என் மலர்
- கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.
- புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.
ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
- பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில்,
அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
- பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
- மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
- இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.
இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.
இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.
இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ள படம் 'தீயவர் குலை நடுங்க'. அதிரடி ஆக்ஷன் கிங் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 21-ந்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- பிரித்விராஜ் கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.
இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.
இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளம் பிரியங்கா சோப்ராவிடம், ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அளித்தார்.
ரசிகர் ஒருவர் "இந்த படம் மீண்டும் இந்திய படங்களுக்கு திரும்புவதற்கானதாக இருக்குமா? அல்லது பிரியங்கா சோப்ராவின் ஒட்டுமொத்த புதிய அத்தியாயமாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவிற்கு நான் திரும்புவது மற்றும் புதிய அத்தியாயமாக இருக்கும் என நம்புகிறோம். உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நம்ப முடியாததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
மற்றொரு ரசிகர் "இந்திய சினிமாவில் உங்களை பார்ப்பதை தவறி விடுகிறோம். இந்த படம் உங்களுடைய புதிய தொடக்கத்திற்கான இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு "கடவுள் அருளால். உலகம் முழுவதும் என்னால் முடிந்த சிறந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் எதுவும் சாத்தியம் என்று தோன்றுகிறது" எனப் பதில் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உங்களுடைய அனுபவம் பற்றி சொல்லுங்கள் என இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, "இந்த படத்தில் ஆரம்ப கட்டத்தில்தான இருக்கிறேன். இருந்தாலும், சூப்பர். மேலும், ஐதராபாத் பிரியாணி உலகத்திலேயே சிறந்தது" என்றார்.
- அஜித் குமார் ரேஸிங் அணி இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி
- எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
- தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்
- ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், தைரியம் இருந்தால் DNA test-க்கு வாங்க என்று மாதம்பட்டி ரங்கராஜை கிண்டலடித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில், "Hello Husband madhampatty rangaraj DNA பரிசோதனைக்கு நீங்கள் statement கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன ? ?தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband madhampatty rangaraj சும்மா statement குடுத்தா மட்டும் போதாது ???" என்று தெரிவித்துள்ளார்.
- தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- தர்மேந்திராவின் மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி விளக்கம் அளித்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.
இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்நிலையில், BRO CODE என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








