என் மலர்
24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கவுள்ளது.
‘டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டீசரையும் நாளை மறுநாள் (18.05.2017) மாலை 7 மணிக்கு இப்படத்தின் டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ராக்ஷி கன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா 4 வயது குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டண்ட் யூனியனின் பொன்விழாவையொட்டி நடைபெறவிருககும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு இந்தியாவில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்க உள்ளார்களாம்.
ஸ்டண்ட் யூனியனின் பொன் விழாவையொட்டி பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஸ்டண்ட் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது,
சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத்தான் ஒரு படம் திரைக்கு வருகிறது. அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்..

இன்று எங்களோடு இல்லாவிட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் 50-ஐ கடந்திருக்கிறோம். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பொன்விழாவை ஆகஸ்ட் 26 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்.
நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம்.

எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம். விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப் படுத்த உள்ளோம். சுமார் 6 மணி நேரம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் நடைபெறும்.
கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த ஷோ இயக்குனராக மானாட மயிலாட புகழ் கோகுல் நாத் இருக்கிறார். பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான் மற்றும் இணை செயலாளர் ஆர்.நாராயணன், துணை செயலாளர் பரமசிவம், துணைத்தலைவர் ராக்கி ராஜேஷ், உபதலைவர் கே.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். மற்றும் ஏராளமான ஸ்டண்ட் மாஸ்டர்கள், ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

ஜி.வி.பிரகாஷ் இப்போது சிம்புவின் ரசிகராக மாறிப்போயிருக்கிறார். அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவ்வளவு சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் சிம்புவின் ரசிகராக வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டீசர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. வருகிற ரம்ஜான் தினத்தையொட்டி இப்படத்தின் முதல் பாகம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

ரஜினி இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தார். அனைத்து மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
நேற்று கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்று 2-வது நாளாக புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த 750 ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். சரியாக காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரஜினி வந்தார். இன்று வெள்ளை ஜிப்பா அணிந்து இருந்தார்.
மேடையில் உள்ள நாற்காலியில் ரஜினி உட்கார்ந்து இருந்தார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் வரிசைப்படி ரஜினி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாளை விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்.

ஜீவா - ஸ்ரீதிவ்யா நடிப்பில் நாயகனின் குடும்ப பாசத்தை சொல்லும் `சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் முன்னோட்டம்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் `சங்கிலி புங்கிலி கதவதொற'.
இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ராதாரவி, ராதிகா சரத்குமார், கோவை சரளா, தம்பி ராமையா, `நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, இளவரசு, தேவதர்ஷினி, வாசுவிக்ரம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை- விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், எடிட்டிங்-டி.எஸ். சுரேஷ், கலை-லால்குடி என். இளைய ராஜா, ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன்,

எழுத்து, இயக்கம் - ஐக். படம் பற்றி அவர் கூறும் போது....
" `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்பது கிராமத்து குழந்தைகள் ஒரு விளையாட்டில் பாடும் பாடல். அதைத்தான் இந்த படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறேன். இது குடும்ப கதை என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும். நாயகன் ஜீவா, நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட அனைவரும் அருமையான நடிப்பை கொடுத் திருக்கிறார்கள். இதில் விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத் பாடி இருக்கிறார்கள்'' என்றார்.
படம் பற்றி நாயகன் ஜீவா, சொல்கிறார்.... "இதன் இயக்குனர் ஐக், எம்.ஆர். ராதாவின் குடும்பத்தில் இருந்து வந்தவர், திறமைசாலி. ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விடக்கூடாது. வெற்றியைவிட குடும்பம் முக்கியமானது என்பதை இயக்குனர் ஐக் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

யோசித்து யோசித்து சிரிக்கும் அளவு `காமெடி' காட்சிகள் உள்ளன. நாயகன் எப்படி குடும்பத்தினருடன் பாசப்பிணைப்புடன் இருக்கிறான் என்பதை அழகாக சொல்லி இருக்கும் கதை. குடும்பத்துடன் குழந்தைகளுடன் ரசிக்கும் படம்''

புதுமுக நடிகர்கள் யாகவன், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மங்களாபுரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
டெல்லிகணேஷ் தனது பேரன், பேத்திக்கு கதை சொல்லுவதாக படத்தின் கதை ஆரம்பிக்கிறது.
மங்களாபுரம் ஜமீனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் திருமணமாகி ஜமீனுடன் இருக்கிறான். இளையவனான நாயகன் யாகவன் சென்னையில் படித்து வருகிறார். படிக்கும்போதே நாயகி காயத்ரியை காதலித்து அவளை திருமணமும் செய்துகொள்கிறான்.
சொந்த ஊருக்கு திரும்பும்போது அவரது அப்பா, அண்ணன், அண்ணி அனைவரும் இறந்துபோயிருக்கிறார்கள். அண்ணன், அண்ணி புகைப்படத்துக்கு மட்டும் மாலை போடப்பட்டிருக்க, அப்பாவின் புகைப்படம் இல்லாதது குறித்து யாகவனிடம் அதுபற்றி கேட்கிறார் காயத்ரி. ஆனால், யாகவனோ அவளிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவுகிறார்.
அன்றுமுதல் காயத்ரியின் உடம்பில் ஒரு ஆவி புகுந்துகொண்டு, யாகவனை அவளிடம் சேரவிடாமல் தடுக்கிறது. இறுதியில், அவள் உடம்பில் ஆவி புகுந்திருப்பதை அறியும் யாகவன் ஜோசியரின் உதவியை நாடுகிறான். அவரோ அந்த வீட்டில் நடந்த அனைத்து விவரங்களையும் சொன்னால், அதற்கு தீர்வு சொல்வதாக கூறுகிறார்.
யாகவன் வேறு வழியில்லாமல் நடந்ததை கூறுகிறார். அதன்படி, நிறைமாத கர்ப்பிணியான தனது அண்ணி கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததாகவும், அவள் இறந்த சோகத்தில் அண்ணனும் சில காலத்தில் இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
அண்ணியை மர்மமான முறையில் கொன்றவர் யார்? காயத்ரியின் உடம்பில் புகுந்துள்ள ஆவி யாருடையது? அவளுடைய உடம்பில் எதற்காக அந்த ஆவி புகுந்துள்ளது? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் விடை சொல்லியிருக்கிறார்கள்.
யாகவன் ரொம்பவும் அப்பாவியான தோற்றத்துடனே படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடமிருந்து பெரியதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், இவருக்கான காட்சிகள் ரொம்பவும் குறைவுதான். அந்த காட்சிகளுக்காகவாவது கொஞ்சம் சிரமம் எடுத்திருக்கலாம்.
அதேபோல், நாயகி காயத்ரியின் கதாபாத்திரமும் படத்தில் பெரிதாக இல்லை. அவரும் ஏதோ பொம்மை போல் வந்து போயிருக்கிறார். நாயகனுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.
அண்ணியாக வரும் கமலிக்குத்தான் படத்தில் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இருந்திருக்கிறது. படத்தின் இன்னொரு கதாநாயகி இவர்தான் என்று சொல்லலாம். ஆக்ரோஷமான காட்சிகளில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. செண்டிமென்டிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
ஜமீனாக வரும் அஜய் ரத்தினம் தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார். டெல்லி கணேஷ் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். போண்டா மணி தனது குழுவுடன் செய்யும் காமெடிகள் எல்லாம் பெரிதாக ரசிக்க முடியவில்லை.
இயக்குனர் கோபால், செண்டிமென்ட் கலந்த ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் திரில்லருக்குண்டான காட்சிகளை சரியாக அமைக்காதது வருத்தமே. அதேபோல், கதாபாத்திரங்களிடம் சரியாக வேலை வாங்க தவறியிருக்கிறார்.
இளநாயகனின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. பின்னணி இசையிலும் வேகம் கூட்டியிருக்கலாம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுக்கவில்லை.
மொத்தத்தில் ‘மங்களாபுரம்’ மங்களமில்லை.

கன்னடத்தில் ‘டேஞ்சர் ஜோன்’ என்ற பெயரில் வெளிவந்த திகில் படம் ‘மர்மக்காடு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விமர்சனத்தை பார்ப்போம்.
திருமணமான புதுத் தம்பதியர் தங்களது தேனிலவை கொண்டாட காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள். இவர்கள் செல்லும் வழியிலேயே காரை நிறுத்தி, இருவரும் உறவு கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது மர்மமான ஒரு உருவம் இவர்களை தாக்கி கொலை செய்கிறது. இதையடுத்து மீடியா பரபரப்பாகிறது.
அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து பல்வேறு தகவலும் பரவுகிறது. இதையடுத்து டிவி ரிப்போர்ட்டரான நாயகி ரம்யா, இந்த கொலை பற்றி தனியாக ஒரு நிகழ்ச்சி தயாரிக்கப்போவதாக சொல்லி காட்டுக்குள் தனது நண்பர்களுடன் புறப்படுகிறார்.
அவரை காதல் செய்வதாக சுற்றி வரும் நாயகனையும் கூடவே அழைத்துச் செல்கிறாள். சென்ற இடத்தில் நாயகியின் நண்பர்களும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த மர்ம உருவம் பெண்களையே குறி வைத்து தாக்குகிறது. இதற்கு காரணம் என்னவென்பதை நாயகி மற்றும் நாயகன் கண்டுபிடித்தார்களா? அந்த மர்மமான உருவத்தில் சுற்றும் நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கன்னடத்தில் டேஞ்சர் ஜோன் என்ற பெயரில் வெளிவந்த படமே தமிழில் மர்மக்காடு என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் தேவராஜ் குமார் படத்தில் திகில் ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய வைத்திருக்கிறார். ஆனால், அதை சரியாக படமாக்கப்படாததுதான் மிகப்பெரிய குறையாக தெரிகிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே படமாகியிருந்தாலும், காட்சிகள் தெளிவாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் திகில் ஏற்படாதது வருத்தமே.
படத்தின் நாயகி ரம்யா ஏற்கெனவே பார்த்த முகம்தான் என்றாலும், இந்த படத்தில் ரிப்போர்ட்டருக்குண்டான மிடுக்கு இவருக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். திகில் காட்சிகளிலும் அதற்குண்டான முகபாவனைகளை கொடுக்க தவறியிருக்கிறார். நாயகன் ரூபேஷ் ஷெட்டிக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்புகள் ரொம்பவும் குறைவுதான். இருப்பினும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது.
மற்றபடி படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. வீனஸ் மூர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. சதீஷ் ஆர்யனின் பின்னணி இசை இரைச்சலாகவே இருக்கிறது. பாடல்களும் பெரிதாக இல்லை.
மொத்தத்தில் ‘மர்மக்காடு’ மர்மம் இல்லை.

ஜெயராம் மற்றும் இனியா நடித்த சமுத்திரகனியின் மலையாள படப்பிடிப்பு முடிந்தது விட்டது என்று ஜெயராம் தெரிவித்துள்ளார்.
சமுத்திரகனியின் `நாடோடிகள்' படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா'வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா' படத்துக்கு `ஆகாச மிட்டாயி' என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது.
இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. ஜெயராம் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று ஜீவா கூறினார்.
ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற' படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி....
தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள் எடுத்துவிட்டு படத்திற்கு ` ஒரு சந்து' என்று பெயரிட்டு வெற்றிப் பெறும் வகையிலான திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதனால் தமிழ் சினிமாவின் பட்ஜெட் மாறிவிட்டது.
தமிழ் சினிமாவிற்கு கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு தேவையான கதையை எழுதுவது அவர்கள் தான். நாங்கள் நடிகர்கள் கதையை கேட்கிறோம். பிடித்தால் கால்ஷீட் தருகிறோம். அவ்வளவு தான் எங்களின் பணி.
ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கதையை எழுதக்கூடியவர்கள் அவர்கள். கதாசிரியருக்கும், இயக்குநருக்குமான ஊதிய இடைவெளியை குறைக்க வேண்டும். பாகுபலி போன்ற படங்கள் தமிழிலும் வரவேண்டும். பொன்னியின் செல்வன், மருதநாயகம் போன்ற கதைகள் நம்மிடம் நிறைய உள்ளன. லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் சினிமாவை நேசிப்பவர்கள் அதைவிட்டு போகமாட்டார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளங்களில் நடிக்க விரும்புகிறேன்.
`சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் நடிகர் ஆர்யாவை கெஸ்ட் ரோலில் நடிக்கவைத்து இதனை தொடங்கி வைத்தது நான் தான். அதன் பின் நானும் ஆர்யாவும் ஏராளமான படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டோம். இது ஆரோக்கியமான விசயமாக இருந்தாலும், தற்போது இதுவும் போரடித்து விட்டது.
`ராம் 'போன்ற பர்பாமென்ஸ் ஓரியண்டட் திரில்லர் கதை என்றால் நடிக்க தயாராகயிருக்கிறேன். அதே போல் மாறுபட்ட கதையில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது''.

`பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கு காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுஷ்கா நீக்கியதாக கூறப்படுகிறது.
`பாகுபலி' படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல திரை உலகினரும் பாராட்டி உள்ளனர்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு' கிளம்பும்.
ஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
அந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின.

இப்போது `பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா துப்பு துலக்கியபோது அதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் என்று கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படித்த காலத்தில் சிலர் என்னை விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை என்று நந்திதா கூறினார்.
`அட்டக்கத்தி', `எதிர்நீச்சல்', `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் நந்திதா. தற்போது `நெஞ்சம் மறப்பதில்லை', `வணங்காமுடி', `உள்குத்து' படங்களில் நடிக்கிறார். இது பற்றி கூறிய நந்திதா...
" `உள்குத்து' படத்தில் நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் வேலைபார்க்கும் சாதாரண பெண்ணாக நடிக்கிறேன். சூட்டிங் நடந்த துணிக்கடையில் நான் வேலை செய்வதாக நினைத்து துணி வாங்க வந்த பெண்கள் என்னிடமே விலை கேட்டனர்.
இந்த படத்தில் தினேஷ் ஹீரோ. பாலசரவணன் எனது அண்ணனாக நடித்திருக்கிறார். நான் அவருக்கு பயப்படும் தங்கை. இயக்குனர் கார்த்திக் இந்த படத்தை அழகாக எடுத்து இருக்கிறார்.
எனக்கு பேய் படங்கள் பிடிக்காது. தெலுங்கில் நான் நடித்த பேய்படம் `ஹிட்' ஆனது. அது போன்ற வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவற்றை தவிர்த்து விட்டேன். பேய் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை.
`பாகுபலி' ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன். `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். நான் குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதைதான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இனி வித்தியாசமான வேடங்களில் நடிப்பேன். பிடித்த கதைகளில் மட்டும்தான் நடிக்கிறேன். திரைத்துறையில் என்னை யாரும் காதலிக்கவில்லை. நானும் காதலிக்க வில்லை. படித்த காலத்தில் சிலர் என்னை விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவேன். திரைத்துறையிலும் `பார்ட்டி'களுக்கு செல்வது இல்லை'' என்றார்.

ஏலியன்களை மையப்படுத்தி ஏலியன் கவனன்ட் என்ற பெயரில் ஹாலிவுட் படம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 2000 பேர் கொண்ட குழு ஒரு கிரகத்தை நோக்கி விண்வெளி கப்பலில் தனது பயணத்தை தொடருகிறது. அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும் என்று கிடைத்த தகவலின்படி மனிதனின் கருமுட்டையை எடுத்துக்கொண்டு அந்த கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த கிரகத்தை சென்றடைய அவர்களுக்கு 8 வருடங்கள் ஆகும். எனவே, அவர்கள் பயணிக்கும் விண்வெளிக் கப்பலில் அனைவரும் தூக்கத்திலேயே இருக்கும்படி செய்து, அவர்களை ஒரேயொரு ரோபோ மட்டும் கண்காணித்துக் கொண்டே செல்கிறது.

இந்த பயணத்தின்போது விண்வெளியில் திடீரென ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு இவர்கள் பயணிக்கும் விண்வெளி கப்பலில் பழுது ஏற்பட்டு விடுகிறது. இதனால், தூக்கத்தில் இருந்த சிலபேர் விழித்துக் கொள்கிறார்கள். மேலும், சில பேர் மரணமும் அடைகிறார்கள். அவர்களில் விண்வெளி கப்பலின் கேப்டனும் மரணமடைகிறார். இதனால், கேப்டன் பொறுப்பை வேறொருவர் ஏற்றுக் கொண்டு விண்வெளி கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்கிடையில், இவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து ஒரு சிக்னல் கிடைக்கிறது. அந்த சிக்னலை அவர்கள் ஆராயும்போது, அது அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து வருவதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த கிரகத்தை அடைய ஒருவார காலம் மட்டுமே ஆகும் என்பதால், அந்த கிரகத்திற்கு சென்று அங்கு உயிர்வாழ்வதற்கு ஏதாவது வழி கிடைக்கிறதா? என்பதை அறிய அங்கு பயணப்படுகிறார்கள். அந்த கிரகத்தையும் அடைகிறார்கள்.

விண்வெளிக் கப்பலை விண்வெளியில் நிலைநிறுத்திவிட்டு, 10 பேர் கொண்ட குழு மட்டும் அந்த கிரகத்திற்குள் சிறு கப்பல் மூலம் இறங்குகிறார்கள். அவர்களில் சிலபேரை அங்குள்ள ஏலியன்ஸ் உடம்பில் புகுந்து கொன்றுவிடுகிறது. இவர்கள் வந்த சிறு கப்பலையும் அது அழித்துவிடுகிறது. இதனால், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளி கப்பலுக்கு இவர்களால் எந்தவொரு செய்தியையும் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இறுதியில் அந்த ஏலியன்ஸ்களிடமிருந்து மற்றவர்கள் எப்படி தப்பித்தார்கள்? இவர்கள் தேடிச்செல்லும் கிரகத்தை இறுதியில் அடைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் பிரம்மாண்டம் என்று சொல்லப்போனால் கிராபிக்ஸ் காட்சிகள்தான். ராட்சத விண்வெளி கப்பல், ஏலியன்ஸ் என அனைவற்றையும் ரொம்பவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் கதாநாயகன், கதாநாயகி என யாரையும் தனியாக பிரிக்காமல் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பினும், ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கிற உணர்வு இந்த படத்தை பார்க்கும்போது கிடைக்கவில்லை என்பதுதான் பலவீனம். பின்னணி இசை படத்திற்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏலியன்ஸ்களின் அட்டகாசத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம்.

படத்தில் பெரும்பாலும் வசனங்கள் பேசிக்கொண்டே செல்வதால் படத்தின் விறுவிறுப்பு தடை ஏற்பட்டிருக்கிறது. இப்படியாக சிறு சிறு விஷயங்களை கவனத்தில் கொண்டிருந்தால் இப்படம் கண்டிப்பாக ஹாலிவுட் தரத்திற்கு இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.
மொத்தத்தில் ‘ஏலியன் கோவினன்ட்’ புதுமையில்லை.