என் மலர்
`பாகுபலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து `ராமாயணம்' கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரூ.500 கோடி செலவில் சினிமா படமாக தயாராகிறது.
சரித்திர கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் மொழிகளில் தயாரான `பாகுபலி-2' படம் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிவதால் ரூ.1,500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உலக அளவில் வசூலில் சாதனை புரிந்த முதல் இந்திய படம் என்ற பெருமையை `பாகுபலி-2' பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியால் திரையுலகினர் பார்வை சரித்திர, புராண கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.
இதிகாச காவியமான மகாபாரதத்தை ரூ.1,000 கோடி செலவில் சினிமா படமாக எடுக்கப்போவதாக பிரபல மலையாள டைரக்டர் வி.ஏ.குமார் அறிவித்து இருக்கிறார். தமிழ், மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதில் பீமன் வேடத்தில் நடிக்க மோகன்லாலை தேர்வு செய்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' என்ற சரித்திர படமும் தயாராகிறது. இந்த நிலையில் `ராமாயணம்' கதையையும் சினிமா படமாக எடுக்கப்போவதாக தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தற்போது அறிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“சரித்திர புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதை `பாகுபலி-2' படம் நிரூபித்து இருக்கிறது. அந்த உந்துதலில் `ராமாயணம்' கதையை படமாக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.500 கோடி செலவில், 3டியில் இந்த படம் தயாராகிறது. இதில் ராமர், சீதை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்”.
இவ்வாறு அவர் கூறினார்.

சீதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஏற்கனவே தமிழ், தெலுங்கில் `ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற படம் வெளியானது. இதில் ராமர்- சீதையாக பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்து இருந்தனர். தற்போது `ராமாயணம்' படத்தில் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல கதாநாயகிகள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ராமாயணம் கதை ஏற்கனவே அருண்கோவில், தீபிகா ஆகியோர் நடித்து டெலிவிஷன் தொடராக தயாரிக்கப்பட்டு தூர்தஷனில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் - ஆனந்த்சாமி - மிஷா கோஷல் - அஷ்வதி லால் இணைந்து நடித்திருக்கும் `லென்ஸ்' படத்தின் விமர்சனம்.
மிஷா கோஷாலை திருமணம் செய்துகொண்ட நாயகர்களுள் ஒருவரான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தகாத வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் மற்ற பெண்களுடன் உரையாடுவது, அந்த பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வது என தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், ஒரு பெண் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறாள். இருவரும் அவர்களது சொந்த தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மறுநாள் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்ட தகவல்களை வைத்து மர்ம நபர் ஒருவர் ராதாகிருஷ்ணனை மிரட்டுகிறார். அந்த மர்ம நபர் வேறு யாரும் இல்லை, படத்தின் மற்றொரு நாயகனான ஆனந்த்சாமி தான்.

ஆனந்த்சாமி தனது வாழ்க்கையை, வாய்பேச முடியாத தனது மனைவி அஷ்வதி லாலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளம் பக்கமே வராத ஆனந்த் சாமியின் மனைவி சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள, அவளது தற்கொலைக்கான காரணத்தை அறிய தீவிரம் காட்டும் ஆனந்த் சாமி, சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கவும் முடிவு செய்கிறார்.
இவ்வாறு தேடி வரும்போது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தான் தனது மனைவி தற்கொலைக்கு காரணமானவர் என்பதை அறியும் ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷின் மனைவியை சமூக வலைதளத்தின் மூலமாக ஈடுபடுத்தி, ஜெயப்பிரகாஷிடம் தொடர்பு கொண்டு அவரை மிரட்டுகிறார்.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அப்படி என்ன தான் தவறு செய்தார்? அவரை எதற்காக ஆனந்த்சாமி பழிவாங்க துடிக்கிறார்? ஆனந்த்சாமி மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் நடந்தது என்ன? கடைசியில் ஜெயப்பிரகாஷ், ஆனந்த்சாமி என்ன ஆனார்கள்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.
ஆனந்த்சாமி தனது தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பும், மனைவியை இழந்த அவரது ஆக்ரோஷமும் திரையில் ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் வீறு நடை போடும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சமூக வலைதளத்தாலேயே பாதிக்கப்பட்டு கதறும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அஷ்வதி லால், மிஷா கோஷால் இருவருமே காட்சிக்கு தேவையானதை சிறப்பாக அளித்திருக்கின்றனர். ஆனந்த்சாமி மற்றும் ஜெயப்பிரகாஷே அதிகளவிலான காட்சிகளில் நடித்திருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் பேசும்படியாக இல்லை.

நடிகரும், இயக்குநருமான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, அதனால் அந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்கள், தற்கொலை என பல்வேறு கோணத்தில் தனது ஆய்வை நடத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளத்தின் போக்கு வேறு கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், தங்கும் விடுதிகள் என மக்கள் செல்லும் பொது இடங்களில் அவர்களது பாதுகாப்புக்கு விரோதமாக ரகசிய கேமாரக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களால், அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் காட்சிகள் துல்லியமாக, புதுமையானதாக இருக்கிறது. அவர் அதை காட்சிப்படுத்தி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `லென்ஸ்' தெளிவு

காலீஸ் இயக்கத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி இணைந்து நடித்து வரும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வருகிறது.
இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.
செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. மே 20 வரை மொத்த படப் பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
“வித்தியாசமான திரைக் கதையில் ‘கீ’ படம் உருவாகிறது” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.

பல்வேறு வாத்தியங்களை இசைக்க, தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா பயிற்சி பெற்று வந்த காலக்கட்டம் அது.
அப்போது நடந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது:-
"ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷிடம் இருந்து ஒருவர் வந்தார். இசை `கம்போஸ்' செய்ய என்னை அழைத்து வருமாறு ஜி.கே.வி. கூறியிருப்பதாக, அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கூறினார்.
மாஸ்டர் என்னைப் பார்த்து, "கோடம்பாக்கம் போறியா?'' என்று கேட்டார்.
"நீங்க போகச்சொன்னா போகிறேன் சார்!'' என்றேன்.
"அங்கே போனா, மிïசிக் போயிடும். உருப்பட மாட்டானுங்க!'' என்று கூறிய மாஸ்டர் "உன்னை அப்படி நினைக்கவில்லை. போய் வா!'' என்றார்.
அவர் முழு மனதுடன் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். "பாடல் பதிவு நடந்த அன்றைக்கு, என்னை மிïசிக் டைரக்டர் என்று ஜி.கே.வி.க்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். அதனால்தான் என்னை அவர் அழைத்திருக்கிறார்'' என்றேன்.
"சரி, போயிட்டு வா!'' என்றார், மாஸ்டர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு படக்கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜி.கே.வெங்கடேஷ், `தபேலா' கன்னையா, தயாரிப்பாளரும் டைரக்டருமான பகவான்துரை ஆகியோர் இருந்தனர்.
ஆபீஸ் நடுவில், ஒரு ஜமுக்காளத்தில் ஹார்மோனியம், தபேலாவுடன் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ராஜ்குமார் நடிக்கும் "கோவாவில் சி.ஐ.டி. 999'' என்ற கன்னடப்படத்தில் வரும் பாடலுக்கான காட்சியை டைரக்டர் விவரித்தார்.
"ட்ïனை கம்போஸ் செய்து வையுங்கள். எங்களுக்கு வேலை இருக்கிறது. மாலையில் வந்து டிïனை கேட்கிறோம்'' என்று கூறிவிட்டு டைரக்டர் போய்விட்டார்.
பாடலை ஜி.கே.வெங்கடேஷ் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, "ஸ்வரத்தை நோட்ஸ் எழுதிக்கோ!'' என்று என்னிடம் கூறினார்.
"ஸ்வரம் எல்லாம் எனக்குத் தெரியாது சார்!'' என்றேன்.
"பின்னே எப்படி ஆர்மோனியம் வாசிச்சே?'' என்று கேட்டார், ஜி.கே.வி.
"அதெல்லாம் மனப்பாடம் செஞ்சது'' என்றேன்.
"காதடியா?'' என்று கேட்டார், ஜி.கே.வி.
(ஸ்வரம் தெரியாமல், காதில் கேட்பதை வைத்து வாசித்தால், அதற்குப் பெயர் "காதடி'')
"இப்படியெல்லாம் வாத்தியம் இல்லாமல் நீ வரவேண்டாம். மாஸ்டர் ரூமில் இருந்து கிட்டார் எடுத்து வா!'' என்று ஜி.கே.வி. கூறினார்.
கிட்டார் வாசித்து ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததால், மதியம் மாஸ்டர் ரூமில் இருந்த கிட்டார்களில் ஒன்றை, மாஸ்டரிடம் கேட்டு வாங்கி வந்தேன். ஜி.கே.வி. முன் போய் நின்றேன்.
"டேய்! நீ ஸ்வரம் எல்லாம் எழுதவில்லை என்றால், நான் கம்போஸ் பண்ணினதை நீ எப்படி திரும்ப எனக்குச் சொல்ல முடியும்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.
"சார்! எனக்கு ட்ïனை இரண்டு தடவை கேட்டா மனப்பாடம் ஆயிடும். அப்படியே திரும்பச் சொல்லிடுவேன்!'' என்றேன்.
"அதெல்லாம் சரிப்படாது!'' என்று கூறிய ஜி.கே.வி., பிறகு "சரி. பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, ட்ïன்களை கம்போஸ் செய்யத் தொடங்கினார். கிடுகிடுவென்று, பத்து ட்ïன்களை கம்போஸ் செய்து விட்டார்.
அதற்குள் டைரக்டர் பகவான்துரை வந்துவிட்டார். "வெங்கடேஷ்! ட்ïன்களைப் போடுங்கள், கேட்போம்!'' என்றார்.
"முதல் ட்ïன் எது?'' என்று என்னிடம் கேட்டார், ஜி.கே.வி.
நான் பாடினேன். உடனே அதை ஞாபகப்படுத்திக்கொண்டு ஜி.கே.வி. பாடிக்காட்டினார்.
"இரண்டாவது ட்ïன்?'' என்று ஜி.கே.வி. கேட்க, அதைப் பாடினேன்.
இப்படியே மூன்றாவது, நான்காவது என்று, பத்து ட்ïன்களையும் நான் ஞாபகத்தைக்கொண்டே பாடிக்காட்டினேன். ஜி.கே.வி.க்கு ஒரே ஆச்சரியம்! தபேலா கன்னையாவைப் பார்த்து, "என்னடா இவன்!'' என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "நீ என்ன, டேப் ரிக்கார்டரா?'' என்று கேட்டார்.
சிறிய டேப் ரிக்கார்டர் வராத காலம் அது.
ஜி.கே.வி. ஆச்சரியம் தீராதவராக பகவான் துரையைப் பார்த்து, "துரை! இந்தப் பையனைப் பாருங்க!'' என்றார்.
"ஆமாம், ஆமாம். ஆச்சரியமாகத்தான் இருக்கு!'' என்றார், பகவான் துரை.
அவர் கன்னடக்காரராக இருந்தாலும் தெளிவாகத் தமிழில் பேசினார்.
"வெங்கடேஷ்! இது நம் படத்தில் நீச்சல் குளத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் பாடுகிற பாட்டு! நீங்கள் மூன்றாவதாக போட்டிருக்கும் ட்ïன் ரொம்ப நல்லா இருக்கு...'' என்று பகவான் துரை கூற, "அப்ப, அதையே வச்சுக்கலாம்'' என்றார், ஜி.கே.வெங்கடேஷ்.
பிறகு அவர் என்னிடம், "நீ இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காதே. நீதான் இந்தப் பாடலுக்கு உரிய ஸ்வரங்களை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சொல்லணும்'' என்றார்.
அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. `இங்கேதான் ட்ïன் தொடங்குகிறது. இதுதான் ஸட்ஜமாக இருக்க வேண்டும். இதுதான் ரி...க...ம...ப...த..நி... என்று, ஒவ்வொரு ஸ்வரமாகத் தேடிக் கண்டுபிடித்து, அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன்.
எல்லாம் சரியாக இருந்தது.
பிறகு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, கோல்டன் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் நடந்தது.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.

சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள `விவேகம்'டீசர் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் `விவேகம்' என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று கூட சொல்லலாம்.
நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த புயல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. `விவேகம்' டீசர் வெளியாகி தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் யூடியூப்பில் மட்டும் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் `விவேகம்' டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர்.

நேற்று நள்ளிரவு சரியாக 12.01-க்கு வெளியான டீசர், 12 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.
பொதுவாக வெளியிடப்படும் டீசர்களை 12 மணிநேரத்தில் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட அளவீடு ஏதும் இல்லை. இந்நிலையில், `விவேகம்' 12 மணிநேரத்திற்குள் மொத்தமாக 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வெளியான படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான `கபாலி' படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் `கட்டமராயுடு' 57 மணிநேரத்தில் 50 லட்சமும், மூன்றாவது இடத்தில் `பைரவா' 76 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், 12 மணிநேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று `விவேகம்' புதிய சாதனை படைத்திருக்கிறது.

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள `விவேகம்' படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

தான் எடுக்கும் படத்தை நேர்த்தியாக, கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர் பாலா, தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நாயகனை பரோட்டா போட கற்று வருமாறு அனுப்பியுள்ளார்.
இயக்குனர் பாலா தற்போது, ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பாலா இயக்கும் படத்தில் பெரோஸ்கானின் மகன் ‘சாட்டை’ யுவன் நாயகனாக நடிக்கிறார். அதில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் வேடம்.
இதற்காக அவரை பரோட்டா போட கற்றுவருமாறு பாலா கூறினார்.
இதையடுத்து, யுவன் நாகூர் சென்று ஒரு பரோட்டா கடையில் ஒரு மாதம் பரோட்டா போட கற்று வந்திருக்கிறார். கடைக்கு வந்து போகிறவர்களிடம் அவர் யார் என்பதை சொல்லாமலே இதை செய்து முடித்திருக்கிறார்.

இப்போது, எல்லாவிதமான பரோட்டாக்களையும் போடுவதில் யுவன் ‘எக்ஸ்பர்ட்’ ஆகி இருக்கிறார். அடுத்து ஆயுதம் இல்லாமல் தாக்கும் சண்டைபயிற்சி பெற இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யுவனின் தந்தை பெரோஸ்கான் செய்து வருகிறார்.

ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லென்ஸ்’ படம் சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் படம் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’.
இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது....
பொதுவாகவே மக் களுக்கு மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை கூர்ந்து நோக்கி அறிந்து கொள்வதில் ஒரு தனி ஆர் வம் உண்டு. இது போன்ற எண்ணங்களும், நவீன தொழில் நுட்பங்களும் எவ்வாறு மனித வாழ்வை பாதிக்கின்றன என்பதை சொல்லும் படம் இது. எனவே, ‘லென்ஸ்’ என்று தலைப்பு வைத்தோம். மற்ற படங்களைப் போல் பாடல், காமெடி, காட்சிகளை தவிர்த்து கதைக்கு தேவையான காட்சிகளுடன் ‘லென்ஸ்’ உருவாகி இருக்கின்றது.
சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை சம்பவம் தான் ‘லென்ஸ்’ படத்தின் அடிப்படை. நல்ல கருத்தை சொல்லும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’ படத்தின் டீசர், வெளியாகிய 15 மணிநேரத்தில் 38 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும், படத்தின் பெயரும் பிப்ரவரி 2-ந்தேதி வெளியிடப்பட்டது.
அஜித் ‘சிக்ஸ்பேக்‘ உடலுடன் நிற்பது, உடற்பயிற்சி செய்வது, பனிமலையில் எந்திர துப்பாக்கியால் சுடுவது, பெரிய மரக்கட்டையை தூக்கி வருவது போன்ற பல்வேறு தோற்றங்களில் போஸ்டர்கள் வெளியாகின.

இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. ‘விவேகம்‘ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு ஹங்கேரி நாட்டில் நடந்து வருகிறது.
இயற்கை எழில்மிகுந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலயில் ‘விவேகம்‘ படத்தின் டீசர் அஜித் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வெளியாகவில்லை. பின்னர் 18-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 11-ந்தேதி டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதன்படி நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு விவேகம் டீசர் வரும் என்று ரசிகர்கள் காத்து இருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு 11 மணிக்கு விவேகம் டீசர் யுடியூப்பில் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.
57 நொடிகள் ஓடும் இந்த டீசரில் முதலில் உலக பட பின்னணியில் வரும் அஜித் இரண்டு கைகளிலும் துப்பாக்கியுடன் வந்து சுடுகிறார். தொடர்ந்து வனப்பகுதியில் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஓடுகிறார்கள். பின்னர் பிரமாண்ட ஓட்டல், நகரம், வீதி என்று கேமரா சுழல்கிறது.
அஜித் பல்வேறு தோற்றங்களில் வருகிறார். ஒரு மோட்டார் சைக்கிளில் அவர் வருவதுடன் டீசர் முடிவடைகிறது. அப்போது “நீயே நினைக்கிற வரை எவனாலும்.. எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது” என்ற வசனம் பின்னணியில் ஒலிக்கிறது.

இந்த டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஒருசில நொடிகள்தான் வருகின்றன. என்றாலும், பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. விமானங்கள், பனி மலை காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.
இந்த டீசர் வெளியானது அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. 15 மணி நேரத்தில் இந்த டீசரை 38 லட்சத்து 23 ஆயிரம் பேர் இணைய தளத்தில் பார்த்துள்ளனர். நேரம் ஆக ஆக பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று நள்ளிரவில் வெளியான தல அஜித்தின் `விவேகம்' படத்தின் டீசர் இணையதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு சில விஷயங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
சிறுத்தை சிவா - தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் டீசர், எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு 12.01 மணிக்கு யூடியூப்பில் வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாவே சமூக வலைதளங்களிலும் கசிந்துவிட்டது. எனினும் அஜித் ரசிகர்கள் டீசர் குறித்த தங்களது கொண்டாட்டங்களை முன்னதாகவே தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இணையதளங்களில் வெளியான `விவேகம்' டீசர் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டிருக்கிறது. டீசரில் அஜித் பேசும் வசனங்களும், அவரது புதுமையான ஸ்டைலும் அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.
ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் `விவேகம்' படத்தின் டீசர், அஜித்தின் பஞ்ச் டயலாக்குடன் தொடங்குகிறது.
"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட... தோத்துட்ட...ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது"
என்று `விவேகம்' படத் தலைப்புடன் (BELIEVE in YOURSELF) அந்த வசனம் முடிகிறது.

இதில் இந்த பஞ்ச் டயலாக்குக்கு ஏற்றவாறு தல அஜித் என்னென்ன செய்கிறார், எப்படியெல்லாம் வருகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, வசனம் தொடங்கும் போதே கையில் இரு துப்பாக்கிகளுடன் நின்று சுட்டுக் கொண்டிருக்கும் அஜித், பின்னர் காட்டுக்குள் உலா வருகிறார். பின்னர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு, டாம் ஒன்றில் நடைபெறும் தாக்குதல் என விறுவிறுப்பு கூட, அழுக்கு உடலுடன் "புல் அப்ஸ்" எடுக்கும் காட்சிகள் தெறிக்க விடுகின்றன.
பின்னர் ஒரு சுரங்கப்பாதைக்குள் திரும்பி நிற்கும்படியான போஸ், ராணுவ உடையில் தல அஜித் முன்னால் நடக்க, மற்ற வீரர்கள் பின்னால் நடப்பது போன்ற காட்சிகள் அவரது மாஸை மேலும் கூட்டியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து "NEVER EVER GIVE UP" வசனத்துடன் பைக்கில் வந்துக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கியால் சுடும் காட்சிகள், மரத்தை ஆக்ரேஷமாக உடைப்பது என டீசர் முடிகிறது.
இந்த டீசரின் மூலம் `விவேகம்' படத்திற்காக படக்குழுவினர் எவ்வாறு உழைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. சிவாவின் மாஸான இயக்கமும், அனிருத்தின் பின்னணி இசையும் பாராட்டப்படும்படி இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வெற்றியின் ஒளிப்பதிவும், எடிட்டர் ரூபனின் கட்டும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.

நடிகை அனுஷ்கா- தெலுங்கு நடிகர் பிரபாஸ் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. இவர் 2002-ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘அருந்ததி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தி வரும் பாகுபலி-2 படத்திலும் பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார். தொடர்ந்து பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அனுஷ்காவுக்கு வயதாகி விட்டதால், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், பாகுபலி படம் வெளியானதும் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. சில நடிகர்களுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்களும் வந்தன.
தெலுங்கு பட உலகில் அறிமுகப்படுத்தி தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த நாகார்ஜுனாவை அவர் விரும்புவதாக கூறப்பட்டது. ஆர்யாவுடனும் சேர்த்து பேசப்பட்டார். அவர்களை காதலிக்கவில்லை என்று பின்னர் மறுப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தெலுங்கு பட உலகில் புதிதாக தகவல் பரவி உள்ளது. பிரபாசுக்கு 37 வயது ஆகிறது. அவருக்கும் வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலியில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலை பிரபாஸ் குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும், அவர்கள் வேறு பெண்ணை பார்ப்பதாகவும் தகவல் பரவுகிறது. காதல் கிசுகிசுக்களுக்கு அனுஷ்கா-பிரபாஸ் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் வரவில்லை. தற்போது பிரபாஸ் வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகளின் லட்சிய கனவு படமான ‘பச்சே கச்சே சச்சே’ படத்தின் முன்னோட்டம்.
சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பச்சே கச்சே சச்சே’.
எல்லா குழந்தைகளுக்கும் ஒரு கனவு உண்டு. டாக்டரோ விஞ்ஞானியோ அல்லது யாரும் நினைக்காததை சாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இருக்கும்.
அதன்படி குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் விளையாட்டு, பேச்சு என்றில்லாமல் தனது இலக்கினை எப்படி அடைகிறார்கள் என்பதை காட்டும் விதமாக ‘பச்சே கச்சே சச்சே’ படம் உருவாகி இருக்கிறது.
இதில், அன்னா ஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏக்தா சிங், ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, லோகஷிட் பட்நாயக், யாஷ்சுக், அபிஷேக் ஜீத்வா, நிக்குஞ் பொன்டய்யா, துர்வேஷ் எஸ்.பராப், நிஷி காந்த், ஆதிப் உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு-ஜெய் நந்தன்குமார், இசை-ரவி சங்கர், பாடல்கள்-மீனா உதாண்டா, வெங்க டேஷ்வரா, தயாரிப்பு- மீனா உதாண்டா, ரவிசதாசிவ், இயக்கம்- ரவி சதாசிவ்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்தி மொழியில் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"திருச்சியில் நான் இசை அமைத்த நாடகமான ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' அரங்கேறிய பின், சென்னைக்குப்
புறப்பட்டோம்.அப்போது, திருமதி கமலா அவர்களிடம், "கர்நாடக இசை அல்லது வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொடுக்க யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றேன்.
"கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. மேற்கத்திய இசை கற்றுத்தரும் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மாணவர் ஒருவரை எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன்'' என்றார், கமலா.
அடுத்த நாள், நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மூத்த மகன் சாய்பாபா (எம்.எஸ்.வி.யிடம் கிட்டார் வாசிப்பவர்) என் ரூமிற்கு வந்தார். கமலா அவர்கள் சொன்னதன் பேரில் வந்திருப்பதாகச் சொன்னார். இசையில் புகழ் பெற்ற மாஸ்டர் தன்ராஜிடம் அழைத்துப் போவதாகக் கூறினார்.
அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவருடன் புறப்பட்டேன். மைலாப்பூர் சாயிலாட்ஜ் 13-ம் நெம்பர் அறையில், பியானா மற்றும் பல இசைக் கருவிகள், இசை பற்றிய புத்தகங்களுடன் தன்ராஜ் மாஸ்டர் இருந்தார். இரண்டு மூன்று மாணவர்களுக்கு கிட்டாரில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில், மாணவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, என்னை மாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சாய்பாபா.
"இரண்டு நாள் கழித்து, காலை பத்து மணிக்கு வரச்சொல். பாடத்தை ஆரம்பிக்கலாம். வரும்போது, ஒரு நோட்டுப் புத்தகம், ஊதுபத்தி, தேங்காய், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிவர வேண்டும்'' என்று சாயிபாபாவிடம் தன்ராஜ் மாஸ்டர் கூறினார்.
`சரி' என்று கூறிவிட்டு, நானும், சாய்பாபாவும் அங்கிருந்து புறப்பட்டோம்.
நான் ரூமுக்குச் சென்றதும், பாரதி, பாஸ்கர் இருவரிடமும் நடந்ததைக் கூறி, "இனி இசை கற்பதற்கான பீஸ், நமது பட்ஜெட்டில் சேருகிறது. அதற்கு வேண்டிய நிதி ஒதுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு'' என்றேன், சிரித்துக்கொண்டே.
பாடம் தொடங்கும் நாள் வந்தது. நோட்டுப்புத்தகம், பூ, தேங்காய் - பழம், ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொண்டேன். குருதட்சணையாக பணம் வைக்க வேண்டும் என்று சாய்பாபா கூறியிருந்ததால், தட்டில் 25 ரூபாய் வைத்து, மாஸ்டரிடம் கொடுத்தேன்.
தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டவுடன், "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார், மாஸ்டர்.
"ராஜையா'' என்றேன்.
"அதென்ன ராஜையா! இன்று முதல் உன் பெயர் ராஜா!'' என்றார், தன்ராஜ் மாஸ்டர்.
பெயர் மாற்றத்தை இவ்வாறு வெகு எளிதாகச் செய்துவிட்டார்.
பிறகு நோட்டுப் புத்தகத்தை திறந்து, "7'' என்ற எண்ணை, பட்டையடிக்கும் ஒரு பேனாவால் பச்சை மையில் எழுதினார். அதன்பின் ஏழுசுரங்களை எழுதிக் காட்டினார்.
என் முதல் ஆசானின் கால்களைத் தொட்டு வணங்கினேன். அப்போது, என்னை அறியாது என் சுயமரியாதைக் கொள்கை விலகிவிட்டிருந்தது.
சரி; மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் வந்துவிட்டார்கள்.
மாஸ்டர் என்னைப் பார்த்தார்.
"இன்றைக்கு என்ன கிழமை?''
"வியாழன்!''
சரி; நீ போய்விட்டு, ஞாயிற்றுக்கிழமை வா!'' என்றவர், சற்று யோசித்துவிட்டு, "வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை ரொம்பக் கூட்டமாக இருக்கும். திங்கட்கிழமை வந்துவிடு!'' என்றார்.
`அடடா! இன்னும் நமக்கு நேரம் வரவில்லை போலிருக்கிறதே!' என்றபடி திரும்பினேன்.
அவர் கூறியபடி திங்கட்கிழமை போனேன். `இன்றைக்காவது நிறைய பாடம் எடுப்பார்' என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அன்றைக்கும் அரை மணி நேரம்தான். மீண்டும் அடுத்த வாரம் வருமாறு சொன்னார்.
"சார்! எனக்கு ஒரு வேலையும் இல்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறேனே!'' என்றேன்.
"ஊகூம். அது ரொம்ப கஷ்டம். தினமும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இடையில், உனக்கு மட்டும் தினமும் பாடம் எடுக்க முடியுமா? .... நான் பிறகு யோசித்துச் சொல்கிறேன்!''
"சார்! நான் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே!''
"உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?''
"மாதம் 25 ரூபாய்?''
"சரி! சரி!''
- இவ்வாறு கூறிய மாஸ்டர் பிறகு என்ன நினைத்தாரோ! "சரி நீ வேண்டுமானால் தினமும் வந்து போ! பாடத்திற்காக அல்ல. சும்மா, எனக்கு வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டார்.
"ஓ! சம்மதம் சார்!'' என்றேன்.
பொதுவாக, சினிமா உலகில் உள்ள எந்த இசைக் கலைஞரிடமும், "யாரிடம் பாடம் கற்றுக்கொண்டாய்?'' என்று கேட்டால், "தன்ராஜ் மாஸ்டரிடம்!'' என்றுதான் கூறுவார்கள். அவ்வளவு திறமை பெற்றவர். அவர் பெயரைச் சொல்லாதவர்கள் எவரும், எந்த இசை அமைப்பாளர் குழுவிலும் இடம் பெறமுடியாது.
"மங்கம்மா சபதம்'', "சந்திரலேகா'' முதலான ஜெமினியின் படங்களின் வாத்தியக் குழுவில் முக்கிய இடம் வகித்தவர்.
தன்ராஜ் மாஸ்டரிடம் வயலின், கிட்டார், பியானோ, ஹார்மோனியம், புல்லாங்குழல், பேஸ் கிட்டார், அக்கார்டின் முதலான வாத்தியங்களை கற்றுக்கொள்ள பல மாணவர்கள் வருவார்கள். எனக்குப்பாடம் இல்லாத நேரத்தில்கூட இவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து, அந்தந்த வாத்தியங்களின் தனித்தன்மையைத் தெரிந்து கொண்டேன்.
ஒருநாள், நானும், மாஸ்டரும் மட்டும் இருந்தோம்.
"நீ ஹார்மோனியம் வாசிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? எங்கே, இந்த பியானோவில் ஏதாவது வாசி!'' என்று கூறினார், மாஸ்டர்.
எனக்கு ஒரு நிமிடம் ஷாக். என்றாலும், அவர் இல்லாத நேரங்களில் சில சினிமாப் பாடல்களை பியானோவில் பிராக்டிஸ் செய்து வைத்திருந்தேன். எனவே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்திருந்த "என்ன என்ன வார்த்தைகளோ...'' என்ற பாடலை பியானோவில் வாசித்தேன்.
நான் வாசித்துக்கொண்டிருந்தபோதே சில மாணவர்கள் வந்துவிட்டார்கள். வாயைத் திறந்தபடி, ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள்.
அவர்கள் முக பாவத்தை கவனித்த மாஸ்டர், அவர்கள் என் வாசிப்பை ரசிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டார். அந்த மாணவர்களோ, என்னை மாஸ்டருக்கு வேண்டியவன் என்றும், அதனால்தான் சினிமாப்பாடல்களை எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.