என் மலர்
தமிழ், இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, 2 பெண் குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார்.
இந்தி பட உலகின் பிரபல நடிகையாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் அவதிப்பட்டார்.
தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். சினிமாவில் நடிக்கவும் தொடங்கி விட்டார். இவர் நடித்துள்ள ‘மை டியர் மாயா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளை தத்து எடுக்க இருக்கிறார்.

இது குறித்து கூறிய மனிஷா கொய்ராலா, “இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து, அதன் மூலம் தாய் ஆகலாம் என்று எண்ணி இருக்கிறேன். அதற்கான சட்ட ரீதியான பணிகளை தொடங்கி விட்டேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு 2 பெண் குழந்தைகளை தத்து எடுத்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாபநாசம் கமலின் இரண்டாவது மகள் எஸ்தர் புதிய படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுக்கவிருக்கிறார்.
மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர். மலையாளம் ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமலின் இளைய மகளாக எஸ்தர் நடித்தார். தெலுங்கில் ரீமேக் ஆன திரிஷ்யத்திலும் வெங்கடேஷ் மகளாக நடித்தார்.
எஸ்தர் தற்போது 10-வது வகுப்பு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தின் பெயர் ‘குழலி’. அறிமுக இயக்குனர் சேர கலையரசன் இதை இயக்குகிறார். இதில் குழலியாக நடிக்கும் எஸ்தருக்கு கிராமத்து பெண் வேடம். படத்திலும் 10-வது வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

நல்ல கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்த `அட்டு' நடிகர் தற்போது அதர்வாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை.
இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர்.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்...
“சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்ட நாள் காத்து இருந்தேன்.
அப்படி ஒரு திருப்புமுனை வாய்ப்பாக வந்த படம் தான் ‘அட்டு’. கதையை இயக்குனர் ரத்தன் லிங்கா சொன்ன போதே அந்த அழுக்கு மனிதர்களின் வாழ்க்கையும் சூழலும் செயல்களும் எனக்குப் பிடித்து விட்டது.

படமாக்கும் போதுதான் மிகவும் சிரமப்பட்டோம். கொடுங்கையூர் குப்பை மேட்டில்தான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. இங்கு ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும். இன்னோரிடத்தில் விஷ வாயு மேலே வந்து கொண்டிருக்கும்.
எனக்கு 8 ஆண்டு காலப் போராட்டம். இந்த படம் 3 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது. படம் பார்த்து பலரும் பாராட்டும் போது எல்லா கஷ்டங்களும் காணாமல் போய்விடுகின்றன. தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சார் என்னைப்பற்றி பாராட்டியதை மறக்க முடியாது.
‘அட்டு’வுக்குப் பின்அதர்வாவின் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்தில் நடிக்கிறேன். அதில் பாசிட்டிவ் ரோல்” என்றார்.

டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை பிரபல நடிகை ஒருவர் ஓடவிட்டிருக்கிறார்.
மலையாளத்தில் செல்பீ படத்தின் மூலம் அறிமுகமாகிய அந்த நடிகை, தமிழில் விரல் நடிகருடன் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் அந்த நடிகை நடித்துள்ள புதிய படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அரசியல் வாரிசு நடிகருடனும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நேரத்திலும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் அந்த நடிகை உலா வரும் போது, நெட்டிசன்களில் ஒருவர் தெரிவித்த இழிவான கருத்துக்கு நடிகை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த நெட்டிசன், மக்கள் தியேட்டருக்கு செல்வதே நடிகைகளை பார்ப்பதற்கும், நடிகையின் கவர்ச்சியை ரசிப்பதற்கும் தான் என்று கூறியிருக்கிறார்.
இந்த கருத்தை பார்த்து கொந்தளித்த அந்த நடிகை, அந்த நெட்டிசனிடம், மக்கள் தியேட்டருக்கு சென்று நல்ல படங்களையே பார்க்க விரும்புகின்றனர். மாறாக நடிகைகளின் கவர்ச்சியை ரசிப்பதற்காக செல்லவில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நீங்கள் நினைத்தால் உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். நடிகையின் இத்தகைய கருத்தை பார்த்த அந்த நெட்டிசன் தனது கருத்தை அழித்து விட்டு ஓடிவிட்டார்.

`ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், தற்போது இசைக்கு அப்பாற்பட்ட புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டிலும் இசை அமைத்தார். இப்போது இயக்குனர் ஆகி இருப்பது குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்,
“25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தாரும் மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது பலருடைய ஆதரவு எனக்கு இருக்கிறது.

இந்த படம் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இது ஒரு புதிய சோதனை முயற்சி. இந்த வி.ஆர்.தொழில்நுட்பத்தை மக்கள் எப்படி ரசிக்கப்போகிறார்கள் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது. படம் பற்றிய கருத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
`பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படங்கள் எடுக்க இங்கு பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். என்னிடம் ரூ.200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஏ.ஆர்.ரகுமான் இயக்குகிறார். இது ‘வி.ஆர்.மூவி பேஸ்’ என்ற புதிய முறையில் இந்திய நடனம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது.

கடந்த மாதம் ரத்து செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியை தற்போது மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பல வருடங்களாக அவருடைய ரசிகர்களை நேரில் சந்திக்கவில்லை.
எனவே, ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள் நடந்தன. ஆலோசனை கூட்டமும் நடந்தது. ரஜினியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ரஜினி, குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து அவர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுப்பது கடினம். வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அல்லது 2 மாவட்டமாக அவர்களை அழைத்து தனித்தனியாக புகைப்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க நாள் ஒதுக்கி உள்ளார். முதல் கட்டமாக 5 நாட்கள் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திக்கிறார்.
வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதிவரை இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தினமும் 3 மாவட்டங்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதில் கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் ரசிகர்கள் ரஜினியுடன் சந்திக்கிறார்கள். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான ரசிகர்கள் விருப்பப்படி, ரஜினி ரசிகர்களுடன் தனித் தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள், நிர்வாகிகள் சேர்ந்தும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக மற்றொரு தேதியில் மீதம் உள்ள மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ரஜினி நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயீஷா சேகல் நடிப்பில் உருவாகியுள்ள `வனமகன்' படத்தின் ரிலீஸ் தேதி விஷால் தலையீட்டால் தள்ளிப்போயுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்'. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் வரை தள்ளிவைத்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திங்க் பிக் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
`வனமகன்' படத்தின் அனைத்து விதமான பணிகளும் முடிவடைந்ததால், படத்தை வருகிற மே 19-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் திருட்டு விசிடி உள்ளிட்ட தமிழ் சினிமாவில் நிகழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 30-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள், சினிமா காட்சிகள் முதலிவை ரத்து செய்யப்படுகிறது. எனவே `வனமகன்' படத்தை தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்ய விஷால் தரப்பினர் பரிந்துரைத்ததை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை ஜுன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜாலியான இளைஞனின் கதையாக உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம்’.
இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரியாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ஜானகி, முக்கிய தோற்றத்தில் ஷகிலா, கே.பாக்யராஜ், கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-வேல்முருகன், இசை- சங்கர்ராம். இவர் புதிதாக அறிமுகம் ஆகிறார். எடிட்டிங்- தேசிய விருது பெற்ற ராஜா முகமது, கலை-ஸ்டீபன்பாலாஜி, நடனம்-பாபா பாஸ்கர், தயாரிப்பு-மார்வின் புரொடக்ஷன்ஸ். இயக்கம்- பி.எம்.தயா நந்தன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

ஜாலியான ஒரு இளைஞனுக்கு சமூகத்தில் இருந்து ஒரு பிரச்சினை வருகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்யும் போது தொடர்ந்து பல சிக்கல்கள் வருகின்றன. அதில் இருந்து அவன் எப்படி மீண்டு காதலியை கைப்பிடித்தான் என்பது கதை.
குன்றத்தூர் பகுதியில் நடைபெறும் கதை... முருகனின் அறுபடை வீடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் நாயகன் பிரஜினை இயக்குனர் சீனுராமசாமி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். இமான் அண்ணாச்சியை ஒரு பாடலுக்குத் தான் அழைத்தோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் முழுவதும் கலகலப்பாக வருகிறார். இது அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைக்கு வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா இணைந்து நடித்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் `பாகுபலி-2' படத்தை முதியோர்களின் விருப்பத்திற்கிணங்க சிறப்பு காட்சியில் திரையிட சமூக அமைப்பு ஒன்று முடிவு செய்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2'. `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.
`பாகுபலி' படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2', ரிலீசாகி 2 வாரங்களை நெருங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ.1227 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2'-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டியிருக்கிறது.
இந்நிலையில், `பாகுபலி-2' படத்தினை அன்னையர் தினத்தன்று சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு காட்சிக்கு சமூக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

இளைஞர் சமூக அமைப்பு ஒன்று, ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா பொறுப்பு வகிக்கிறார்.
சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள 101 முதியவர்களின் விருப்பத்திற்கு இணங்க, வருகிற அன்னையில் தினத்தை(மே 14) முன்னிட்டு வருகிற மே 13-ஆம் தேதி ராக்கி சினிமாஸில் `பாகுபலி-2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என முதல் பாகத்தில் நடித்திருந்த பல்வேறு கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். தவிர நடிகை கஜோல் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பா.பாண்டி' (`பவர் பாண்டி') படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள `விஐபி-2' வருகிற ஜுலை 28-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடித்திருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு தான் புரூஸ் லீ பற்றி நன்றாக தெரியும். எனவே என்னால் தான் புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எடுக்க முடியும் என்று பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சேகர் கபூரை, ராம் கோபால் வர்மா வம்புக்கு இழுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கிறார் புரூஸ்லீ. அதாவது அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில், குங்பூ கலையில் வல்லவரான புரூஸ்லியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக இருக்கிறது.

புரூஸ் லீ மறைந்து 44 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சேகர் கபூர் `லிட்டில் டிராகன்' என்ற பெயரில் இயக்க இருக்கிறார். சேகர் கபூர் கமல் இயக்கத்தில் `விஸ்வரூபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை புரூஸ் லீ-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான "புரூஸ் லீ என்டர்டெயின்ட்மெண்ட்" தயாரிக்க உள்ளதாக அந்நிறுவன உரிமையாளரும், புரூஸ் லீ-யின் மகளுமான ஷனான் லீ அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கான கதையை எழுதுவதிலும் ஷனான் லீ தனது பங்களிப்பை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலிவுட்டில் மற்றொரு பிரபல இயக்குநர், சர்ச்சைக்கு பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. அவர், புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராற்றை அவரது பக்தனான என்னால் மட்டுமே முழுமையாக எடுக்க முடியும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதற்காக நான், சேகர் கபூருக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம் என்று கூறிய ராம் கோபால் வர்மா, புரூஸ் லீ குறித்து, அவரது மனைவி லிண்டா லீ, மகள் ஷனான் லீயை விட தனக்கே அதிகமாக தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றை லிட்டில் டிராகனுக்கு போட்டியா வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு இரண்டு பிரம்மாண்ட இயக்குநர்களால் இரு விதமான பரிணாமங்களில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 150-வது படமான நிபுணன் குறித்த அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்'.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
`நிபுணன்' என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் `நிபுணன்'. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத் குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை `நிபுணன்' படம் பூர்த்தி செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் `நிபுணன்'. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவீனின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து பாஷன் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசரை வருகின்ற மே 15-ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.