என் மலர்
நீங்கள் தேடியது "ஹாதி மெரே சாதி"
பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பிற்கான தலைப்புகள் வெளியாகி இருக்கிறது. #Kaadan #VishnuVishal #RanaDaggubati
`கும்கி-2' படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி' படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்டது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #Kaadan #VishnuVishal #RanaDaggubati
பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள விஷ்ணு விஷால், அவர் நடிக்கும் படம் குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார். #VishnuVishal #RanaDaggubati
பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபு சாலன் உருவாக்கி வருகிறார்.
கும்கி-2 படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், விஷ்ணு விஷால் அதனை மறுத்துள்ளதுடன், அதற்கான விளக்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் (நானும்) விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தை பிரபு சாலமன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் இந்தியில் வெளியான `ஹாதி மெரே சாதி' படத்தின் தழுவலாகும். ஆனால் அதன் ரீமேக் இல்லை.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட கேரளாவில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #VishnuVishal #RanaDaggubati






