search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசோகன்"

    • 2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா .
    • பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

     2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

    அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை.
    • கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விளக்கியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி, 1980யில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். அவரைத் தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன்.

    1996யில் மறைந்த மக்கள் தலைவர் ஐயா அவர்கள் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • குமரி மாவட்டத்திலும் ஒ.பி.எஸ்-இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
    • எடப் பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க.வில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.

    இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களுக்காக போஸ்டர் அடித்து ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் ஒ.பி.எஸ்-இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரையும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாறி மாறி சந்தித்து பேசி வருகின்றனர்.

    மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பது தொடர்பாக 2 தலைவர்களும் தனித்தனியாக ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், இன்று காலை ஒ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

    தற்போதைய நிலைமை குறித்து அவர் கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. எஸ்.ஏ.அசோகன் ஏற்கனவே ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 தலைவர்களையும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×