என் மலர்
சினிமா

விஷ்ணு விஷால் - ராணா இணையும் காடன்
பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பிற்கான தலைப்புகள் வெளியாகி இருக்கிறது. #Kaadan #VishnuVishal #RanaDaggubati
`கும்கி-2' படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி' படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்டது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #Kaadan #VishnuVishal #RanaDaggubati
Next Story






