என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • அஜித் குமார் ரேஸிங் அணி இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி
    • எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

    இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.

    • தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்
    • ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

    மேலும், "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

    இந்நிலையில், தைரியம் இருந்தால் DNA test-க்கு வாங்க என்று மாதம்பட்டி ரங்கராஜை கிண்டலடித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அந்த பதிவில், "Hello Husband madhampatty rangaraj DNA பரிசோதனைக்கு நீங்கள் statement கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன ? ?தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband madhampatty rangaraj சும்மா statement குடுத்தா மட்டும் போதாது ???" என்று தெரிவித்துள்ளார்.

    • தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    • தர்மேந்திராவின் மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி விளக்கம் அளித்தார்.

    சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.

    பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.

    இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

    இந்நிலையில், BRO CODE என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
    • கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

    இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பாலாஜி தரணிதரணுடன் மீண்டும் இணைகிறார்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரண் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜெய் பீம் புகழ் நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிக்கிறார்.

    • புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது
    • புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

    சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.



    கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அறிமுக நடிகர்களில் ஒருவராகிறார்.

    பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.




    அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    • அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை இயக்குனர் படமாக்கி இருக்கிறார்.

    நாயகன் பைசல் ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன், காதலி ஆதிரா சந்தோஷ் உதவியுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பைசல் ராஜ் தனது கண்டெண்ட் வைரலாக மந்திரவாதி உதவியுடன் காதலி ஆதிராவிற்கு பேய் பிடித்ததை ஓட்டியதாக ஒரு பதிவு போடுகிறார். அதை பார்த்த போட்டி யூடியூப்பர் ஒருவர் அந்த பதிவு பொய் என்று மறுப்பு தெரிவித்து பதிவு போடுகிறார்.

    இதனால் பாதிப்படைந்த பைசல் ராஜ், பேய் வீடு பற்றி கண்டெண்ட் போட முடிவு செய்கிறார். அதற்கு தனியாக இருக்கும் வீட்டை தேடி கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் காவலாளியை சரி செய்து ஆதிரா சந்தோஷை பேயாக நடிக்க வைத்து வீடியோ போடுகிறார். அதை பார்த்த வீட்டு உரிமையாளர், அது பொய் என்று பேட்டி கொடுக்கிறார். இது ஆதிரா சந்தோஷின் குடும்பத்திற்கு தெரிய வர, அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர்.

    பைசல் ராஜ், உண்மையாகவே பேய் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். அதற்கு கூல் சுரேஷ் பேய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்.

    இறுதியில் இருவரும் பேய் இருக்கும் இடத்திற்கு சென்றார்களா…? பேய் பார்த்தார்களா? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ், இப்படத்தை இயக்கி இருக்கிறார். யூடியூப்பர்களின் பித்தலாட்டங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை படமாக்கி இருக்கிறார். யூக்கிக்கும் படியான காட்சிகள், சுவாரசியம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிக தெளிவு இல்லாமல் இருக்கிறது.

    இசை

    சுரேஷ் நந்தனின் இசை மற்றும் பிண்ணனி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    • ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில், 'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
    • வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

    இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.

    அதில் அவர், ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது.

    தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சனை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்று விஜய் சேதுபதி பேசினார்.

    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
    • மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 61 வயது.

    வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில் மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, கோவிந்தாவின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பவன் கல்யாணுடன் ‘உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    அடுத்து அவர் பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தவிர, சமீபத்தில் அவருக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    ராஷி கன்னா ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியநிலையில், தற்போது அவர் பின்வாங்கி விட்டாராம். ஏற்கனவே முன்னணி நடிகை ஒருவர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது ராஷி கன்னாவும் பின்வாங்கி இருக்கிறார்.

    அவர் நடிக்க மறுத்தது 70 வயதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் படத்தில் தான் என்று பேசப்படுகிறது.

    ×