search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்கோபால் வர்மா"

    • இயக்குனர் ராம்கோபால் வர்மா புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது.

    ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து 'வியூகம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார்.


    இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியான சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்று உள்ளன. இவர்கள் இருவரையும் இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமல்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர்.

    இந்த நிலையில் வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி - 11 ம் தேதி வரை 'வியூகம்' படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி.
    • இவருக்கு இயக்குனர் ராம்கோபால் குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட அவர், அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தை இயக்கினார்.


    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    ராம்சரண் சீதா ராமராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தற்போது விருதுகளை வென்று குவித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்று அசத்தியது. அதேபோல் சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. இதுதவிர ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து அவரிடம் ஆர்.ஆர்.ஆர் படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்ததாக வியந்து கூறி இருந்தார். அதோடு ஹாலிவுட் படம் இயக்க ஐடியா இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.


    ராம்கோபால் வர்மா

    ராம்கோபால் வர்மா

    இந்நிலையில் உலகளவில் பிரபலமான ராஜமவுலி குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதில், "ராஜமவுலி சார் உங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதுள்ள பொறாமையால் சில இயக்குனர்கள் உங்களைக் கொல்ல குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவில் நானும் இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் நான் உண்மையை கூறிவிட்டேன்" என பதிவிட்டுள்ளார். ராம்கோபால் வர்மா குடி போதையில் இப்படி உளறி இருப்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.

    ×