என் மலர்
ரூ.100 கோடி படப்பட்டியலில் இடம் பிடித்துள்ள அமலாபால், தனது நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பு கிடைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்த அவர் அளித்துள்ள பேட்டியை கீழே பார்ப்போம்.
அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் ரூ.100 கோடிகளை வசூலித்து 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.100 கோடிகளை வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அமலாபாலும் இடம் பிடித்துள்ளார்.

தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கும் ‘திருட்டு பயலே’, ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கும் ‘மின்மினி’ தயாரிப்பாளர் முருகன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி ஜோடியாக நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்து 3 மலையாள படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது பிசியாக நடிப்பது குறித்து கூறிய அமலாபால்...
“ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும் கதாபாத்திரம் வித்தியாசமாக உள்ளது. நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகுந்த உற்சாகம் தருகிறது” என்றார்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடவுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.
ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டம் இன்று மாலை ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

ஆபாச உடை அணிந்து நடித்த கவர்ச்சி நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
கம்போடியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை டென்னி கிவான். இவர் சமூக வலைத் தளங்களிலும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வந்தார்.
திரைப்படங்களில் இவர் மிகவும் ஆபாசமாக நடிக்கிறார் என்று புகார்கள் குவிந்தன. இதையடுத்து, அந்த நாட்டு கலாசார துறை டென்னி கிவானின் உடை ஆபாசமாக இருக்கிறது. இது கம்போடியாவின் கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்று கூறி அவர் சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த நடிகையை அழைத்து அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி கூறிய டென்னிகிவான், “நான் படங்களில் அதிக ஆபாசமாக நடிக்க வில்லை. மற்ற நடிகைகளைப் போல உணர்ச்சிகளை தூண்டும்படி அதிக கவர்ச்சியும் காட்டவில்லை. இந்த நிலையில் எனக்கு தடை விதித்து விட்டார்களே” என்று ஆதங்கப்பட்டுள்ளார். சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது பற்றி 3 லட்சம் ரசிகர்கள் பின் தொடரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து அவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை என்று ஹாலிவுட்டிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். அங்கு கவர்ச்சி விஷயத்தில் எல்லையை கடந்து நடிக்கிறார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ வில் ஆங்கில நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது பிரியங்கா சோப்ரா அளித்த பதில்...
“ நான் அந்த தொடரில் இப்படி நடித்ததில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது. இங்குள்ள இந்தி படங்களை மக்கள் பார்த்தது இல்லையா?. ‘குவாண்டிகோ’ சீரியலில் ஒரே ஒரு வித்தியாசம். அதில் எனது பாய்பிரண்டு வெள்ளைக்காரர். இந்தி படங்களில் எப்படி நடித்தேனோ அப்படித்தான் இந்த சீரியலிலும் நடித்து இருக்கிறேன்.

நான் ஒரு நடிகை, படத்துக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க வேண்டும். அப்படித்தான் ‘குவாண்டிகோ’ தொடருக்கும் ஒரு காட்சி தேவைப்பட்டது நடித்தேன். எனக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறேன். எல்லா படங்களிலும் அதை கடைபிடிக்கிறேன். நிச்சயம் அதை மீற மாட்டேன்.”
என்று கூறியுள்ளார்.

திரையுலகம் எங்கும் போய்க்கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்று இளையராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் புதிய படம் ‘எங்க அம்மா ராணி’. இப்படத்தை பாணி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம் வருகிற மே 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இளையராஜா கூறும்போது, இன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம்மாறி செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு சிறு விஷயம் சினிமாவில் சிஜி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில் அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு.
இன்று இருக்கும் சினிமா உலகில் ஒரு சாதரண எதார்த்தமான கதையை எமோஷனலாக சொல்லும் தன்மை சினிமாவில் குறைந்து கொண்டே இருக்கிறது. கோயில்களும், கலாச்சாரங்களும் எதற்காக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் மக்களுக்கு நல்ல விஷயங்களை தொடர்ந்து நியாபகப்படுத்தவில்லை என்றால் அது வழக்கொழிந்து போய்விடும். முன்னோர்கள் இதை நமக்கு செய்தது எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் ரத்ததில் கலந்து நிற்க வேண்டும் என்பதற்காக.
சினிமாவை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்றாலும் அதற்கான ஒரு கதையம்சம் நல்ல விஷயங்களை நல்ல விதமாக சொல்லும் முற்றிலும் மாறுபட்டு தனித்துவ தன்மையும் கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் இந்த படம் சற்று மாறுபட்டு இருந்ததால் இப்படத்திற்கு இசையமைத்தேன்.

நான் வேலை செய்யும் படங்கள் பற்றி எப்போதும் சொல்வதில்லை. ஜனங்கள் போய் பார்த்து விட்டு, அவர்கள் தான் இது நல்ல படம் என்று முடிவை சொல்ல வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். குழந்தை மீதான தாயின் அக்கறை 200 சதவீதம் இருக்கும். இப்படத்தில் தன் குழந்தைக்காக அந்த தாய் யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்கிறாள். அதுதான் மத்த படத்திற்கும் இதற்குமான வித்தியாசம்
இதில், அம்மாவை பற்றிய பாடல் போட்டுள்ளேன் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அம்மாவென்று ஒருத்தி இல்லையென்ற ஒரு எண்ணமே உலகில் எவருக்கும் வந்ததில்லை. ‘வா வா மகளே’ பாடல் படத்தின் ப்ரோமாவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் பாணி அறிமுக இயக்குனர் இல்லை, அவர் எத்தனையோ இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். சமுத்திரகனியின் உதவியாளராக இருந்த போதும், மலேசியாவில் நிறைய இயக்குனர்களை உருவாக்கிய உற்சாகமான இளைஞர் அவர். இயக்கம் எனபது ஒரு தலைமை நிர்வாகம் மாதிரி. அதை சரியாக சொல்லிக் கொடுத்து இத்தனை பேரை உருவாக்கியவர் இப்போது படம் எடுக்கிறார் என்றால் கட்டாயம் எதிர்ப்பார்க்கலாம்.
படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக அமைந்தது. பொதுவாக ஒரு தீம் கிடைத்தது என்றால் இசையமைப்பாளர்கள் அதை மேம்படுத்தி கொண்டே செல்வோம். ஆனால் இந்த படத்தில் காட்சிகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தால் பின்னணி இசையும் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அது ஒரு நல்ல டெஸ்டிங்காக இண்டிரெஸ்டாக இருந்தது. நிச்சயமாக இப்படத்தை எதிர்பார்த்து போகலாம். உங்கள் வாழ்த்துகளை தான் இப்படத்தின் குழு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்பதை குழுவின் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் ஆர்.கே.சுரேஷை மென்மையானவர் என்று கூறியிருக்கிறார். அவர் குறித்த சுபிக்ஷா தெரிவித்த தகவல்களை கீழே விரிவாக பார்ப்போம்.
கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா, இப்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கிறார். இது பற்றி கூறிய அவர்...
“இந்த படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக நான் நடிக்கிறேன். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படம். குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன்.

இந்த படத்துக்கு ஒப்பந்தமான பிறகுதான், பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் பார்த்தேன். அதில் அவருடைய அதிரடியான நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். அவருடன் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயத்துடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.
ஆனால் நிஜத்தில் அவர் மென்மையானவராக இருந்தார். அன்பாக பேசினார். இதனால் அவரைப்பற்றி எனக்கு இருந்த பயம் முழுமையாக நீங்கியது. இப்போது இயல்பாக நடிக்கிறேன்” என்றார். பெரியகுளம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

நடிகர் ஆரி தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், ஆரி-நதியா தம்பதியருக்கு கடந்த பிப்ரவரி 5-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
லண்டனில் பிறந்த குழந்தையை காண்பதற்காக சமீபத்தில் ஆரி லண்டன் சென்றிருந்தார். இதையடுத்து, லண்டனில் குடும்பத்தார்கள் முன்னிலையில் எளிமையான முறையில் பெயர் சூட்டு விழா நடத்தி முடித்துள்ளார். அப்போது குழந்தைக்கு ஆரி-நதியா இருவருடைய பெயர்களில் உள்ள எழுத்துக்கள் குழந்தையின் பெயருக்கு வரும்படி ‘ரியா அனகாரிகா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

“எங்கள் வீட்டு தேவதைக்கு உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என ஆரி தெரிவித்துள்ளார். ஆரி நடிப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படக்குழுவுடன் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகின்றனர். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகத் பாஸில் அப்பாவாக மகேஷ் மன்ஜரேக்கர் நடிக்க உள்ளதாக படக்குழுவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் மன்ஜரேக்கர் இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான `ஆரம்பம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முக்கால்வாசி படக்காட்சிகளை முடித்துள்ள படக்குழு, தற்போது மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29)-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்திற்கு எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைத்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘தேவி’ படத்திற்கு பிறகு பிரபுதேவா ‘யங் மங் சங்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘காதல் சொல்லப் போறோம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ’குலேபகாவலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘குலேபகாவலி’ 1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம். தற்போது, அதே தலைப்பை இப்படத்திற்கு வைத்திருப்பதால் அப்படம் போல் இருக்குமா? என்று கேட்டால், இப்படம் முழுக்க காமெடியாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை பாங்காக்கில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வெளியான வீடியோ பதிவிற்கு எழுந்த விமர்சனம், கண்டனங்களுக்கு நடிகை கஜோல் விளக்கம் அளித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை கீழே பார்க்கலாம்.
இந்தி நடிகை கஜோல் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில், நண்பர் ஒருவருடன் இறைச்சி சாப்பிட்ட வீடியோவை பதிவு செய்திருந்தார். கஜோல் சாப்பிட்டது தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி என்று சமூக வலைதளங்களில், அவருக்கு எதிராக விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.

இதற்கு நடிகை கஜோல் நேற்று விளக்கம் அளித்தார். அதில், “அது மாட்டிறைச்சி என்று சொல்லப்படுவது தவறான தகவல். வீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதாலும், மத உணர்வுகளை புண்படுத்தும் என்பதாலும், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மராட்டியத்தில் மாட்டிறைச்சி தடை சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘குப்பத்துராஜா’ படப்பிடிப்பில் ஒரு சண்டைக்காட்சியின் போது ஜி.வி.பிரகாஷ்-க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ். அவரது கைவசம் பல படங்கள் உள்ளன. தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `புரூஸ் லீ' ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், அவர் தற்போது ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘செம’, ‘4ஜி’, ‘குப்பத்துராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘குப்பத்துராஜா’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது, இந்த விபத்து ஏற்பட்டதாக படக்குழு தரப்பு கூறியிருக்கிறது.

சைக்கிளில் செல்வது போன்ற ஒரு காட்சியும், மேல்மாடி கூரைகளின் மேல் ஏறி ஓடும்படியான காட்சியும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் மாடி கூரையின் மீதிருந்து எடுக்கப்பட்ட காட்சியில், ஜி.வி.பிரகாஷ் கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரமான காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வருகிறார். பாபா பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஜி.வி. உடன் இணைந்து பார்த்திபன், பலக் லல்வானி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஜி.வி. அடுத்ததாக, ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்', சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படம், சீமான் இயக்கத்தில் `பகலவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். இதையடுத்து எழில் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படம் ஒன்றிலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.
இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.

கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி.