என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரஜினியை மிரட்டியது கண்டிக்கத்தக்கது என்று நெல்லையில் டைரக்டர் வீ.சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    பிரபல சினிமா டைரக்டர் வீ.சேகரின் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ‘சரவணப்பொய்கை‘ என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை வீ.சேகர் டைரக்டு செய்ய, அவருடைய மகன் காரல் மார்க்ஸ் கதாநாயகனாகவும், அருந்ததி கதாநாயகியாகவும், விவேக், கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபலப் படுத்தும் வகையில் வீ.சேகர், காரல் மார்க்ஸ் ஆகியோர் நேற்று நெல்லைக்கு வந்திருந்தனர். நெல்லை சந்திப்பில் உள்ள பேரின்பவிலாஸ் தியேட்டரில் தொழிலாளர்கள் மத்தியில் ‘சரவணப்பொய்கை‘ சினிமா பாடல் மற்றும் ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

    பின்னர் வீ.சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பெரும்பாலும் குடும்பப்பாங்கான படங்களை எடுத்து உள்ளேன். ஏற்கனவே 17 படங்களை டைரக்டு செய்து உள்ளேன். என்னுடைய படங்களை 80 சதவீதம் பெண்கள் பார்ப்பார்கள். ஆனால் தற்போது பெண்கள் டி.வி. சீரியல்களில் மூழ்கி கிடக்கின்றனர். தியேட்டருக்கு கல்லூரி மாணவ, மாணவிகளும், தொழிலாளிகளும் மட்டுமே வந்து படம் பார்க்கின்றனர்.



    இந்த நிலையில் தற்போது 18-வது படமாக ‘சரவணப்பொய்கை‘ படத்தை டைரக்டு செய்து உள்ளேன். தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இந்த படத்தில் காதல் கதையை கூறிஉள்ளேன். சினிமாவின் ‘டிரண்ட்‘ மாறும்போது டைரக்டர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சினிமாவில் வெற்றி பெற முடியும். இந்த படத்தில் என்னுடைய மகன் காரல் மார்க்ஸ் சினிமா தியேட்டரில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்து உள்ளார். அவருக்கு தியேட்டர் முதலாளியின் மகளுடன் ஏற்பட்ட காதல் வெற்றி பெற்றதா? என்பதை விறுவிறுப்பாக கூறிஉள்ளேன்.

    புதிய படங்களின் சி.டி., டி.வி.டி.க்கள் தயாரித்து விற்பனை செய்வது பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளன. இணையதளம் மூலம் புதிய படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய இணையதளங்களை முடக்க வேண்டும்.

    நடிகர் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. பொதுவாக பிரபலமானவர்கள் வரலாற்றை சினிமா எடுக்க விரும்பினால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நம் உணவே நாமே உற்பத்தி செய்யவேண்டிய நிலை வந்துவிட்டது என்று ஆரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
    அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள 'இதய வாசல்' முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய  உணவு வழங்கி அவர்களுடன் நடிகர் ஆரி உணவு உண்டார். பின்னர், 'இயற்கை' உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

    இதுகுறித்து ஆரி கூறும்போது, நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை அனாதையாக விட்டு விடாதீர்கள். அவர்கள் நம் பெற்றோர்கள் என உருக்கமாக பேசினார்.



    மேலும் எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி கோக் பொவண்டோ போன்ற அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து எதிர்த்து குரல் கொடுங்கள். இயற்கையான மோர், இளநீர், கரும்பு சாரு, நொங்கு, எலுமிச்சை பழ நீர் மற்றும் இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள்.

    நாகரீகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எல்லா உணவு வகைகளிலும் நச்சு பொருட்கள் கலந்து விட்டது. எனவே இயற்கை உரங்களின் மூலம் காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை இன்று இந்த முதியோர் இல்லத்தில் அறிவிக்கிறேன். இந்த இல்லத்தில் இருந்தே துவங்க உள்ளோம்.



    இதனால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் இல்லாதவர்களும் ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். இப்படி நம் வீட்டுற்கு மட்டுமாவது இயற்கை உணவை நாமே உற்பத்தி செய்யவேண்டும். இந்த திட்டத்தை முதியோர் இல்லத்தில் துவங்க காரணம், இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்றுதான்.

    மேலும் சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லத்திலும் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் எல்லா குடியிருப்பு பகுதியிலும் இத்திட்டம் தொடர ஊக்கப்படுத்துவோம். கீழ்க்கண்ட ஆறு உணவு வகைகளில் மாற்றம் வேண்டும்.

    • பாலீஷ் போட்ட அரிசி தவிருங்கள். பட்டை தீட்டாத அரிசியை பயன்படுத்துங்கள்  
    • பாக்கட் பால் தவிருங்கள். நல்ல இயற்கையான பாலை அதன் தயிர் மோர் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
    • செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள்.
    • வெள்ளை சக்கரையை தவிர்த்து பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, நாட்டு சக்கரை, தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
    • மைதாவை தவிருங்கள்.
    • கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.

    இப்படி நாம் உண்ணும் உணவில் மாற்றமே நம் ஆரோக்கியத்திற்கான மாற்றம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஓடி ஓடி உழைக்கணும் படத்துக்காக அமைரா தஸ்தூர் ஆடிய ஜாலியான ஆட்டத்தை பார்த்து சந்தானம் மெய்மறந்து போயுள்ளார்.
    சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இப்படத்தின் கதாநாயகியாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். மேலும், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகி பாபு, மது சூதனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்கி வருகிறார்.

    இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் அமைரா தஸ்தூர் ஜாலியாக ஆடி, பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழி பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். அமைரா தஸ்தூர் அந்த பாடலில் ஜாலியாக ஆடும் அழகை பார்த்து சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.



    இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இவர்களுடைய தயாரிப்பில் ‘ஒரு பக்க கதை’, ‘எங்க மங் சங்’ ஆகிய படங்களும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் ‘பேஸ்புக்’கில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.
    புனே மாவட்டம் பிம்புலே நிலக்பகுதியை சேர்ந்தவர் அதுல் தப்கிர். “டோல் தசா” என்ற மராத்தி படத்தை தயாரித்தவர். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று அவர் தன் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி பார்த்தனர்.

    ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.



    இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது விபரீத முடிவுக்கான காரணம் குறித்த கடிதத்தை “பேஸ்புக்” பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதாவது, அதுல் தப்கிர் தயாரித்த “டோல் தசா” படம் சரியாக ஓடாததால் அவர் பெரும் நஷ்டத்திற்கும், கடன் சுமைக்கும் ஆளானார். இது அவரது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அதுல் தப்கிருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு உருவானது. இந்த நிலையில் குடும்ப தகராறு தொடர்பாக அதுல் தப்கிர் மீதும், அவரது தந்தை மீதும் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் அதுல் தப்கிரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். இவ்வாறு நெருக்கடிக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பதிவில் அதுல் தப்கிர் உருக்கமாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார். இன்று அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை சந்திப்பதற்காக ரஜினி காலை 9.50 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்துக்கு வருகை தந்தார்.

    அப்போது ரசிகர்களிடைய அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும் ‘உனது உடலை பார்த்துக்கொள். ரசிகர்களை பார்த்துப் பேசு. போட்டோ எடுத்துக் கொள்’ என்று சொல்வார்.

    அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆரம்பத்தில் நான் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் படப்பிடிப்புக்கு தாமதமாக செல்வேன். அப்போது, முத்துராமன் என்னிடம் நீ படத்தின் ஹீரோ, படப்பிடிப்புக்கு நீதான் முதலில் வரவேண்டும் என்பார். அப்போது மதல் நான்தான் படப்பிடிப்பு தளத்துக்கு முதலில் செல்வேன். சில காரணங்களால் என்னுடைய படங்களின் வெற்றி விழாக்களை கொண்டாட முடியவில்லை.



    வேலை காரணமாக ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து ரஜினி எந்த முடிவிலும் உறுதியாக இருக்க மாட்டார். அவருடைய திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார் என்று சொல்லுகிறார்கள். ரசிகர்களின் ஆசீர்வாதமும், அவர்களுடைய அன்பும் இருக்கும்போது நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    குளத்தில் கால் வைத்தபிறகு அங்கு நிறைய முதலைகள் இருப்பது தெரிய வருகிறது. அதையும் மீறி அடுத்த அடி எடுத்துவைத்தால் என்ன ஆகும்? பின்வாங்கித்தான் ஆகவேண்டும். முரட்டு தைரியம் எப்போதும் ஆகாது. ரஜினி நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் திரையரங்குக்கு வருகிறீர்கள். அதனால்தான் நானும் இங்கு நிற்கிறேன். நான் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்றுமுதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறேன். என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.

    அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது நடிகனாக என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும் உண்மையாகவும் இருப்பேன். அது கடவுளின் கையில்தான் உள்ளது.

    என்னை பற்றிய அரசியல் செய்திகளை நம்பவேண்டாம். அப்படி நான் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்பவர்கள், பணம் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன். ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். அடிபட்டதால் இதை சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா அசிஸ்டென்டாக இருந்தபோது, புட்டண்ணாவிடம் பாரதிராஜா உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.

    ஒருநாள் இளையராஜா வும், பாரதிராஜாவும் பேசிக் கொண்டிருந்த போது, ``சினிமாவில் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் வருகிறது என்று பார்ப் போமா?'' என்று பாரதிராஜா சிரித்துக் கொண்டே கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடி, ``பார்த்து விடுவோம்'' என்றார்.

    புட்டண்ணா இயக்கிய `இருளும் ஒளியும்'' படத்தில், உதவி டைரக்டராக பாரதிராஜா பணியாற்றினார். வாணிஸ்ரீ கதாநாயகியாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது.

    இந்தப் படத்தில்தான் ``உதவி டைரக்டர்- பாரதிராஜா' என்று டைட்டில் கார்டு போடப்பட்டது.

    படம் வெளிவந்ததும், ``பார்த்தியா! பந்தயத்தில் நான்தான் ஜெயித்து விட்டேன்'' என்று இளையராஜாவிடம் கூறினார், பாரதிராஜா.

    ``ஓகே பாரதி'' என்றார், இளையராஜா.

    காரணம், அவர் கவனம் எல்லாம் இசையை முழுவதுமாக கற்றறிய வேண்டும் என்?தில் இருந்ததே தவிர,தன் Ù?யர் திரையில் வரவேண்டும் என்?தில் இல்லை!

    ``இருளும் ஒளியும்'' ஒரு சிறந்த படமாக இருந்தும், புட்டண்ணா தமிழ்நாட்டில் புகழ் பெறவில்லை. ஆனால், கன்னடப் படஉலகில் ஈடு இணையற்ற டைரக்டராக விளங்கினார். எனவே அவர் கவனம் கன்னடப்பட உலகத்தை நோக்கித் திரும்பியது.

    தமிழ்ப்பட உலகில் புகழ் பெற விரும்பிய பாரதிராஜா, டைரக்டர் கிருஷ்ணன் நாயரிடம் சிலகாலம் உதவி டைரக்டராக பணியாற்றினார். ஏ.ஜெகநாதன் டைரக்ட் செய்த ``அதிர்ஷ்டம் அழைக்கிறது'' படத்துக்கும் அவர்தான் துணை டைரக்டர். தேங்காய் சீனிவாசனும், சவுகார் ஜானகியும் நடித்த படம் இது.

    இந்த சமயத்தில், கே.ஆர்.ஜி. ``சொந்த வீடு'' என்ற படத்தை தயாரிக்க தீர்மானித்தார். டைரக்ஷன் பொறுப்பை பாரதிராஜாவுக்கு வழங்கினார்.

    கதை ஆர்.செல்வராஜ்; இசை: வி.குமார் என்று முடிவாயிற்று.

    ஜி.கே.வெங்கடேசிடம் `பிசி'யாக இருந்தாலும், இசையை கற்றுக் கொள்வதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், இளையராஜா இதுபற்றி கவலைப்படவில்லை.

    ``பாரதியைப் பார்த்தாயா! படம் கிடைத்ததும், உன்னை மறந்திட்டான்'' என்று இளையராஜாவிடம் செல்வராஜ் சொன்னார். அதை இளையராஜா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

    என்ன காரணத்தினாலோ, ``சொந்த வீடு'' படம் நின்று விட்டது.

    ``16 வயதினிலே'' என்ற திரைக் காவியம் பாரதிராஜாவின் முதல் படமாக அமைய வேண்டும் என்றும், அதன் இசை அமைப்பாளராக இளையராஜா பணியாற்ற வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்பது, அன்று யாருக்கும் தெரியாது!

    இந்த சமயத்தில், ஊரில் இருந்த இளையராஜாவின் அம்மா, பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு தன் கையால் சமைத்துப்போட வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு வந்து விட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``எங்களைப் பிரிந்திருப்பது பொறுக்க மாட்டாமல், அம்மா சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டார்கள். ``எம் புள்ளைங்க இங்கே கஷ்டப்படும்போது, நான் எதுக்கு அங்கே இருக்கணும்? உங்களுக்கு சமைத்தாவது போட வேண்டும் என்றுதான் வந்து விட்டேன்''

    என்றார்கள்.``இந்த வயதில் நீங்க ஏன் கஷ்டப்படணும்?'' என்று கேட்டால், ``அடப் போங்கப்பா! சமைக்கிறது ஒரு கஷ்டமா?'' என்று அடித்துப் பேசி விடுவார்கள்.

    1969-ல் இருந்து நான்கு வருடம் அம்மா சமையல்தான்.

    பாரதியின் தாய் எனக்கும் அம்மா போல. என் அம்மாவும் பாரதிக்குத் தாய்தான். கிடைக்கிற காசை அவர்களிடம் கொடுத்து விடுவோம். எல்லாவற்றையும் அம்மாதான் பார்த்துக் கொள்வார்கள்.

    ஒருமுறை அம்மாவிடம் 200 ரூபாய் கொடுத்தோம். அவர்கள் சென்னை வந்த பிறகு நாங்கள் கொடுத்த பெரிய தொகை. அம்மா மிகவும் மகிழ்ந்து, வெற்றிலைப் பையில் அந்தப் பணத்தை வைத்து, இடுப்பில் செருகிக் கொண்டார்கள். எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டிங் காய்கறி வாங்கப் புறப்பட்டார்கள்.

    ஒரு கடையில் ஏதோ காய்கறி வாங்கியிருக்கிறார்கள். அதை கவனித்த எவனோ பணப்பையை திருடி விட்டான்.

    பை களவு போனது தெரியாமல், அம்மா அடுத்த கடையில் சாமான்களை வாங்கி விட்டு இடுப்பைத் தொட்டுப் பார்த்தால், பையை காணவில்லை. சாமான்களை அங்கேயே வைத்து விட்டு, வந்த வழியில் பை எங்காவது கிடக்கிறதா என்று நடந்தபடி தேடிப் பார்த்திருக்கிறார்கள். அது கிடைக்காமல், வாங்கிய சாமான்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பி னார்கள்.

    ``எம் புள்ளைங்க பாடுபட்டு சேர்த்த பணத்தை, இந்த படுபாவி தொலைச்சுட்டேனே!'' என்று வாய் விட்டு புலம்பினார்கள்.

    ``சரிம்மா... போகட்டும், விடுங்க! இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?'' என்று தேற்றினோம்.

    வருத்தத்தை மாற்றிக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ அவர்களால் முடியவில்லை. வெந்து போன மனதுடன், வீட்டிலிருந்த அரிசி, வெங்காயம், புளி, மிளகாயை வைத்து, சாதம் வடித்தார்கள்.

    வெங்காயத்தை தண்ணீரில் நறுக்கி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு, சாதத்தில் ஊற்றிச் சாப்பிடக்

    கொடுத்தார்கள்.உண்மையில் சொல்கிறேன், இன்று வரை அது போன்ற ருசியான சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சேகர் அனுப்பிய மிரட்டல் கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
    ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை பா.இரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து எடுக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சேகர் ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அந்த படத்தை தயாரிக்க இருக்கும் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் தெரிவித்திருப்பதாவது,

    எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக திரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.



    அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.

    குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.



    இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை" என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்.

    என்று அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    சுசி லீக்ஸ் ஹேஷ் டேக்கில் தொடர்ந்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதால் பாடகி சுசித்ரா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.
    கடந்த மார்ச் மாதம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறி வந்தார். பின்னர் தனது டுவிட்டர் கணக்கையும் முடக்கினார்.

    நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்திருந்ததை அடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுசித்ரா தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார். மேலும் தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.



    இந்நிலையில் சென்னை திரும்பியுள்ள பாடகி சுசித்ரா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

    கடந்த மார்ச் 2-ஆம் தேதி (SuchitraKarthik) என்ற தனது டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. மேலும் எனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், எனது கணவர் கார்த்திக் இந்தியாவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்கினார்.

    அதைத்தொடர்ந்து எனது பெயரில் 40 முதல் 50 போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு சுசி லீலைகள், லீலைகள், சுசித்ரா என்ற ஹேஷ் டேக்குடன் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. தற்போதும் பகிரப்பட்டு வருகின்றன.



    இன்னமும் எனது பெயரில் தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து வரும் சில போலி கணக்குகளாவன,

    https://twitter.com/suchifanleaks
    https://twitter.com/SingerSuchitra
    https://twitter.com/Suchitrareal
    https://twitter.com/iamsuchitrakarthik

    அதுமட்டுமல்லாமல் தனது மெயில் கணக்குக்கு இழிவான மெயில்கள் வருவதாகவும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களை கைது செய்து, தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
    பரத் நடிக்கும் `கடைசி பென்ச் கார்த்தி' படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜான் சுதிர் உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்புகிறார்.
    கடந்த 2௦13-ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க `ஏமோ குர்ரம் எகரா வச்சு' என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார். அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக்  செய்தார்.

    பின்னர் தமிழில் களமிறங்கிய அவர், அதன் படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடித்து வரும் `கடைசிபென்ச் கார்த்தி' என்ற படத்தை   தமிழிலும் `மல்லி பிரேமிஸ்தே' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். இதுவே பரத்தின் நேரடித் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில் `ஷோ டைம்' என்ற பெயரில் தெலுங்கிலும், `காட்சி நேரம்' என்ற பெயரில் தமிழிலும் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.



    அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.

    இதை தவிர தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற `காஞ்சனா 2' படத்தை கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையையும் வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.

    உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜான்சுதிர். இந்திய கலைஞர்களை கொண்டு வெளிநாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன்படுத்தி படங்களை தயாரித்து வரும் ஜாக்கிஜான், டோனிஜா ஆகியோருக்கு ஜான்சுதிர் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்க்கும் ‘தெருநாய்கள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியே‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இந்த படத்தில் அப்புகுட்டி, பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் நடித்துள்ளனர். புதுமுகநாயகி அக்‌ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார்.

    ஒளிப்பதிவு- தளபதி ரத்தினம், இசை- ஹரிஷ், சதீஷ், எடிட்டிங்- மீனாட்சி சுந்தர், பாடல்கள்-மாஷா (சகோதரிகள்),முத்தமிழ், ஜி.கே.பி.லலிதானந்த், தயாரிப்பு-சுசில்குமார், இணைதயாரிப்பு-உஷா, இயக்கம்-புதுமுக இயக்குனர் செ.ஹரிஉத்ரா. படம் பற்றி இயக்குனர் கூறும் போது...



    “டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி... சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது” என்றார். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘தெரு நாய்கள்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

    அன்னையர் தினமான இன்று தனது தாய்க்கு கட்டிய கோவிலை திறந்து வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ், 1000 பெண்களுக்கு சேலையும், விவசாயிகளுக்கு உதவியும் வழங்கினார்.
    அன்னையர் தினத்தில் நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு கோவில் கட்டி அதனை இன்று திறந்து வைத்தார். 1000 வயதான பெண்களுக்கு சேலையும் வழங்கினார். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தில் தனது தாய் கண்மணி அம்மையாரை போற்றும் விதமாக அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தனியாக கோவில் கட்டி சிலை நிறுவி உள்ளார்.

    அன்னையர் தினமான இன்று, காலை 8.45 மணிக்கு கண்மணி அம்மையாரின் சிலையை ராகவா லாரன்ஸ் முன்னிலையில் சினிமா சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். இங்கு கண்மணி அம்மையார் சிலையுடன் காயத்திரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் திறந்து வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.



    வாழும் போதே தாய்க்கு ஒருவர் கோவில் கட்டி சிலை திறப்பது இதுவே முதல் முறையாகும். இங்கு அமைக்கப்பட்டு இருப்பது பளிங்கு சிலையாகும்.

    தாயார் சிலை திறப்பையொட்டி வயதான 1000 பெண்களுக்கு சேலைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். மேலும் நகை அடகுவைத்து மீட்க முடியாமல் தவித்த 11 விவசாயிகளின் நகைகளை மீட்டு வழங்குவேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி ஏற்கனவே 5 விவசாயிகளின் நகைகளை மீட்டு கொடுத்தார். இன்று மேலும் 6 விவசாயிகளின் நகைகளை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தார். அதை தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியாக நடத்தினார்.



    விழாவில்  ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்கள் எல்வின், முரளி, தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் ஏராளமான பொது மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் போது பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த கோவில் திறந்து 48 நாள் முடிந்து மறுநாள் அவர்களை அழைக்க இருக்கிறார்.

    அன்று  கலையுலகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். எனது அன்னைக்கு அமைத்துள்ள இந்த ஆலயம் உலகில் உள்ள எல்லா அன்னையர்க்கும் சமர்ப்பணம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளதாக கூறப்படும் புதிய படத்தில் சம்யுக்தா ஹெக்டேவுக்கு பதிலாக நயன்தாரா நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையா? என்பதை பார்ப்போம்.
    `பீட்சா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தில் தனுஷை இயக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில், தனுஷ்-க்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் `தேவி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்நிலையில், ‘யங் மங் சங்’, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஷால் - கார்த்தி இணைந்து நடிக்க உள்ள `கருப்புராஜா வெள்ளைராஜா' படத்தையும் இயக்குகிறார்.



    இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார். இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் அதற்காக நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.

    இதற்கு முன்னதாக பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா `வில்லு' படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×