என் மலர்
நீங்கள் தேடியது "Palak Lalwani"
குப்பத்து ராஜா படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி, ரசிகர்கள் பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #PalakLalwani
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
"இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி" என்றார் பாலக் லால்வானி.

மேலும் இப்படத்தில் சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் போகஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் கேஎல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாக உள்ளது.
சாச்சி இயக்கத்தில் வைபவ் - பல்லக் லால்வானி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `சிக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #Sixer #Vaibhav #PalakLalwani
`மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் `பேட்ட' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக `ஆர்.கே.நகர்', `காட்டேரி' ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன.
இந்த நிலையில், வைபவின் அடுத்த படத்திற்கு `சிக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.
Here's the title look of our @WallMateEnt Production No.:1, #Sixer 🕕 Movie stars @actor_vaibhav, @pallaklalwani & @actorsathish and directed by @chachi_dir! #SixerTitleLook@tridentartsoffl@iamsridhu@dinesh_WM@GhibranOfficial@MuthaiahG@DoneChannel1pic.twitter.com/73Yzcz6o4h
— WallMate Entertainment (@WallMateEnt) March 10, 2019
சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.
ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். #Sixer #Vaibhav #PalakLalwani