என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தன்னுடைய மகள் தன்னைப்போல் நடிகை ஆவதில் துளியும் விருப்பமில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
    ஸ்ரீதேவி இந்தியில் நடித்து இருக்கும் படம் ‘மாம்’. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஸ்ரீதேவி...

    “ ‘மாம்’ படம் தாய்-மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை. இந்த கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்து விட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு அளித்ததையும், என் மீது அன்பு காட்டியதையும் எப்போதும் மறக்க மாட்டேன்.

    என் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அது நடந்து விட்டது. அவர் இசை அமைத்ததன் மூலம் இந்த படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கிறது. ‘மாம்’ படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் அர்பணிக்கிறேன்.



    நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிடவில்லை. எல்லாம் தானாகவே நடக்கிறது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் தமிழ் படங்களில் நடிப்பேன்.

    நாட்டில் பெண்கள் வாழ்வில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. என் மகள் நடிகை ஆவதை நான் விரும்பவில்லை. பெற்றோர் என்ற முறையில் அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பதே மகிழ்ச்சி. என்றாலும் அவள் நடித்து வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான்” என்றார்.

    ஏ.ஆர்.ரகுமான், “எல்லா நாட்டிலும் குடும்ப உறவுகள் என்பது முக்கியமாக இருக்கிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க பெற்றோர் பெரிய தியாகங்களை செய்கிறார்கள். ‘மாம்’ படமும் அந்த கருவில்தான் தயாராகி இருக்கிறது” என்றார்.

    இந்நிகழ்ச்சியில் போனிகபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார்.



    ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் 3-வது படம். இதில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதுபற்றி கவலைப்படாமல் இதில் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
    ரஜினியை தான் சூப்பர் ஸ்டாராகவே பார்க்க விரும்புவதாக கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இவன் தந்திரன்’. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் ‘இவன் தந்திரன்’ சினிமா டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் கவுதம் கார்த்திக் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘இவன் தந்திரன்’ படத்தில் பொறியியல் கல்லூரி மாணவனாக நடிக்கிறேன். இது எனக்கு முக்கியமான படமாக அமையும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை என்று நான் கூறியதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. இது உண்மை அல்ல.



    சூப்பர் ஸ்டார் எங்களின் குடும்ப நண்பர். நான் சிறுவயது முதலே அவரின் தீவிர ரசிகனாக உள்ளேன். என்னை பொருத்த வரையில், தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக அவரை ரசித்து பார்க்கவே விரும்புகிறேன். மற்றபடி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரின் விருப்பம். இதுகுறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

    என் அப்பா (நடிகர் கார்த்திக்) அரசியலுக்கு வந்ததில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்த ‘அடிமைப்பெண்’ படம் புதுப்பொலிவுடன் வெளியாகவிருக்கிறது.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். வி.ராம்மூர்த்தி ஒளிப்பதிவு. கே.சங்கர் இயக்கி உள்ளார்.



    எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும். எம்.ஜி.ஆர், ‘அடிமைப்பெண்’ படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார்.

    அவரது கட்டுமஸ்தான புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம், 52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

    ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.



    சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

    பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.



    வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம். இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே.

    இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.
    நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக இருப்பதாக நடிகர் திலீப் கூறியுள்ளார்.
    ரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பான சம்பவத்தில் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த ஏப்ரல் 12-ந்தேதி பல்சர் சுனில், பிரபல மலையாள நடிகரான திலீபுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தில், ‘உங்களை நான் இதுவரை கைவிடவில்லை. ஆனால் பேசியபடி எனக்கு தரவேண்டிய பணத்தை உடனடியாக தரவேண்டும். மொத்தமாக தரமுடியாவிட்டாலும், 5 தவணைகளாக எனக்கு தந்துவிட வேண்டும். இந்த கடிதத்தை கொண்டுவரும் எனது நண்பர் விஷ்ணுவுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு கிடையாது. காலம்தாழ்த்தாமல் பேசிய தொகையை உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

    எனவே நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



    எனவே, நடிகர் திலீப்பிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் திலீப்பை சிக்கவைக்கும் நோக்குடன் பல்சர் சுனில் செயல்பட்டு வருகிறாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நடிகர் திலீப் முகநூலில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகை பாவனா கடத்தல் விவகாரத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள திரைப்பட உலகில் எனக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ‘ராமலீலா’ என்ற திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்றுவரும் கூட்டு சதியாகவே இதை நான் பார்க்கிறேன்.



    கடத்தல் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தமிழக முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த சிம்கார்டை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை தாக்கி நகை-பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் நடித்துள்ளார். தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

    இந்த படத்தில் நடிகர் கொட்டாச்சியும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அதற்காக திருப்பூரில் இருந்து பஸ் மூலம் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தார். அங்கிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல நினைத்தார்.

    அந்த வேளையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொட்டாச்சியை வழிமறித்து, “சார்... எங்கே போகவேண்டும். ஆட்டோ தயாராக உள்ளது” என்றார். அதற்கு அவர், தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல வேண்டும் என்றும், அந்த பஸ் நிற்கும் இடத்திற்கு போகவேண்டும் எனவும் தெரிவித்தார்.



    சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே அந்த தனியார் பஸ் டிராவல்ஸ் அலுவலகம் இருந்தும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் ஆட்டோவில் நடிகர் கொட்டாச்சியை ஏற்றிக்கொண்டு சற்று தொலைவில் உள்ள நரசோதிப்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். தவறான இடத்திற்கு செல்வதை அறிந்த கொட்டாச்சி, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி தகராறு செய்தார். தனது செல்போனில் உதவிக்காக சேலத்தை சேர்ந்த நடிகர் பெஞ்சமினுக்கு போன் செய்தார். அவர் அயர்ந்து தூங்கியதால் போனை எடுக்கவில்லை.

    அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், கொட்டாச்சியின் செல்போனை பறித்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். வலி தாங்காமல், “என்னை அடிக்காதீங்க... நான் நடிகர் கொட்டாச்சி.. என்னை விட்டுவிடுங்கள்” என அவர் கதறினார்.

    ‘உன்னைப் பார்த்தால் நடிகர்போல தெரியவில்லையே’ எனக்கூறிய மூவரும், கொட்டாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, ரூ.2,500 ரொக்கம், செல்போன், ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். நரசோதிப்பட்டியில் நேற்று அதிகாலை கொட்டாச்சி தனியாக தவித்தபடி நின்றிருந்தார்.



    அப்போது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களிடம், நடந்த விவரத்தை கொட்டாச்சி தெரிவித்தார். பின்னர் நடிகர் பெஞ்சமினை மீண்டும் தொடர்புகொண்டு பேசி அவரது வீட்டிற்கு சென்று தங்கினார்.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று பகலில் இதுதொடர்பாக புகார் செய்தார். போலீசார் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் பஸ் நிலையத்தில் இரவு வேளையில் சவாரிக்கு நின்ற ஆட்டோ டிரைவர்கள் யார், யார்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நடிகர் கொட்டாச்சி கூறுகையில், ‘இன்று (அதாவது நேற்று) எனது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று இந்த சம்பவம் நடந்தது வேதனையாக உள்ளது. இன்றைய தினம் எனது மனைவி எனக்கு கார் பரிசளிக்க நினைத்திருந்தார். அதற்குள் இப்படி நடந்துவிட்டது’ என்றார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.

    அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-

    1. சிந்து பைரவி

    2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')

    3. ருத்ரவீணை.

    இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

    இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.

    ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.

    இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.

    சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.

    தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.

    தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான

    பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.

    தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பிரபல நடிகை ஒருவர் வாய்ப்புக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
    ஹாலிவுட் வரை பிரபலமானவர் அந்த பிரியமான பாலிவுட் நடிகை. இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படத்தில் மிகவும் கவர்ச்சியாக வலம்வந்து ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகையை தேடி வருவதாக பாலிவுட்டில் ஒரு செய்தி அடிபட்டு வருகிறது.

    இந்நிலையில், நடிகை உடலமைப்பில் கவர்ச்சியாக தெரிந்தாலும், தன்னுடைய மூக்கு அவரது கவர்ச்சியை கெடுத்து வருவதாக அவருக்கே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத அந்த நடிகை தற்போது அதன்மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம்.



    இதற்காக சமீபத்தில் தனது மூக்கை சர்ஜரி செய்துகொண்டாராம். ஏற்கெனவே நிறைய நடிகைகள் செய்துகொண்ட விஷயம்தான் என்றாலும், தனக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காகவே அந்த நடிகை இதுபோல் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. 
    என்.டி.ஆரின் பேரன் ஜுனியர் என்.டி.ஆர். தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

    இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சாவித்ரி திரை உலகில் என்.டி.ராமாவாவ் நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில், என்.டி.ராமராவாக அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    என்.டி.ராமராவ் பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆரும் தமிழ் பட உலகில் கால் பதிக்க இருக்கிறார்.
    தான் இன்னமும் இளமையாக இருப்பதன் ரகசியத்தை ஆனந்த்ராஜ் வெளியிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக வலம்வரும் ஆனந்த்ராஜ் இன்னமும் அதே பொலிவுடன் ரொம்பவும் இளமையாக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போதும், சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் என்னை பார்த்து எப்படி இன்னும் இப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். மது, சிகரெட்டை தொட்டதில்லை. அது தான் காரணம். 30 வருடங்களாக நடித்து வருகிறேன். இப்போது இளம் நடிகர்களோடு தொடர்ந்து நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்கள் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.



    ‘மரகதநாணயம்’ படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, டேனியல், ஆனந்த்ராஜ், ராம்தாஸ், அருண்ராஜ் காமராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சரவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரித்திருந்தார்.

    இருளர் சமுதாயத்தை சேர்ந்த 15 மாணவர்கள் கல்லூரியில் படிக்க விஷால் உதவி செய்துள்ளார்.

    மாணவ, மாணவியரின் கல்விக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிக சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சீட் வாங்கி கொடுத்துள்ளார். அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய உதவி அறக்கட்டளையின் மூலம் உதவி செய்கிறார்.


    இந்த ஆண்டு கல்வியில் பின்தங்கிய இருளர் சமூதாயத்தில் இருந்து பிளஸ்-2 வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 15 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மிகச்சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அவர்கள் படிப்புக்கான அனைத்து செலவையும் ஏற்று இருக்கிறார். அந்த மாணவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

    அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் ஆதரிப்போம் என அவரது மகள் சவுந்தர்யா பேட்டி கொடுத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த மாதமும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

    தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவர் இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். தமிழக அரசியல் தொடர்பான புத்தகங்களையும் படித்து வருகிறார்.

    இதை அவரே சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது ஒத்துக் கொண்டார். எனவே ஆகஸ்டு மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய பிறகு அவர் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.


    இந்த நிலையில் ரஜினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக மும்பையில் அவரது மகள் சவுந்தர்யா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    எனது தந்தை (ரஜினி) எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார். அவர் எதைச் செய்தாலும் சரியான நேரத்தில் செய்வார்.

    அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்.

    இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

    ×