என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர் ரஜினி காந்த் இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

    சென்னை கோடம்பாக்கத்தில் நடந்து வரும் இந்த சந்திப்பில், முதல் கட்டமாக 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். தினமும் 3 மாவட்டங்களை சேர்ந்த 750 ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.


    முதல் நாளில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 2-வது நாளான நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 3-வது நாளான இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்.

    இன்று சந்திப்பதற்காக அடையாள அட்டையுடன் வந்த 3 மாவட்டங்களையும் சேர்ந்த 750 ரசிகர்களும் ராகவேந்திரா மண்டபத்தின் உள்ளே, இருக்கையில் உட்கார வைக்கப்பட்டனர். வரிசை எண்களின்படி அவர்கள் ரஜினியை சந்திக்க தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாத ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினியை பார்ப்பதற்காக மண்டபத்துக்கு வெளியே கூடி நின்றனர். ரஜினி அந்த வழியாக போகும் போது எப்படியாவது பார்த்து விடலாம் என்று காத்து இருந்தனர்.

    காலை 8.55 மணிக்கு மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று ரோட்டில் நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த ரஜினி கூடி நின்ற ரசிகர்களை திடீரென்று சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரை கண்டதும் ரசிகர்கள், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘தலைவர் ரஜினி வாழ்க’ என்று கோஷமிட்டனர்.


    அவர்களை அமைதிப்படுத்திய ரஜினி, "நீங்கள் என்னை காண வந்தது மகிழ்ச்சி'' என்று கூறியபடி அனைவருக்கும் வணக்கம் சொன்னார். பின்னர் கைகளை அசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் ரசிகர்களுடன் நின்ற ரஜினி பின்னர் காரில் ஏறி மண்டபத்துக்கு சென்றார்.

    அங்கு காத்திருந்த ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு சென்று ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்று ரஜினி சந்தன கலர் ஜிப்பா அணிந்து இருந்தார். ரசிகர் ஒருவர் அவரது மகனுடன் புகைப்படம் எடுக்க வந்தார். அந்த சிறுவனை ரஜினி தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.


    புகைப்படம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் சிறிது நேரத்தில் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நாளை 4-வது நாள் கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். 19-ந் தேதி வரை முதல் கட்ட சந்திப்பு நடக்கிறது. 2-வது கட்டமாக அடுத்த மாதம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் அரசியலில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன் என்று நடிகர் மாதவன் பேட்டியளித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, “அரசியல் ஆசையில் இருக்கும் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஏமாந்து போவீர்கள். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்.

    அப்படிப்பட்ட சிந்தனையில் இருப்பவர்கள் இப்போதே ஒதுங்கி விடுங்கள் இல்லாவிட்டால் ஏமாந்து போவீர்கள்” என்று பேசினார். “என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. அவர் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக உண்மையாக செயல்படுவேன்” என்றும் அவர் கூறினார்.



    இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று நடிகர் மாதவன் நிருபர்களிடம் கூறும்போது, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்படுகிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு நல்லது எது என்று நன்றாக தெரியும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் அரசியலில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன்” என்றார்.
    அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் `யங் மங் சங்' படத்தின் முன்னோட்டம்.
    வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது `ஒரு பக்க கதை', `ஓடி ஓடி உழைக்கனும்' படங்களை தொடர்ந்து தயாரிக்கும் படம் `யங் மங் சங்'. இதில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கிறார்.  கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே. பாலாஜி, பாகுபலி பிரபாகர், கும்கி அஸ்வின் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், இசை - அம்ரீஷ், கலை - ராஜன்.டி, தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர் அர்ஜுன் "இந்தப் படத்திற்காக பிரபுதேவா முதல்முறையாக எழுதிய "அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு'' என்ற பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர் மகாதேவன் குரலில் பதிவானது.

    இந்த பாடல் காட்சி கும்பகோணத்தில் 150 நடன கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. பிரபுதேவா  நடனத்தை பார்த்து  ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த பாடல் காட்சி ஸ்ரீதர் நடன அமைப்பில் உருவாகி இருக்கிறது. இது படத்தில் ஹைலைட்டாக  இருக்கும்'' என்றார்.
    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாள ராக இளையராஜா பணியாற்றிக் கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நாடகங்களுக்கும் இசை அமைத்தார்.

    இப்படி, இரவு - பகலாக வேலை பார்த்து வந்ததால், தன்ராஜ் மாஸ்டரை பார்க்க முடியாமல் போய் விட்டது.

    ஏற்கனவே அவர் கூறிய படி, இசையில் பட்டம் பெற லண்டன் `டிரினிட்டி காலேஜ் ஆப் மிïசிக்'' நடத்தும்  பரீட்சையில் பங்கு கொள்ள இளையராஜா பணம் கட்டியிருந்தார்.

    ஒருநாள் சற்று ஓய்வு கிடைத்த போது, தன்ராஜ் மாஸ்டரை பார்க்கச் சென்றார். தன்னை விட்டு விட்டு கோடம்பாக்கத்துக்குச் சென்றதாலும், இடையில் தன்னைப் பார்க்க வராததாலும் இளையராஜா மீது மாஸ்டர் கோபம் கொண்டிருந்தார்.

    இளையராஜாவை பார்த்ததுமே, அவர் கண்களில் அனல் வீசியது. ``நான் அப்போதே சொன்னேன், கோடம்பாக்கம் போனால் உருப்பட மாட்டாய் என்று! அப்படியே ஆயிடுச்சு பார்!'' என்றார்.

    ``இல்லை சார். கொஞ்சம் ரெக்கார்டிங் வேலை இருந்தது. இனிமேல் கரெக்டா வந்துடறேன், சார்'' என்று இளையராஜா கூறினார்.

    ``இனிமே என்ன வர்றது? உனக்கு இனிமேல் நான் பாடம் எடுக்கப் போறதில்லே. நீ போ! ரெக்கார்ட்டிங்குக்கே போ!'' என்று கோபத்துடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தார், ஆனால் மாஸ்டரின் கோபம் தணியவில்லை. ``நான் சொன்னா சொன்னதுதான்'' என்றார், கண்டிப்புடன்.

    ``சார்! நீங்க சொல்லித்தான் லண்டன் டிரினிட்டி காலேஜ் பரீட்சைக்கு பணம் கட்டினேன், எட்டாவது கிரேட் பிராக்டிக்கல், நான்காவது கிரேட் தியரி இரண்டுக்கும் நான் தயாராக வேண்டும்...''

    ``ஆமாம்...பணம் கட்டச் சொன்னேன். இனிமேல் என்னால் முடியாது. இனி நீ இங்கு வரவும் வேண்டாம்''

    - கண்டிப்புடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா ஓர் முடிவுக்கு வந்தார்.

    ``சார்! நான் இங்கே மீண்டும் ஒருநாள் வருவேன். பரீட்சைகளில் நல்ல முறையில் தேறி, ஹானர்ஸ் சர்டிபிகேட்டுடன் வந்து உங்களைப் பார்ப்பேன்'' என்று சபதம் செய்வது போல் கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

    நன்றாக உழைப்பவர்கள் சபதம் செய்தால் என்ன நடக்குமோ அதுதான் இளையராஜாவுக்கும் நடந்தது. சதாசர்வ காலமும் இசை பற்றிய படிப்பு... பயிற்சி!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``பாரதிராஜாவிடம் ஒரு சபதம், மாஸ்டரிடம் ஒரு சபதம்.

    திரையில் என் பெயரை பாரதிக்கு முன்னால் கொண்டு வந்து விட வேண்டும் என்று நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இசை தேர்வுக்கு பணம் கட்டியதற்காகவாவது எப்படியும் தேறி விட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டேன்.

    பிராக்டிக்கல் பரீட்சை பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டாருக்கு என்னென்ன பாடங்கள் உண்டோ அதையெல்லாம் பிராக்டிஸ் செய்து

    விடலாம்.ஆனால் இந்த `தியரி'க்கு (எழுத்துப் பரீட்சை) என்ன செய்வது முக்கியப் பிரச்சினை- ஆங்கிலம்!

    தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

    புத்தகத்தை திறப்பேன். முதல் வாக்கியத்தை வாசிப்பேன். புரியாது. மீண்டும் வாசிப்பேன். ஓரிரு வார்த்தைகள் - ஏற்கனவே தெரிந்த வார்த்தைகள் மட்டும் புரியும். அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு, `இந்த வாக்கியம் எதைச் சொல்ல எழுதப்பட்டிருக்கிறது' என்று யோசிப்பேன்.

    மூன்றாவது முறை வாசிப்பேன். யாரும் விளக்காமலேயே, நன்றாக அர்த்தம் மனதில் வந்து விடும்.

    `சரியாக இருக்கிறதா?' என்று அடுத்தவரிடம் கேட்டு சரிபார்த்தால், 100க்கு 100 சரியாக இருக்கும்!

    தெரியாத புது வார்த்தைகளுக்கு அர்த்தத்தை யாரிடமா வது கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

    ரெக்கார்டிங் இல்லாத நேரங்களில், பரீட்சைக்கு உரிய இசையை, மனப்பாடமாக பிராக்டிஸ் செய்வேன். எப்போதும் பேப்பரும் கையுமாக இருக்கும் நான், ஓய்வு நேரத்தில் எழுதிக் கொண்டே இருப்பேன். இசைக் குழுவினர் எல்லோரும் என்னை வியப்புடன் வேடிக்கை

    பார்ப்பார்கள்.பரீட்சை வந்தது. பிராக்டிக்கல் 8வது கிரேடு, தியரி 4வது கிரேடு ஆகிய இரண்டிலும் 85 மார்க் எடுத்து ``ஹானர்ஸ்'' தகுதியுடன் தேறினேன்.

    `ஆர் கிரேட்!

    இந்த சான்றிதழுடன் தன்ராஜ் மாஸ்டரை போய்ப் பார்த்தேன். சான்றிதழைக் காட்டினேன்.

    அதைப் பார்த்த மாஸ்டர், வியப்புடன் என்னை நோக்கினார். ``ராஜா! ரியலி ï ஆர் கிரேட்!'' என்றார்.

    அதுமட்டுமல்ல ``இசையில் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்'' என்று திறந்த மனதோடு அழைப்பு

    விடுத்தார்.ஆயினும் மறுபடியும் மாஸ்டரிடம் போக எனக்கு மனம் வரவில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற ஏப்ரல் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 30-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அன்றுமுதல் எந்த திரையரங்குகளிலும் படங்கள் ஓடாது எனவும், படப்பிடிப்பு நடத்தப்படாது எனவும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



    அதில், வருகின்ற 30.05.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சேரன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அரசியல் உங்களுக்கெல்லாம் ஒத்து வருமா? என்று கேள்வியும் கேட்டுள்ளார்.
    ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை. களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?



    உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது, இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். ஏரியா வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
    அமெரிக்கா கடற்கரையில் பிரியங்கா சோப்ரா நீச்சல் உடையில் உலா வந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
    இந்திப்பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் டி.வி. தொடரும் இவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலம் ஆகிவிட்டார்.

    இந்தி, ஹாலிவுட் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடந்த விழாவில் அணிந்து வந்த உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் பிகினி உடையில் குளியல் போட்டு இருக்கிறார்.



    நீலநிற நீச்சல் (பிகினி) உடையில் அவர் அங்கு உலா வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை விதம் விதமாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    இந்தியிலும், ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ராவின் பிகினி உடை தோற்றம் அவர் பெற்றுள்ள வெற்றியின் கொண்டாட்டம் என்று பல ரசிகர்கள் இணையதளத்தில் வர்ணித்து இருக்கிறார்கள்.
    அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக அறிவித்துள்ள ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்து வருகிறார்கள். இதுகுறித்த சிறப்பு கட்டுரையை பார்ப்போம்.
    நான் ஒரு தடவ சொன்னா... 100 தடவ சொன்ன மாதிரி. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய இந்த ‘பஞ்ச்’ டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் இப்போதும் ரஜினி பேசிய அந்த வசனத்தின் வீரியம் குறையாமல் அதே காரத்துடனேயே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் வேகமே அவரது உத்வேகமாகும்.

    ரஜினி படமா? கட்டாயம் தியேட்டர்ல போய் பார்க்கலாம் என்கிற எண்ண ஓட்டம் எல்லோரது மனதிலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ரஜினியின் படங்கள் வெளியாகும் அன்று அந்த படங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பே இதற்கு சான்றாகும். இதன் காரணமாகவே ரஜினியின் சில படங்களை தவிர்த்து பெரும்பாலான படங்கள் வசூலை வாரிக்குவித்து விடுகின்றன.



    பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய ரஜினியின் இந்த வசூல் வேட்டை ‘கபாலி’ வரையிலும் ‘மகிழ்ச்சி’யாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மத்தியில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் இந்த இதய சிம்மாசனம் ஒரே நாளில் மந்திரத்தில் மாங்காய் கிடைத்தது போல கிடைத்து விடவில்லை. இந்த இடத்தை பிடிப்பதற்கு அவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது.

    சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினியை 1975-ம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தின் வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலச்சந்தர். அதன் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் தனது விடாமுயற்சி, உழைப்பாலேயே ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.



    இப்படி தமிழ் சினிமாவில் தங்க மகனாக மின்னிய ரஜினி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது. 1991-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த நேரம் அது. அவரது 5 ஆண்டு கால ஆட்சி முடிந்து அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருந்தன. அப்போது நடந்த ‘பாட்ஷா’ படவெற்றி விழாவில் ரஜினி உதிர்த்த வார்த்தைகள் இவை.

    அ.தி.மு.க.வுக்கு நீங்கள் மீண்டும் ஓட்டு போட்டால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ரஜினி கொளுத்தி போட்ட முதல் அரசியல் பட்டாசு இதுதான். அது அக்னி வெளியில் காய வைத்த அதிர்வேட்டாகவே வெடித்தது.


     
    1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசில் இருந்து பிரிந்து த.மா.கா.வை தொடங்கிய மூப்பனார் தி.மு.க.வோடு ‘கை’ கோர்த்தார். அப்போதே ரஜினிக்கு அரசியல் ஆசை காட்டப்பட்டது. தி.மு.க.-த.மா.கா. கூட்டணிக்குள் எப்படியாவது ரஜினியை இழுத்து வந்து முடிச்சுப் போட வேண்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். அதில் முதன்மையானவர் மூப்பனார். அந்த நேரத்தில் ரஜினியிடம் ‘தனிக் கட்சி’ தொடங்குமாறும் பலர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினர். ஆனால் ரஜினியோ அரசியல் களத்தில் குதிக்காமலேயே அரசியல் செய்தார்.

    தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ஆதரிப்பதாகவும், தமிழக மக்கள் அந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இது.... தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை வெற்றி பெறச் செய்து உச்சாணிக்கொம்பில் அமர வைத்தது. இதனை தொடர்ந்து தேர்தல் வரும் போதெல்லாம் ரஜினி வாய்ஸ் யாருக்கு? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியது. ஆனால் நாளடைவில் இந்த வாய்ஸ் மங்கிப் போய் விட்டது.



    ரஜினியிடம் எந்த பத்திரிகையாளர் பேட்டி கண்டாலும் கடைசியாக எழுப்பும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். உங்கள் அரசியல் பயணம் எப்போது? அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்பதாகவே இருக்கும். இந்த கேள்விக்கு நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவன் கையில்தான் இருக்கு என்றே ரஜினி தொடர்ச்சியாக பதில் அளித்து வந்துள்ளார். இதனால் ரஜினியின் அரசியல் பயணம் கடந்த சில ஆண்டுகளாக ‘சஸ்பென்ஸ்’ ஆகவே நீடித்து கொண்டிருக்கிறது.

    ரஜினியின் படங்களிலும் அவரது அரசியல் பயணம் தொடர்பான வசனங்களும் அதிகமாகவே இடம் பெற்று வந்துள்ளது. ‘முத்து’ படத்தில் ரஜினி காவி உடை தரித்து எதுவும் வேண்டாம் என சாமியாராக செல்லும் காட்சியில் விடுகதையா.... இந்த வாழ்க்கை என்ற பாடல் ஒலிக்கும். அதில் உனது ராஜாங்கம் (தமிழ்நாடு) இதுதானே. தொண்டுகள் செய்யும் நல்லவனே. வடக்கே (இமயமலைக்கு) நீ சென்றால் நாங்கள் செல்வதெங்கே? என்கிற வரிகள் இடம் பெற்றிருக்கும்.  இப்படி தனது படங்கள் மூலமாக ஏதோ ஒரு காட்சியில் ரஜினியின் அரசியல் ஆசை வெளிப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.



    ஆனால் ‘குசேலன்’ படத்தில் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களையெல்லாம் சுக்கு நூறாக்கும் அளவுக்கு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ‘அந்த படத்தில் சூப்பர் ஸ்டாராகவே நடித்திருக்கும் ரஜினியிடம், ஒரு காட்சியில் ‘ஆர்.சுந்தர்ராஜன் நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேள்வி கேட்பார். அரசியலுக்கு வருவேன்னு சொல்லுங்க... இல்ல வரமாட்டேன்னு சொல்லுங்க. எதுக்காக ரசிகர்களை போட்டு குழப்புறீங்க’ என்பார்.

    இதற்கு பதில் அளிக்கும் ரஜினி. அதெல்லாம் நான் சினிமாவுக்காக பேசிய வசனங்கள். நீங்க அத.... நான் அரசியலுக்கு வருவேன்னு எடுத்துக்கிட்டா நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று எதிர் கேள்வி கேட்பார் ரஜினி. இதன் மூலம் ரஜினி, தன் மனதில் உள்ளதை சினிமா மூலமாக வெளிப்படையாக சொல்லி விட்டார் என்றே அப்போது பேசப்பட்டது.  இதன் பின்னும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ரசிகர்களின் ஆசைகள் அவ்வப்போது போஸ்டர்களாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளது.



    “தலைவா.... வா.... தலைமை ஏற்க வா’’ எங்களை ஆள்பவனே.... தமிழகத்தை ஆளப்பிறந்தவனே என்பது போன்ற சுண்டி இழுக்கும் ஆரவார போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் காலம் காலமாகவே ஒட்டி வருகின்றனர். இதுநாள் வரையில் இதற்கெல்லாம் நேரடியாக பதில் அளிக்காத ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் வெளிப்படையாகவே வாய் திறந்துள்ளார்.

    20 ஆண்டுக்கு முன்னர் ஒரு கூட்டணியை நான் ஆதரித்தது விபத்து என்று கூறி இருக்கும் ரஜினி, நான் அரசியலுக்கு வந்தால் நேர்மையானவனாக இருப்பேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆதரித்தது பற்றி 20 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கருத்து தெரிவிக்கும் ரஜினி, அது ஒரு விபத்து என்று வர்ணித்திருப்பதன் மூலம், ஒரு நிர்ப்பந்ததின் பேரிலேயே அந்த அணிக்கு அவர் ஆதரவளித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.



    தற்போது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மறைவால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடல்நலம் கோளாறு காரணமாக முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார்.
    இதுபோன்ற அரசியல் வெற்றிடத்தை எப்படியும் ஒரு ஆள் நிரப்பியே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

    இந்த வெற்றிடத்தை நிரப்பி, அரசியல் களத்தில் வென்று விடலாம் என்கிற எண்ணமே ரஜினியை இப்படி பேச வைத்திருக்கிறது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு ‘மவுத் டாக்’ ஆக மாறி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் காரசாரமான கருத்து மோதல்களும் வலுப்பெற தொடங்கி உள்ளன.

    ‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’ என்று ‘முத்து’ படத்தில் அனல் தெறிக்க அரசியல் வசனம் பேசி இருப்பார் ரஜினி. அதற்கான நேரமும்... காலமும் தற்போது கனிந்து விட்டதாகவே ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தற்போதுதான் தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.



    ரஜினியின் ஆரம்ப கால ரசிகர்கள் இப்போது 50 வயதை தாண்டி இருப்பார்கள். ரஜினியை தலைவர் என்றே அழைக்கும் அதுபோன்ற ரசிகர்கள், யார்-யாரெல்லாமோ, அரசியலுக்கு வருகிறார்கள். தலைவர் மட்டும் தயங்கிகிட்டே இருக்கிறாரே? என்று ஆண்டாண்டு காலமாக ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தங்களின் மனம் கவர்ந்த தலைவன் அரசியலுக்கு வரமாட்டாரா? என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாகவே ரஜினி ரசிகர்களை வாட்டிக்கொண்டே இருந்தது.

    ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பின் மூலம் ரசிகர்களின் இந்த ஏக்கம் தீர்ந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஏமாந்து போவீர்கள் என்று ரஜினி பேசி இருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது. ‘தலைவர் வந்துட்டார்’ என்று உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் ரஜினி அடியெடுத்து வைப்பது நூற்றுக்கு நூறு உறுதியாகி இருப்பதாகவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அருணாசலம் படத்தில் ‘‘அந்த ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்கிறான்’’ என்பார் ரஜினி.

    அரசியலில் குதிக்கச் சொல்லி அந்த ஆண்டவனே ரஜினிக்கு கட்டளையிட்டிருப்பதாகவே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ரஜினியை பற்றி குறிப்பிடும்போது நேற்று... பஸ் கண்டக்டர் இன்று.... சூப்பர் ஸ்டார், நாளை.... தமிழக முதல்வர் என்றே ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால் ‘கபாலி’ பட வசனமான வந்துட்டேன்னு சொல்லு... நெருங்கி வந்துட்டேன்னு சொல்லு... என்று சமூக வலைதள பக்கங்களை ரசிகர்கள் ‘‘மகிழ்ச்சி’’யுடன் நிரப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
     
    பணத்துக்காகவே டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.
    திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல், முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

    இந்நிகழ்ச்சிக்குண்டான டீசரை இன்று தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் காந்த கண்களை வைத்தே அந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணம் குறித்து கமல் சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா வைவிட டி.வி. மூலம் அதிகமான மக்களை சென்றடைய முடியும். அதே நேரத்தில் பணமும் எனக்கு முக்கியம். இந்த துறையில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களில் காசு வாங்காமல் நான் சும்மா நடிப்பதில்லை.

    படத்தை போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உற்சாகமாக இருக்கிறது. பணம், அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி இது. இரண்டும் ஒன்றாக கிடைக்கும் போது யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரஜினிதான் என்னை முதன்முதலில் சொந்த குரலில் பேசவைத்தவர் என்று ரம்யா கிருஷ்ணன் பெருமைபட கூறியுள்ளார்.
    ரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்... ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் ஏற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கு நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாரும் சொன்னார்கள்.

    என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேரும் நான்தான் பேச வேண்டும் என்றார்கள். அது எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது என் கடமை.



    இதுபோல் ‘பாகுபலி’ சிவகாமி கதாபாத்திரத்துக்கு என் குரல் தான் பொருத்தமானது. எனவே, நான் சொந்தக்குரலில் தான் பேச வேண்டும் என்று ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சார் கூறினார்.

    என் குரல் தான் சிறப்பாக இருக்கும் என்று நம்பினார். அதுபோல் அமைந்தது. ‘பாகுபலி’ போன்ற பிரமாண்டமான படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அது நடந்து இருக்கிறது என்றார்.
    அக்ஷய்குமார் ஜோடி ஒருவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ரஜினி நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்களில் எல்லாம் பாலிவுட் நடிகைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ‘எந்திரனி’ல் தொடங்கி ‘கபாலி’ வரை ரஜினியின் படங்களில் எல்லாம் பாலிவுட் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகியே உள்ளது. இந்நிலையில், ரஜினி அடுத்ததாக நடிக்கவிருக்கும் பா.ரஞ்சித் படத்திலும் பாலிவுட் நடிகை ஒருவரையே நடிக்க வைக்க தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹுமா குரோஷி இந்தியில் ஹிட்டான ‘ஜாலி எல்எல்பி-2’ படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து நடித்தவர். பாலிவுட்டில் ஹிட்டான பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்தி கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இவருக்கு முன்னதாக இப்படத்தில் நடிக்க வித்யாபாலன், தீபிகா படுகோனே ஆகியோர்களின் பெயர்களின் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. ‘கபாலி’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  
    நடிகை ஒருவர் ஒரு நடிகருக்காக ரொமான்ஸ் காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.
    சமத்தான நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி நடிக்கும் படங்களிலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்து வருகிறாராம்.

    ஆனால், ஒரேயொரு நடிகருக்காக அந்த நடிகை தன்னுடைய நிபந்தனைகளையெல்லாம் தளர்த்தியிருக்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி போட்டுள்ள நடிகை தற்போது மூன்றாவதாகவும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



    அந்த படத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமத்தான நடிகை இதில் நடிக்க தயங்குவாரோ என்ற பயத்தில் இருந்த படக்குழுவுக்கு அந்த நடிகை ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ரெடி பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அதுவும், இந்த நடிகருக்கு மட்டும்தான் அந்த சலுகை அறிவிப்பு வேறு விட்டுள்ளாராம். இயக்குனர் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் நடிக்கத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.
    ×