுசு அல்ல. அதேபோல், இந்த கதையும் தமிழில் புதிது அல்ல. கதாநாயகனுக்கும்- யானைக்கும் இடையேயான பாசத்தை தவிர படத்தில் பெரிதாக வேறு எதுவும் இல்லை. திரைக்கதை, காட்சிகள் படத்தில் சுவாரஸ்யம்.
இசை
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பொருத்தம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா லென்ஸ் இயற்கையை வியக்கும் வகயைில் அமைந்திருக்கிறது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் இன்று (நவ.14ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
பட வெளியீட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், "பிரபு சாலமன் படத்தின் இயக்குநர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது" என கும்கி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
இதனால், கோரிக்கை ஏற்கப்பட்டதால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
- கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
- கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர்.
- இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கும்கி 2 படத்தின் டீசர் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கும்கி 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








